மருத்துவர் ஜீவா பசுமை விருது - விருதாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களுடனான நேர்காணல்
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- தன்னுடைய வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச் சிந்தனை காந்தியம், மார்க்சியம், மருத்துவம், எழுத்து மற்றும் பொதுச்சேவை சார்ந்த அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்த துறைகளில் பல்வேறு சாத்தியங்களை உண்டாக்கிக் காட்டியவர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள். அவர் உருவாக்கிய 'கூட்டுறவு மருத்துவமனைகள்' என்னும் முன்னெடுப்பானது இந்திய அளவில் முன்னுதாரணமானவை.
காலஞ்சென்ற மருத்துவர் ஜீவா அவர்களுடைய செயல்பாடுகளைத் தொடர்ந்து நிகழ்த்துவதற்கும், அவர் விட்டுச்சென்ற நிறைய கனவுத் திட்டங்களை உரியவாறு செயல்படுத்துவதற்கும் ஏதுவாக, நண்பர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து, 'மருத்துவர் ஜீவா அறக்கட்டளை' என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை நிறுவியிருக்கிறோம். நூல்கள் வெளியிடுதல், சூழலியல் முகாம்களை நடத்துதல், பயிலரங்கம் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தல், எளியவர்களுக்கு சேவையளித்தல் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான பல்வேறு செயல்முயற்சிகள் இவ்வமைப்பு மூலமாக நிகழவுள்ளது.
இச்செயல்திட்டத்தின் இன்னொரு நீட்சியாக, சமூகம் சார்ந்து தங்கள் பங்களிப்புகளைச் செலுத்தி மாற்றத்திற்கான இயக்கவிசையாக செயல்படும் மனிதர்களுக்கு 'மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்' என்னும் பெயரில் விருதுகள் அளிக்கவுள்ளோம். இதன்படி உரிய ஆளுமைகள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு விருதளித்து கெளரவிக்கப்படும். அவ்வகையில், மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள் முன்னெடுப்பின் 2021ம் ஆண்டிற்கான விருதுகளானது பத்திரிகையாளர் சமஸ், இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இளம் சூழலியலாளர் விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது.
டி.எம்.கிருஷ்ணா:
“நான் பிராமணனா… இல்லையானு கேட்டால், ‘இல்லை’னு சொல்லத்தான் மனசு விரும்புது. ஆனா, உண்மையில் ‘நான் அப்படி இருக்கேனா?’னு எனக்குள்ளேயே கேட்டுட்டிருக்கேன். சாதியை மீறிப் போகணும்னு யோசிக்கிறப்ப, அது இன்னும் உக்கிரமா எழுந்து வருமோங்கிற சிந்தனையும் ஓடுது. அதனால, ‘சாதி இருக்கு’னு ஏத்துக்கிட்டு, ஒரு சூழல்ல அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை நானே உருவாக்கிக்கணும்னு நினைக்கிறேன்!”
தற்காலத்திய தமிழிசையின் முற்போக்கு முகமென அறியப்படுகிற இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள் தன்னைப்பற்றிய ஒரு சுயப்பிரகடனமாக எடுத்துரைக்கும் சொற்கள் இவை. சமூகத்தில் நிலவும் அநீதிகளை இசையின் விசையால் அகற்ற முயலும் ஆளுமைகளில் முதன்மையானவர்.
2021ம் ஆண்டிற்கான மருத்துவர் ஜீவா நினைவு ‘பசுமை விருது’ பெரும் பாடகர் மற்றும் இசைக்கலைஞர் திரு. டி.எம்.கிருஷ்ணா அவர்களிடம் எழுத்தாளர் சித்ரா பாலசுப்ரமணியன் அவர்கள் உரையாடும் நேர்காணல் தொகுப்பு இது. சமகால இசைக்கலைஞர்களில் இசை, அரசியல், சூழலியல், சமூகநீதி எனப் பலதரப்பட்ட துறைகளில் தன்னுடைய ஆளுமையை விஸ்தரித்து அந்தந்த துறைகள் சார்ந்த மாற்று உரையாடல்களுக்கான முன்னோடியாக இயங்கிவருகிறார் இவர். உரத்து ஒலிக்கும் இவருடைய குரல் அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அய்யலு குமரனின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், அங்கமுத்து படத்தொகுப்பில், அருள்ராஜின் கூட்டு ஒளிப்பதிவில் இந்நேர்காணல் முழுமைபெற்று வெளியாகிறது. தன்னுடைய இசையாலும் இசைசார்ந்த எழுத்தாலும் இச்சமூகத்தில் சமநீதியை விளைவிக்க விரும்புகிற டி.எம்.கிருஷ்ணா அவர்களின் இந்நேர்காணல் நம் அனைவருக்குமான நற்திறவு.
~
மருத்துவர் ஜீவா அறக்கட்டளை
+91 98652 12020
Great conversation, more than an interview. Mr. Krishna belongs to a very rare tribe of original thinkers with deep compassion. God bless him.
முக்கியமான நேர்காணல். பாதுகாப்பான வாழ்க்கைச் சூழலுக்கு செல்லமாட்டேன் என்ற வார்த்தைகள் எனக்கானது. அவர் கைத்தறி ஆடைகள் அணிவது இன்னும் நெருக்கத்தை தருகிறது. சித்ரா அக்காவுக்கு எனது மாறாத அன்பு. குமரன் அண்ணன் அங்கமுத்து எல்லோர்க்கும் எனது வாழ்த்துக்கள். ஜெயபாரதி அம்மாவுக்கு எனது வணக்கங்கள்.
முற்றிலும் இவ்விருதுக்குத் தகுதியானவர் T M Krishna..
அவர் பணி மேலும் தொடர
சிறக்க இவ்விருது ஊக்கம் அளிக்கும்... சமூக அக்கறை
கொண்ட மகா கலைஞன்
TM Krishna
அந்தந்த தளத்தில் உள்ள சிறந்த மனிதர்களை நேர்காணல் செய்யும்போது எப்படி உரையாடல் அமைய வேண்டும் என்பதும் எளிமையான கேள்விகள் மூலம் பதிலளிப்பவர் இயல்பாக உரையாடும் சூழலை அமைத்து தருவதும் முக்கியமாக இருக்கிறது .அந்த வகையில் சிறப்பான பேட்டி ...உறுதுணையாயிருந்த அனைவருக்கும்
சித்ரா அக்காவிற்கும் நன்றிகள் ...
சிறப்பு
Congratulations 🎉💐
மிகச் சிறந்த நேர்க்காணல். தொடர்க உங்கள் பணி.
முக்கியமான நேர்காணல்
Thanks for sharing .excellent explain .god bless both of you my dears .stay safe and healthy 🙏🙏
TM Krishna is humble gentleman
TM Krishna sir- you are real !!
👏👍💐
I need your book
கலங்கமில்லா அறம் வளர்ப்போம்........... பெருமகிழ்ச்சி....... அனைவருக்கும் நன்றி
Good interview 👍