#SJBerchmans

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • பெர்க்மான்ஸ் தென்னிந்தியாவின், மதுரை மாநகரிலிருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலைவுள்ள "சூசைப்பட்டி" எனும் குக்கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாம் தேதி பிறந்தார். விவசாயிகளான அவரது பெற்றோர் ஓர் பக்தியுள்ள கத்தோலிக்கக் கிறிஸ்தவப் பாரம்பரியம் கொண்டோர். ஐந்து பிள்ளைகளை உடையது அந்தக் குடும்பம். இவரது அத்தையும் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரி.
    இளம் வயதில் தேவாலயப் பாடகர் குழுவில் சேர்ந்து பாடுவதில் அதிக நாட்டமுடையவராக விளங்கியவர், பின்பு அடிப்படை கர்நாடக இசையையும், மேற்கத்திய வாத்தியக் கருவிகளையும் முறையாகக் கற்றுக்கொண்டார். பள்ளி உயர்நிலைக் கல்விக்குப்பின், கத்தோலிக்கக் குருவானவராகப் பணி செய்ய விருப்பம் கொண்ட அவர், பின்பு இளம் குருவானவர் பயிற்சி மடத்தில் சேர்ந்தார். பயிற்சியின் போதே இசை நாட்டத்தை விடாமல் தொடர்ந்து அதிக இசைப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1974 ஆம் ஆண்டு கத்தோலிக்கக் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட அவர், பணித்தளங்களில் தொடர்ந்து பாடுவதால் மக்களிடம் நன்கு அறியப்பட்டார்.
    மதுரையில் மாணவராக பயிலும் காலத்தில், ஆலய பாடகர் குழுவில் சேர ஆர்வத்துடன் முயற்சித்தபோது, பாடகர் குழு தலைவர் இவரது குரலை ஏளனம் செய்து புறக்கணித்தார்[2]. காலங்கள்` உருண்டோடியபின், தமிழ் கிறிஸ்தவ உலகில் பலரால் அறியப்படும் புகழ் பெற்ற ஒரு பாடகரானது இவருக்கே மாபெரும் வியப்பு.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 212