Это видео недоступно.
Сожалеем об этом.

Syria வீட்டில் ஒரு நாள் | They Highly Surprised Me 😱 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 апр 2022
  • Follow My New Facebook Page for Latest Updates
    / ulagamsutrumtamizhanoffl
    ********************
    Here comes vlog 4 of my Syria series! Due to a technical glitch, I have skipped episode 3.
    The Battle of Aleppo (2012-2016) occurred in the city during the Syrian Civil War, which affected many places and people. The scars of the mass destruction still haunt the place.
    Watch my latest exploration of Syrian history, culture, and habitation of people in this travel vlog.
    #Syria #Helppoorpeople #TamilTrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / ulagamsutrumtamizhanoffl
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

Комментарии • 2,2 тыс.

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 года назад +108

    Follow My New Facebook Page for Latest Updates
    facebook.com/UlagamSutrumTamizhanoffl

  • @jeyamurugansingaravelan7432
    @jeyamurugansingaravelan7432 2 года назад +931

    சிரியா மக்கள் உங்கள் மீது அன்பைப் பொழிகிறார்கள் குறிப்பாக அந்தக் குழந்தை உங்களை எவ்வளவு பாசத்துடன் பார்க்கிறது😊😊😊😊

  • @rajeshmp7442
    @rajeshmp7442 2 года назад +443

    உங்களை கண்ட அந்த சிறுவர்களின் ஆனந்தம், சொல்லில் அடங்காதவை, மிகவும் அன்பான மனிதர்கள், எவரோ ஒருவர் சுயநலத்திற்காக செய்யும் தவறுகள், எத்தனை அப்பாவிகளை பாதிக்கிறது...யுத்தம் இல்லா உலகம் செய்வோம்...அன்பால் அதை சாத்தியமாக்கும்....

    • @Rizanviews
      @Rizanviews 2 года назад +3

      ❤️

    • @rajanimangales2625
      @rajanimangales2625 2 года назад +15

      சிறு பண உதவி என்றாலும்கூட அவர்களுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி நமக்கு கோடி ரூபாய் கொடுத்த திருப்தி. வாழ்த்துக்கள் ......🙏👌👌👌

    • @vincentpaul9691
      @vincentpaul9691 2 года назад +4

      Really I love it bro

    • @itz__me__prxveen
      @itz__me__prxveen 2 года назад +2

      true💯💯💯

    • @Mohamed-dh3gk
      @Mohamed-dh3gk 2 года назад

      @@Rizanviews p

  • @mohamedashik3074
    @mohamedashik3074 2 года назад +145

    இவர்கள் விருந்தாளியை முகம் சுழிக்காமல் கவனிக்கும் முறையை பார்க்கும்போது மனம் உருகுகிறது ♥️..

  • @rajalavanya3813
    @rajalavanya3813 2 года назад +89

    தமிழன் என்றைக்குமே எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களுக்கு உதவியாய் இருப்பான்..தமிழனின் பெருமை உங்களால் உயரட்டும் சகோதரா.....வாழ்த்துக்கள்...💐

    • @jovialboy2020
      @jovialboy2020 Год назад

      அன்னை தெரேசா,சேகுவேரா, பென்னி குவிக் இவர்களெல்லாம் தமிழர்கள் இல்லை பிறருக்கு ஏன் உலகுக்கே உதவ வில்லையா...
      உலரவெண்டாம்

    • @ajaym9626
      @ajaym9626 8 месяцев назад

      Not even Tamilan brother....

  • @hariathma4836
    @hariathma4836 2 года назад +738

    வளர்ந்த நாடுகளுக்கு சென்று அங்கு உள்ள சௌகரியங்களை அனுபவிப்பதை விட இது போன்ற நாடுகளுக்கு சென்று மக்களின் அன்றாட வாழ்க்கையை பற்றி தெரிந்துக் கொள்வது மிகவும் அற்புதம் ❤️ keep it up bro 👍

    • @armohamedilhaam
      @armohamedilhaam 2 года назад +3

      👍👍

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 2 года назад +8

      That's true.... Syria 🇸🇾.... is one of the country with rich culture earlier. Hope things will back to normal.....

    • @hariathma4836
      @hariathma4836 2 года назад +3

      @@rameshchinnasamy9135 absolutely bro 🎉

    • @isaig892
      @isaig892 2 года назад +1

      Yes correct son 😭💔🤲

    • @hariathma4836
      @hariathma4836 2 года назад

      @@isaig892 🤝

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +462

    கோடி ரூபாய் இருந்தாலும் சிலருக்கு மனம் இருப்பதில்லை, it's not a just vlog it's a emotional truth of pain.

  • @aprakash8705
    @aprakash8705 2 года назад +6

    அந்த பையனின் வெகுளியனா சிரிப்பில் தெரிகிறது..அவர்களது வாழ்க்கை முறை..♥️ i love this episode

  • @masxswasdfs1443
    @masxswasdfs1443 Год назад +6

    My Dad worked in Syria for more than 30 years - He always gets emotional watching the WAR on syria .
    Couple of things he says about Syria
    1) U can find orange tree everywhere in the roadside with fruits hanging
    2) House does not have doors -
    3) You can knock anyones door for food and tea
    4) They dont hide when they breastfeed babies
    5) They are the most welcoming people - they highly respect INDIANS
    6) You can practice your religion freely - no one will bother you - he used to have vibuthi in the company
    7) Humble and loving people !

  • @samkamalesh5125
    @samkamalesh5125 2 года назад +171

    நீங்கள் இவ்வளவு காசு கொடுத்து உதவுவீர்கள் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.. ஆனால் அவர்களும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் புன்னகை நிறைந்த முகத்தோடு உபசரித்தார்கள்.. முக்கியமாக உங்களை அந்த வண்டியில் கூட்டிச் சென்ற அந்தப் பையன் காட்டிய அன்பும் உபசரிப்பும் 👍

    • @nagarajanm4898
      @nagarajanm4898 2 года назад +5

      I also made me cry

    • @sudharsonveeran3799
      @sudharsonveeran3799 2 года назад

      அன்பான மக்கள்...புன்னகை முகங்கள்...எதோ ஒரு சொந்தம் கிடைத்த ஒரு சந்தோசம்...அவர்கள் முகத்தில்...😓💕😓

  • @vmsweety
    @vmsweety 2 года назад +231

    நண்பரே பெட்ரோல் போடுறவன்கிட்ட english தெரியல்னு சொன்னதும் தமிழ் தெரியுமான்னு கேட்டிங்க பாருங்க அது செம 👌👌👌😄😄😄

    • @sibiraj1353
      @sibiraj1353 Год назад

      2:43 😁😁😁😁😁😅😅😅

  • @vinrajeditz7091
    @vinrajeditz7091 2 года назад +31

    I love Indian travellers
    Where ever they go they spread humanity ♥️

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w 2 года назад +25

    ஒரு மாத லாக்டவுனில் நாம் சிதைந்து விட்டோம்...பத்து வருடத்துக்கு மேல் அந்த நாடு லாக்டவுனில் உள்ளது.... பாருங்கள் மகிழ்ச்சியை முகத்தில்.....❤️❤️❤️

  • @nishahameed4269
    @nishahameed4269 2 года назад +138

    மாஷா அல்லாஹ் அந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவியதற்கு .புவணி உனக்கு நல்ல மனசு வாழ்த்துக்கள்

  • @abumuneer216
    @abumuneer216 2 года назад +267

    இந்த ரமலான் மாதத்தில் இந்த வீடியோ இனம் தெரியாத நெகிழ்சியை எனக்கு ஏற்படுத்தியது........ வாழ்க உங்கள் ஈகை குணம் மற்றும் நல்ல உள்ளம்..... யாதும் ஊரே யாவரும் கேளிர்...... நன்றி புவன்.

  • @sha_squad
    @sha_squad 2 года назад +41

    I'm not sure whether I watched your all videos but this Syria series is all worth to watch every 15 mins of video is giving so many emotions to our tamil people
    Alhamdulillah happy for you brother ❤️

  • @sheikallaudeen664
    @sheikallaudeen664 2 года назад +22

    Dear friend, today I cried my tears wet my faces after seeing the smiles and faces of the kids I thank u for ur wonderful video , keep it up.

  • @murugan6956257
    @murugan6956257 2 года назад +619

    Irfan view னு ஒருத்தரும் நாடு நாடா திங்கிறதுக்குனே 4 பேர கூட்டிட்டு சுத்துது..நீங்க வேர லெவல் ப்ரோ

  • @muniasamyexgovernmentplead9304
    @muniasamyexgovernmentplead9304 2 года назад +175

    தமிழன் எந்த ஊர்லையும் பாவபட்டவங்கல பாத்த உதவி செய்வான் என்று நிறுபித்துவிட்டாய் நண்பா(யாதும் ஊரே யாவரும் கேளிர்)

  • @ragus5441
    @ragus5441 2 месяца назад +2

    உங்கள் பயணங்களில் சிறந்த பயணம் இது என்று சொல்வேன்.
    பிறர் சிரிப்பில் இன்பம் காண வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டு இந்த காணொளி.

  • @Prathiksha2022
    @Prathiksha2022 2 года назад +1

    நீங்க தான் உண்மையான தலைவன்
    மக்களால் கிடைத்த பணத்தை மக்களுக்கு உதவி பண்றீங்க
    நீங்க உண்மையான மனிதன் தலைவா வாழ்த்துக்கள்
    உங்கள் பயணத்தில் நானும்
    உங்கள் யூடியூப் சேனல் மூலமா நான் வருகிறேன்
    by திருச்செந்தூர் முருகன்

  • @keerthivasanbabu2009
    @keerthivasanbabu2009 2 года назад +278

    கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.... அவர்களின் மகிழ்ச்சி உங்களுடைய வளர்ச்சி

  • @lokakavi7011
    @lokakavi7011 2 года назад +250

    இந்த காணொளி மிகவும் மனசு நிம்மதியா இருந்தது எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏🙏🙏🙏நன்றி 👌👍👌🙏

  • @msubramaniam8
    @msubramaniam8 2 года назад +8

    அருமையான கனிவான மக்கள்...இறைவன் இந்த மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருள்வானாக...வாழ்த்துகள் புவனி தம்பி..உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லாவே நடக்கும்

  • @suganmahi5091
    @suganmahi5091 2 года назад +2

    சிரியா மக்கள் சிரிப்பு வலிகளை கடந்தது...அமைதியான வாழ்க்கையை கொடு இறைவா அம்மக்களுக்கு.....

  • @Harikaran4192
    @Harikaran4192 2 года назад +92

    புதுசா நீங்க போனதும் அவங்களுக்கு சந்தோஷமா இருக்கு போல பார்க்கும் போது பாவமா இருக்கு 🥺🥺

  • @karthickm48
    @karthickm48 2 года назад +124

    ஒரு காலத்தில் எப்படி இருந்த நாட்டை என்னடா பண்ணி வச்சிருக்க...Daiii America🤦😬

    • @kiy3165
      @kiy3165 2 года назад

      Foolish...
      USA ka weapons ...
      Ipo isis kita eruntha epai erukum ...atha motha yosi...
      Nee vara uiroda eruka matta

  • @sandhya7938
    @sandhya7938 Год назад +2

    அந்த ஒரு பையன் நல்ல பையன் யாரு எவருன்னு தெரியாது அன்பு காட்டுகிறார்

  • @balamadhu2011
    @balamadhu2011 2 года назад +6

    வாழ்ந்தா இப்படிதான் வாழனும் என்ற அளவில் உள்ளது உங்கள் பயணம்... உலகம் முழுவதும் உங்களுக்கான உறவுகள் இருப்பார்கள்.. அமெரிக்கா செல்ல முடியாது என்று சொன்னீர்கள்.. எத்தனை அமெரிக்கா இருந்தாலும் இதுபோன்ற மனநிறைவு கிடைக்காது.. வாழ்த்துகள்..

  • @iswarya4516
    @iswarya4516 2 года назад +70

    இந்த மாதிரி அப்பாவி மக்களையா போர்னு ஒன்னை நடத்தி கஷ்டப்படுத்துறாங்கனு இந்த காணொளி பாக்கும்போதே கண்ணீர் வருது. 10:42 அந்த பையனோட சிரிப்பு அவ்ளோ குழந்தைத்தனமா அழகா இருக்கு.அவங்க நல்லா இருக்கனும்.

  • @rkandasamy1553
    @rkandasamy1553 2 года назад +25

    பேசும் மொழி புரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் காட்டும் அன்பு புரிகிறது. நன்றி புவனி.

  • @CarolKishen
    @CarolKishen Год назад +1

    Kids are so happy seeing the foreigner....pure village people.
    Innocent...i liked their natural..

  • @shaikabdulkader123
    @shaikabdulkader123 2 года назад +2

    மற்றவர்களின் துன்பத்தில் பங்கெடுத்து அவர்களின் துயர் துடைப்பது மிகுந்த அறம், இறைவனின் அருள் என்றென்றும் கிடைக்கட்டும் 🤲🏽

  • @AGATHITODAYSAMAYAL9500
    @AGATHITODAYSAMAYAL9500 2 года назад +213

    இந்த துயரத்திலும் வந்தவர்களை அன்போடு அரவணைக்கும் நல்ல உள்ளங்கள்😘

  • @respecteveryone2813
    @respecteveryone2813 2 года назад +121

    தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும். 💯 👍👍

  • @anbu8519
    @anbu8519 2 года назад +1

    அன்பே சிவம்- படத்தில கமலஹாசன் டயலாக் தா நியாபகம் வருகிறது.. யாருனே தெரியாதவனுக்காக கூட நீ கண் கலங்குறியே.. நீ தா நண்பா கடவுள்.. Uvr heart is beautiful.. 👍🏼👍🏼👍🏼🌹

  • @habibgrapix7702
    @habibgrapix7702 2 года назад +2

    கடைசியில் நீங்கள் சொல்லும் வார்த்தைகள் என் மனதை தொடுகிறது.
    மத இன வேறுபாடு இன்றி நீங்கள் பழகக்கூடியவராக இருப்பதனாலேயே யாரும் அடைய முடியாத அனுபவங்களை உங்களால் பெற முடிகிறது. உங்கள் பயணங்கள் தடையின்றி தொடர வாழ்த்துக்கள் புவனி. ❤

  • @manoharij3408
    @manoharij3408 2 года назад +135

    தம்பி உன்ன வண்டில உக்காரவச்சி கேமராவை பார்த்து, புரியாத மொழியில் சிரிப்புதான் சிறந்த மொழி, அவன் மூஞ்ச பாரு, ஏதோ உறவினரை அழச்சிட்டு போராமாதிரி போறான், வாழ்த்துக்கள் தம்பு,

    • @amanullahsulthan9065
      @amanullahsulthan9065 2 года назад

      Aduthavar kuraya parkkadhir

    • @bakkarmohamedali
      @bakkarmohamedali 2 года назад +6

      @@amanullahsulthan9065 அவர் குறை சொல்லவில்லை அச்சிறுவனின் சந்தோஷத்தை சொல்கிறார் தவறாக புரிந்து கொண்டு ரிப்ளே செய்யாமல் சரியாக படித்துவிட்டு ரிப்ளே செய்யுங்கள் இப்போது குறை உங்களிடம் தான் உள்ளது சகோதரரே.

    • @luxmivelu1839
      @luxmivelu1839 2 года назад

      Romba anbana makkal. Manam negilnthathu. Kangalil kanneer

  • @yasmineshabir2599
    @yasmineshabir2599 2 года назад +458

    நிஜமா இதெல்லாம் ஒரு blessed வீடியோ 🥰🥰🥰🥰செம்ம... Lifela pakamudiyadha video

    • @yasmineshabir2599
      @yasmineshabir2599 2 года назад +1

      You deserve this blessed moments.... Usual ah africa tribes la knjm procedures oda nari per poi pakran such a valuble things dha but arab pupils ah katradhungradhu knjm idhuvara yarukum kedakadha visyam such an amazing thing like Uzbekistan... Unaku amajiruku bhuvi

    • @hakims84
      @hakims84 2 года назад

      That's Islam...but people around world and media, shows us in negative manner....politics..
      Finally all are human's made if blood and flessh...🌹🌹🌹🌹❤️❤️❤️👍👍👍👍👍

  • @rengarkamalalkannan
    @rengarkamalalkannan 2 года назад +1

    அந்த குழந்தைகளிடம் பணம் இல்லையே என்ற குறை மட்டுமே தவிர எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் இதை காண்பித்த உங்களுக்கு நன்றி

  • @anandr7591
    @anandr7591 2 года назад +5

    Brother உங்களை நான் நடிகர்களோடு ஒப்பிடமாட்டேன், ஆனால் நீங்கள் அவர்களுக்கும் மேல் 👍👏👏👏 தொடர்ந்து எங்கள் ஆதரவு உண்டு 👍

  • @yasmaking
    @yasmaking 2 года назад +83

    எத்தனையோ RUclipsr க்கு மத்தியில் நீங்கள் தனித்தன்மையாக உள்ளீர்கள்

  • @ashok4320
    @ashok4320 2 года назад +118

    புவனி இந்த ரமலான் நேரத்துல நீங்க செய்த உதவி அவர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏❤️

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    உலகத்தில் மக்கள் எப்படியெல்லாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்..... உங்க கைட் சூப்பர் HELP..... 🤝🤝🤝

  • @nagarajanm4898
    @nagarajanm4898 2 года назад +2

    அந்த சிறுவர்களின் கள்ளமில்லா சிரிப்பும் ஆர்வமும் அவர்கள்களை பிரியும் தருணம் வீடியோ பார்த்த எனக்கு கண்ணீர் வந்துவிட்டது

  • @m2nagc
    @m2nagc 2 года назад +260

    நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்கள்.. வாழ்க வளமுடன் 👍

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +73

    நல்ல நாடு சிலரின் சுய லாபத்திற்காக சிதறிவிட்டது..😌😌

    • @cnbose7304
      @cnbose7304 2 года назад +3

      True... Now it's same position in srilanka 😔

    • @carworld1089
      @carworld1089 2 года назад

      USA destroyed Syria

  • @suganyamuthu9560
    @suganyamuthu9560 2 года назад +7

    I love the people in syria very much. they are very humble and lovable. They always welcome people with smiling face😊

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 года назад

    சிரியா மக்கள் பாசக்கார பசங்க இருக்காங்க நீங்கள் செய்த உதவிக்கு நன்றி ப்ரோ🙏🙏🙏❤❤❤👌👌👌👌👌

  • @vmsweety
    @vmsweety 2 года назад +157

    300 எங்க 6090 எங்க!!!!!!!!!! நண்பரே உங்களை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது!!! வாழ்த்துக்கள் 💐💐💐நான் எதிர்பார்த்தேன் நன்றாக நடந்தது மிக்க மகிழ்ச்சி 👍👍👍வாரி வழங்கும் தமிழன் வாழ்க 👍👍👍💐

  • @KingofFireGamer
    @KingofFireGamer 2 года назад +251

    I watched many of your videos but I don't know why I like this video a lot.. The smile of that boy is telling lot of stories..

  • @user-co5nk8co5i
    @user-co5nk8co5i 2 года назад +2

    அருமையான மக்கள்...அந்த குழந்தைங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாம காட்டுன அன்பும் பாசமும் அளப்பெரியது........ஐய்யோ அந்த பாசத்தோட கண்களை மறக்கவே முடியல........உங்களோட கணிவான சொற்கள் உதவும் தன்மை அருமையான வளர்ப்பு ......சிரியா மக்களை அந்த எல்லாம் வல்ல ஈசன் காப்பாற்றுவராக💓💓💓💓💓💓💓🙏🏻🙏🏻🙏🏻அன்பே சிவம்🙏🏻 தமிழ் போல் வாழ்க புவன்💓

  • @syedahmed50
    @syedahmed50 2 года назад +2

    இவர்களுக்காக அழுவதை 😭 தவிர வேறு என்ன செய்ய முடியும் இறைவன் தான் இந்த மக்கள் மிது அருள் புரிய வேண்டும்

  • @Deera89
    @Deera89 2 года назад +68

    விவரிக்க முடியாத சந்தோசத்தை கொடுத்து விட்டீர்கள் அவர்களுக்கு Tamil Trekker.... நீங்க மேன்மேலும் வளர்க வாழ்க....

  • @nagapandianpradesh7913
    @nagapandianpradesh7913 2 года назад +171

    அண்ணா எந்த ஒரு எதிர்பாப்பும் இல்லாம நீங்க பண்ணுற இந்த உதவி ரொம்ப பெருமையை இருக்கு கொஞ்ச நேரம் இருந்தாலும் உங்கனால அவங்களுக்கு கிடைச்ச அந்த அன்பு, சிரிப்பு சூப்பர் அண்ணா, realy proud of you anna hats off🔥

  • @d.p.d.prasadprasad8966
    @d.p.d.prasadprasad8966 2 года назад +11

    Sir really I got emotional when I saw this vlog. You are great. Being a new person you have mingled with them so lovingly. I EXPRESS my heartful of gratitude. I never thought that syrians would so loving people. How they.have suffered such a big WAR and.survived. thankyou Mr. Bhuvani.

  • @Sathishkumar-bh3bo
    @Sathishkumar-bh3bo 2 года назад

    இதுபோல கள்ளம் கபடுமற்ற மனிதர்களுடன் பழகுவதற்க்காகவாது, உலகத்த சுத்திப்பாக்க ஆசை.... ❤️
    யாதும் ஊரே யாவரும் கேளிர்.. ❤️❤️❤️

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 2 года назад +84

    நீங்கள் அவர்கள் வீட்டிற்கு சென்றது அவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சி..

  • @sarathim8143
    @sarathim8143 2 года назад +106

    புதிய இடங்களைப் பார்க்கும் போது இருந்த மகிழ்ச்சியை விட, அந்த சிறார்களின் புன்னகை அதிக மகிழ்ச்சியை தருகிறது. நன்றி சகோ..

  • @manisharun1861
    @manisharun1861 2 года назад +1

    நீங்கள் பதிவிட்ட வீடியோவில் இந்த வீடியோ என் மனதை மிகவும் கவர்ந்த வீடியோ கடைசியில் நீங்க உதவியது மிகவும் எனக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது சூப்பர் புவன்

  • @athariqmawahib8715
    @athariqmawahib8715 2 года назад +2

    இந்த மனிதர்களின் அழகான வாழ்க்கையை மேலையத்தேய நாடுகள் சூரையாடுவதை நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது

  • @arjun7519
    @arjun7519 2 года назад +112

    சிறப்பு நண்பா..கண்டம் விட்டு கண்டம் சென்றாலும் தமிழனின் கொடைக்குணம் என்றுமே மாறாது என்பதற்கு தாங்கள் என்றுமே ஒரு சிறந்த உதாரணம்..

  • @vmsweety
    @vmsweety 2 года назад +108

    அந்த சிறுவர்கள் உங்களை பார்த்ததும் அவ்ளோ உற்சாகமாக இருந்தார்கள் they are very very happy!!! So thank you so much buvani bro... அந்த சிறுவர்கள் கள்ளமில்லா தவர்களாக இருப்பதை பார்த்தால் சந்தோசமாக உள்ளது... அந்த பூமியில் போர் என்று நினைத்தால் வருத்தமாக உள்ளது...

  • @sureshmurugan9048
    @sureshmurugan9048 Год назад

    அருமை தம்பி என் கூட சிரியா நாட்டு மக்கள் குவைத்தில் வேலை செய்யும் மிகவும் அன்பாக உள்ளவர்கள் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் தம்பி

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 Год назад

    துணிச்சல் ஈகை குணம் புரிதல். உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் தமிழனின் புகழ் பரவட்டும். வாழ்த்துக்கள்.

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 2 года назад +31

    300 ரூபாய் கொடுக்க சொன்ன இடத்தில் 20 மடங்கு அதிகமாக கொடுத்த பெரிய உள்ளத்திற்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் புவனி. அங்கே விற்கும் எரிபொருளின் விலைக்கும் இங்கும் சிறிது தான் குறைவாக உள்ளது. வெகு விரைவில் அங்குபோல இங்கும் மாறும் என்ற ஐயமும் உள்ளது. மிக்க நன்றி.

  • @rajanimangales2625
    @rajanimangales2625 2 года назад +68

    சிறு பண உதவி என்றாலும்கூட அவர்களுடைய முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, நமக்கு கோடி ரூபாய் கொடுத்த திருப்தி. வாழ்த்துக்கள்.🙏🤝👌👌👌

  • @asharifmd88
    @asharifmd88 2 года назад +18

    Can’t thank you enough Buvani! You showcase the world at a different angle. It is hard to see the lives of people in Syria however the smile on their face spreads positivity

  • @Kuw-vlog
    @Kuw-vlog Год назад +1

    நண்பா உன்னுடைய அனைத்து வீடியோவையும் நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் இந்த வீடீயோவை இப்போ தான் பார்தேன் உன்னுடைய இந்த செயல்லால் இறைவன் உணக்கு நற்கூலி தருவான் ❤

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +34

    அறிமுகம் இல்லையென்றாலும் அன்புடன் பழகும் சிரியா கிராம மக்கள் நலமுடன் வாழ வேண்டும். Two wheeler boy smile super...

  • @hmhenok5818
    @hmhenok5818 2 года назад +72

    புவனி ப்ரோ உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க உங்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்த உங்க அம்மாவிற்கு கோடான கோடி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு காலம் நீடூடி வாழ்க happy journey god bless you

  • @kavithamani668
    @kavithamani668 2 года назад +1

    அவங்களுக்குள்ள எத்தனை துயரம் அதை வெளிக்காட்டாமல் வருபவரை உபசரிப்பது மகிழ்ச்சி அவர்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்

  • @yujinishida8262
    @yujinishida8262 Год назад +1

    அந்த பய்யன் உங்களை எவ்வளவு அழகான முறையில் கவனித்தான் ... அந்த மக்களுடைய innocence பாக்கும் போது என் கண்கள் கலங்கி விட்டது😭😭.. இந்த அற்புதமான அனுபவத்தை கொடுத்ததற்கு மிகவும் நன்றி சகோ 🤍🤍🤍

  • @vmsweety
    @vmsweety 2 года назад +42

    நிறைய கமெண்ட்ஸ் சொல்லனும்போல இருக்கு bro... Lasta review குடுத்தீங்க பாருங்க spr 👍👍👌. Bike ride பண்ண அந்த பையன் ஏதோ புது உலகத்தை பார்த்ததுபோல் துள்ளி குதிக்குறான் 👍 நான் பார்த்ததிலே மிக சந்தோஷப்பட்ட காணொளி இதுவாகத்தான் இருக்கும்... வாழ்த்துக்கள் புவனி bro 👍👍👍

  • @swissthamilfox
    @swissthamilfox 2 года назад +45

    நன்றி சகோ....! எதிர்பார்க்கவேயில்லை ... சரியான ஆட்களுக்கு சரியான நேரத்தில் உதவியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @navilkaya3701
    @navilkaya3701 2 года назад +1

    Antha paiyan oda smile ❤️ vera level

  • @gokulb1052
    @gokulb1052 2 года назад +185

    Kids are so excited and happy to serve the guest ... Very innocent people. .

  • @chandrupavi3379
    @chandrupavi3379 2 года назад +75

    Super bro India la irrunthu Syria la irrukkura people ku help pannuringa really proud to be a Indian salute bro 😍👍👏🙌

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +1

    மக்களின் வாழ்க்கை முறைகள்.... உங்கள் மீது காட்டிய அன்பு .... மனிதாபிமான அடிப்படையில் தங்களால் இயன்ற சிறு உதவி பதிவுகள் மிக சிறப்பு 👌

  • @user-qb2xb2yd4w
    @user-qb2xb2yd4w Год назад +3

    syria is my country thank you for coming🥰

  • @senthilkumar3023
    @senthilkumar3023 2 года назад +72

    1000ம் சூப்பர் மகிழ்ச்சி புவனி இதெல்லாம் இப்போது நடக்கும் என்று தெரிந்து தான் உங்களுக்கு புவனி தரன் என்று பெயர் வைத்து இருக்கின்றனர் உங்கள் பெற்றோர் வாழ்த்துக்கள் புவனி!!!அளவிட முடியாத மகிழ்ச்சி

  • @harivaradharaj4042
    @harivaradharaj4042 2 года назад +146

    Only travellers can make and bring peace to the whole world.

  • @dushandcrewz5139
    @dushandcrewz5139 2 года назад +2

    very innocent and lovely people.. last ah sambavam senji vitinga bro.. really happy.. no need America and all bro.. ithu tha happiness..

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад

    நாடு மொழி மதம் அனைத்தும் கடந்து நாம் அனைவரும் சகோதரர்கள் என்று சொன்னது இந்த காணொளி. மிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள் சகோ.

  • @fnvlog9860
    @fnvlog9860 2 года назад +191

    இது வரை பார்த்த வீடியோவில் மனம் குளிர பார்த்த வீடியோ இதுவாகத்தான் இருக்கும்..
    Love you buvi❤❤❤❤❤❤

  • @esaiyazhini4120
    @esaiyazhini4120 2 года назад +80

    That children are so polite❤️

  • @mohammedabdulkathar4136
    @mohammedabdulkathar4136 2 года назад

    எல்லா மக்களும் நல்லவர்கள் தான்..
    சில அரசியலால், பார்க்கும் விதம் மாறி வெறுப்புணர்வு தான் அதிகரிக்கிறது.
    மனிதன் என்றால் மனம் மட்டுமே.
    இனியாவது திருந்துவோம்.
    மாற்றம் என்னிலிருந்து........

  • @nagarajanramalingam2346
    @nagarajanramalingam2346 2 года назад

    சாதி,இனம்,மதம், மொழி,நாடு எல்லாமே வெளி வேஷம்.மனித நேயம் மட்டுமே உலகம் முழுவதிலும் உள்ள மனித குலத்தை வாழவைக்கும். சிரியா நாட்டில் அன்பான, வெள்ளந்தியான மக்களை நேரில் சென்று பார்த்து பழகிய தாங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலி. தங்களோடு நாங்களும் வீடியோ மூலம் மிக்க ஆனந்தம் அடைந்தோம்.மிக்க நன்றி சகோதரரே. இறைவன் அருள் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

  • @aziz9188
    @aziz9188 2 года назад +59

    எப்போது பார்த்தாலும் குண்டுவெடிப்பு , போர் பதற்றம், உயிர்கள் இழப்பு இப்படி பார்த்துக் கொண்டிருந்த Syria நாடுகளின் மறுபக்கம் ❤️❤️❤️ மிகவும் அமைதியாகவும் அன்பாகவும், இருக்கிறது இதை கெடுக்க இந்த உலக சந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.
    நேரில் சென்று பார்க்க முடியாத Syria நாடுகளை உங்கள் வீடியோ காணொளி மூலம் பார்க்கிறோம் மாஷா அல்லாஹ் ❤️ சாகோ.

  • @jazztrading5185
    @jazztrading5185 2 года назад +14

    உண்மையில் உயர்ந்த உள்ளம் உங்களுக்கு புவனி.
    தமிழனின் ஈகை குணம் இது தான். அதை நிரூபித்து விட்டீர்கள். அடுத்தமுறை தாய்லாந்து வந்தால் கண்டிப்பாக சந்திப்போம்.
    God Bless You with Good wealth and Health
    ❤❤❤
    Hasan from Bangkok

  • @prabhusrinivasan676
    @prabhusrinivasan676 2 года назад +1

    எந்த தேசமாய் இருந்தாலும் மனிதமே சிறந்தது! மனிதம் மொழி, இனம், தேசம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது என்பதை இந்த வீடியோவும், அவர்களுக்கு உதவிய தங்களின் மனிதாபிமானமும் உணரச் செய்கிறது புவனி ப்ரோ!

  • @bakkarmohamedali
    @bakkarmohamedali 2 года назад

    நீங்கள் செய்த உதவிக்கு இறைவன் பல மடங்காக உங்களுக்கு திருப்பி கொடுப்பான்.

  • @creakyvideos5850
    @creakyvideos5850 2 года назад +83

    The children's, their life, their standard of living, their behaviour and their innocence made me cry😭😭😢.... Thanks for showing such a great content of forsaken people's and places. 👍

  • @mr___sarfraaz___2800
    @mr___sarfraaz___2800 2 года назад +46

    American citizens are happy and wealthy but other countries not like that . Tamil treeker great job man 👏. You travel and more and more .....

    • @vijayjoe125
      @vijayjoe125 2 года назад +3

      all americans are not rich brother. Poors are everywhere. we have to move on. Love you from India.

    • @skylar999
      @skylar999 2 года назад

      Arab countries are rich 😂😂

  • @mohankumar6093
    @mohankumar6093 2 месяца назад

    மன நெகிழ்வான பதிவு அந்த வண்டி ஒட்டிய சிறுவன் புன்னகை இன்னும் நெஞ்சில் பதிந்த விட்டது அவர்களுக்கு நீங்கள் உதவி செய்தது மன மகிழ்ச்சியான நிகழ்வு ❤ நன்றி நண்பரே இந்த நிலையில் கொடுமையான நிலையிலும் உபசரிக்கும் நபர்களை பார்த்தது மனமகிழ்ச்சி

  • @ravichandra7873
    @ravichandra7873 2 года назад

    பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று அங்கு தீவிரவாதத்தால் துன்பப்படும் மக்களையும் எங்களுக்கு காண்பித்து அவர்களுக்கும் உதவி செய்துவிட்டு வந்து என்னை கண்கலங்க வைத்து விட்டாய் சகோதரா🙏🙏

  • @jumbodg
    @jumbodg 2 года назад +79

    என்ன ஒரு அன்பு, வரவேற்பு, எதார்த்தம்,,, அந்த மக்கள் மிகவும் பாவம்,, வெளியில் தெரிகின்ற சிரிப்பு ஆனால் மனதில் கவலை.
    சொல்வதற்கு வார்த்தை இல்லை.
    என்னய விட்டால் நானும் அங்கு சென்று அவர்களுடன் சந்தோஷமாக வசிக்கலாம் போல..
    Good and meaningful video bro...
    Keep rocking..👍

  • @mgtv786
    @mgtv786 2 года назад +31

    தர்மம் தலைகாக்கும் சகோ
    நீங்க நல்லா இருப்பீங்க

  • @yasikraja2743
    @yasikraja2743 2 года назад

    Real patriotism is,antha guide ivangaluku ellathaium kudukava ketu, bhuvi ama nu solum pothu, alhamthulillah! Nu solli oru nimisham namma naatu makkaluku ipdi help pandrathu moolama avangaluku ithu evalo Periya help ah erukumndratha realise pandranga.. antha tone❤️❤️😁.. masha Allah!.... Humanity never Ends....

  • @user-hr6cd6qg6g
    @user-hr6cd6qg6g 2 года назад

    உங்க எல்லாம் காணொளிகளை விட இந்த காணொளி அதிகமாக மனம் நெகிழ்ந்து விட்டது.👍