மாணவிகள் புத்தகங்கள் என்ற நண்பனின் துணையால் தான் உயர்நிலையை எட்ட முடியும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • மாணவிகள் புத்தகங்கள் என்ற நண்பனின் துணையால் தான் உயர்நிலையை எட்ட முடியும். பெண்களுக்கு ஆளுமையும், கம்பீரமும் கல்வியால் தான் கிடைக்கிறது. மாணவிகள் தவறுகள் செய்யாமல், அச்சம், மடம், நாணம் போன்றவற்றை தவிர்த்து உயர்நிலையை எட்டி பிடித்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். இளையான்குடியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அசத்தல் பேச்சு. மாணவிகள் கைதட்டி வரவேற்பு.
    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மேலப் பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி கல்வி துறை சார்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் 129 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். முன்னதாக அவர் பேசும் போது, சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராணிப்பேட்டையில் நடைபெறும் திமுக மகளீர் அணி நிகழ்ச்சியை கட் அடித்து விட்டு இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தெரிவித்தவர். பெண்கள் ஆளுமையுடன் செயல்பட உறுதியாக இருப்பது கல்வி மட்டும் தான் என்றும், பெண்கள் உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கான ஆளுமை, கம்பீரம், கல்வியில் தான் கிடைக்கிறது. புத்தகங்கள் என்ற நமது நண்பர்களின் துணை கொண்டு பெண்கள் கல்வி கற்று ஆளுமை திறன் உள்ள பெண்களாக வளர வேண்டும். மாணவிகள் அச்சம், மடம், நாணம் போன்றவற்றை கைவிட்டு ஆளுமைத் திறன் உள்ள பெண்களாக வளர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பெண்கள் தவறு செய்தால் இந்த உலகம் நம்மை அதிகமாக தூற்றும், ஆதலால் நாம் தவறுக்கு இடம் கொடுக்காமல் கல்வியில் உயர்நிலையை எட்டிப்பிடித்து ஆளுமை நிறைந்த பெண்களாக வளர்ந்த அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமாரின் எழுச்சி பேச்சுக்கு மாணவிகள் உற்சாகமாக கைதட்டி நன்றி தெரிவித்தனர்.

Комментарии •