ஸ்ரீ. உ. வே. வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி!! ஆச்சார்ய அபிமானத்தில் அண்ணன்!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 13

  • @manik1179
    @manik1179 2 дня назад

    அடியேன் 🌹🌹🌹

  • @sankaranarayansankarnayana526
    @sankaranarayansankarnayana526 3 дня назад

    🌹🙏🏼👌🏼🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹🙏🏼🌹

  • @shanthamani9772
    @shanthamani9772 5 дней назад

    Swami thiruvadikku koti pranamangals

  • @shanthamani9772
    @shanthamani9772 5 дней назад

    Volume very low

  • @mathandscience3591
    @mathandscience3591 5 дней назад

    Adiyen 🙏

  • @krishnar3245
    @krishnar3245 5 дней назад

    Annan thiruvadigale saranam.

  • @srinivasana.v7432
    @srinivasana.v7432 6 дней назад

    அண்ணன்திருவடிகளேசரணம்

  • @rukminitmr911
    @rukminitmr911 5 дней назад

    🙏

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 дней назад

    நிறைவுப் பகுதி -
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ஆச்சார்யன் ஏற்றத்தை அருமையாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உரைத்ததிலிருந்து சில -
    அந்திம உபாயமாய் 5வது உபாயமான ஆச்சார்யன் திருவடிகளை பற்றினால் அந்த ஸ்வாமி ராமானுஜர் மோக்க்ஷைக ஹேதுவாய் இருப்பார். இதுவே பஞ்சமோ உபாயம் நிஷ்டை என அறுதியிட்டார். பெருமான் சஸ்திரத்தை கொண்டு திருத்துவார் என்றால் ஆச்சாரியன் சாஸ்திரத்தை கொண்டு ஸீத்த ஸத்வயமாய் திருத்துவார். வேதார்த்தம் ஆச்சரியன் அபிமானமே உத்தாரகம். அதிலும் நாம் ஆச்சர்யனை அபிமானிப்பதை விட ஆச்சார்யன் நம்மை அபிமானிப்பதே சிறந்தது . ஆக நம் ஆச்சரியன் ராமானுஜரிடத்தில் சேர்க்க ராமானுஜர் நம்மை பகவானிடத்தில் சேர்ப்பிப்பார் . நாம் குருவை அபிமானித்தாலும் நம்மை குரு அபிமானித்தாலும் சித்தி இருவருக்கும் கிட்டும் என்றாலும் முதலில் குரு வால் முதலில் அபிமானித்தவருக்கே மோக்ஷம் கிட்டும். ஏனெனில் குரு நம்மை பற்றும் போது அது பரகத ஸ்வீகாரம். நாம் அவரை அபிமானித்தால் அது ஸ்வகத ஸ்வீகாரம். ஸ்வகத ஸ்வீகாரத்தை விட பரகத ஸ்வீகாரத்திற்கு ஏற்றம். அங்கனம் நோக்கினால் ராமானுசரின் விசேஷ அபிமானம் பெற்றவர் தாஸரதி
    என்ற முதலி ஆண்டான் தான். யார் எல்லாம் ராமானுஜரை பற்ற வேண்டுமோ அவர்கள் முதலில் முதலி ஆண்டான் மூலமாகவே ராமானுஜரை பற்றுகிறார்கள். இங்கனம் ஆச்சரியனை பற்றியவர்களுக்கு பகவத் அனுக்ரஹம் கிட்டுவது சுலபம். ஆதலால் முதலி ஆண்டானுக்கு பகவத் அனுக்ரஹம் கிட்டிடற்று ஆச்சர்ய அங்கீகாரத்திற்கு சான்றாய் ராமானுஜர் சன்யாஸ ஆசிரமத்தை பற்றும் போதும் முதலி ஆண்டான் தவிர மற்றவர்களை விட்டேன் என்றும் வேற்று மதத்தவர்கள் உடையவரிடத்தில் வராத போது ஊர்க்குளத்தில் முதலி ஆண்டானை தன் திருவடி நனையும்படி நிற்கச் சொல்லி அந்த தீர்த்தத்தைக் கொண்டு வந்தவர்கள் தளிகை பண்ண அதுவே ஸ்ரீபாத தீர்த்தமாயிற்று . அந்த ஸ்ரீபாத தீர்த்த மஹிமையால் அங்கு வந்தவர்களுக்கு ஸ்ரீவைஷ்ணவத்துவம் கிட்டி அனவரும் உடையவர் திருவடிகளை ஆஸ்ரயித்தார்கள் என்றால் முதலி ஆண்டானின் ஸ்ரீபாத தீர்த்த மாஹாத்மியத்தை உடையவர் ஏற்றுக் கொண்டார் என்றாகிறது. ஆக பகவத், பாகவத ஆச்சாரிய அங்கீகாரங்கள் மூன்றும் கிட்டியது. ராமானுசர் திருக்கோஷ்டியூருக்கு 18 முறை சென்று திருமந்திரார்த்ததை பெற்றதின் நினைவாய் இன்றளவும் சேர்த்தி திருமஞ்சனம் 18 முறை செய்கிறார்கள் கந்தாடை ஆண்டான் முதலி ஆண்டான் திருக்குமாரராக அவதரித்தார்.. கந்தாடை ஆண்டான் தான் ஸ்ரீ பெரும்புதூரில் உடையவர் திருமேனியை குரு புஷ்யமன்று விக்ரஹ ப்ரதிஷ்டை பண்ணினார். அதுவே ராமானுஜர் - தான் உகந்த திருமேனியாய் கொண்டாடினார். அர்ச்சை ராமானுஜர் பிரதிஷ்டை ஆனதும் பூசத்தில் தான். ஆக திருவாதிரை (ராமானுசர் ) முதலி ஆண்டான் புனர்பூசம் குரு புஷ்யம் என போற்றப்படும் பூசம் இந்த3 நக்ஷத்திரங்களுக்கு மே உள்ள தனிச்சிறப்பு. கூரத்தாழ்வான் மாளிகைக்கு அருகிலேயே ஸ்ரீரங்கம் கீழ் சித்திர வீதியில் முதலி ஆண்டான் திருமாளிகையை ஏற்பாடு செய்தார். மாமுனிகள் திருமாளிகை பக்கத்தில் வரதநாராயண கு ருவிற்கு திருமாளிகை ஏற்பாடு பண்ணினர். பல்லவராயன் மடத்தில் மாமுனிகளுக்கு காய்கறி சமர்ப்பித்ததால் அர்ச்சகர் அதற்கு தேவரீருக்கு காய்கறி கொடுத்த பாக்கியம் பெருமாளே அனுக்ரஹித்தார் என்றார். சிங்கரேயர் விருத்தாந்ததை ரஸமாய் அனுபவித்தார்.
    தென்னரங்கு செல்வம் முற்றும் திருத்தி வைத்தார் வாழியே. அந்த ஆச்சார்ய அபிமானத்தையே நாமும் மண்டி இருக்க வேண்டும் என்று நிறைவாக கூறி இப்பகுதியை அத்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @mailmemadhu
    @mailmemadhu 6 дней назад

    🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🙏🏻

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 дней назад

    பகுதி - ௨
    கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் ஜகதாச்சாரியார் ப்ரபாவத்தை
    அத்புதமாய் வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் தொடர்ந்ததிலிருந்து -
    என்னதான் கூடவே இருந்து கூரத்தாழ்வான் ராமானுஜருக்கு கைங்கரியம் புரிந்திருந்தாலும் முதலி ஆண்டான் போல் உடையவருக்கு உறவுக்காரர் என்ற முறையில் தேஹ சம்பந்தம் தனக்கு கிட்டவில்லையே என்ற குறை இருந்தது. முதலி ஆண்டான் வம்சமான வாதூல குலத்தில் அவதரித்தவர் தான் இந்த வரதநாராயணன் என்ற பெயருடன் அண்ணன் ஸ்வாமி. என்ற புனைப்பெயருடன் கார்த்திகை பூராடத்தில் அவதரித்தவர். தாஸரதிக்கு கைங்கரியம் புரிந்து பகவத் அனுக்ரஹம், பாகவத அனுக்ரஹகம் ஆச்சர்ய அனுக்ரஹம் நிரம்ப பெற்றவர் இவர். ஆச்சர்ய நிஷ்டையில் இருந்தவர் இந்த ஸ்வாமிகள் தனியனை சமர்ப்பித்து அதன் அர்த்தத்தையும் அருமையாய் அர்த்தித்தார். ராமானுஜரின் புனர் அவதாரமாய் ஓராண் வழி சம்பிரதாயத்தில் யதீந்திர ப்ரணவரான ஸ்வாமி மணவாள மாமுனிகள் 1370 - 71 ல் ஐப்பசி திருமூலத்தில் அவதரித்தார். இந்த மாமுனிகள் திருவடிகளை வரதநாராயணன் பற்றினார். குரு என்ற சொல்லும் ஆச்சார்யன் என்ற சொல்லும் ஸ்வாமி ராமானுஜரிடத்தில் பூரணமாய் நிறைவு பெருகிறது. பரதன் ராமனின் பாதுகைகளை கொண்டு நாட்டை ஆண்டு ஒரு மடங்கை 9 மடங்காய் பெருக்கியது போல் ஸ்வாமியும் ஸ்ரீரங்க ஸ்ரீயை வளர்த்து கொடுத்தார். ஸ்வாமி தான் ஆசார சீலராய் ஆசாரத்தை கடைபிடிப்பது போல் தன் சிஷ்யர்களையும் ஆசாரத்தில் நிலை நிறுத்தினார். பக்தியில் அசக்தனுக்கு ப்ரபத்தி. ப்ரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சாரியன் திருவடிகளே உத்தாரகம். பக்தியை மார்க்கமாக கொண்டு மோக்ஷம் போவதில் பல இன்னல்கள் உள்ளன. அதனால் தான் கண்ணன் மாம் ஏகம் சரணம் வ்ரஜ என் திருவடிகளை பற்று. உன்னை எல்லா பாபங்களியின்றும் விடுவிக்கிறேன் கவலைப்படாதே என்றார். பந்தம் மோக்ஷம் இரண்டிற்கும் பகவான் காரணமாக இருக்கும் போது ஆச்சாரியனான ராமானுஜர் மோக்ஷம் ஒன்றுக்கே ஹேதுவாய் இருப்பார். தான் அனைத்தும் அனுஷ்டித்து தன்னை பற்றியவர்களையும் அனுஷ்டிக்க வைக்கிறார் ஆச்சாரியன். ஆக ஆச்சார்யன் திருவடிகளே உபாயம் என்று கூறி இப்பகுதியை அற்புதமாய் நிறைவு செய்தார். ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 дней назад

    Swamigalukku adiyenin anantha Kodi namaskaram