Doctor சிவராமன் சார் வீட்டு கல்யாணம் எப்படி இருக்கு பாருங்க! அசத்தல் MENU! வாயடைத்து போன சம்பவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2024
  • டாக்டர் சிவராமன் வீட்டு கல்யாண விருந்து குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் சிவராமன் & மாதம்பட்டி ரங்கராஜ் பேட்டி
    #madhampattyrangaraj #virundhu #drsivaraman #weddingevent #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 1,1 тыс.

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  5 месяцев назад +112

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @aishwaryakarthika-os2yy
      @aishwaryakarthika-os2yy 5 месяцев назад +8

      Kandippa recipe book weanum

    • @user-my2nj6hi2b
      @user-my2nj6hi2b 5 месяцев назад +6

      Great Inspiration

    • @Thilagavathi.G.2360
      @Thilagavathi.G.2360 5 месяцев назад +2

      உண்மையில் எங்க ஊர் தண்ணீர் மிகவும் அற்புதமானது அதற்கு இனையாக உங்கள் கை மனம்🙏👍 வாழ்க வளமுடன் வளர்க மேன் மேலும்

    • @Paarthen-rasithen
      @Paarthen-rasithen 4 месяца назад +1

      Actress Saranya ponvannan Biography in Tamil
      ruclips.net/video/r26k8kjWhEg/видео.html

    • @umarani7616
      @umarani7616 4 месяца назад

      Dindigul. ஆத்தூர். தண்ணியம் இனிக்கும். இளநீர். தண்ணியாட்டம் இருக்கும்​@@Thilagavathi.G.2360

  • @jukala968
    @jukala968 5 месяцев назад +1390

    ரங்கராஜ் sir உங்ககிட்ட order குடுக்குற அளவுக்கு நான் பணக்காரன் இல்ல நீங்க சமைக்குர கல்யாணத்துக்கு அழைக்குர அளவுக்கு பணக்கார friendsum இல்ல😅😅😅

    • @sharmisyed9264
      @sharmisyed9264 4 месяца назад +17

      😂😂😂

    • @palanisamy.k1365
      @palanisamy.k1365 4 месяца назад +52

      நானும் உங்கள் கட்சி நண்பரே

    • @revathyperiasamy7383
      @revathyperiasamy7383 4 месяца назад +23

      இன்றைய தேவையான உணவு இனிய, ஆரோக்கியமான உணவு ஆத்மார்த்தமாக வேண்டும் என்ற எண்ணம் நீங்கள் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

    • @dhilshath9620
      @dhilshath9620 4 месяца назад +81

      நீங்கள் சொன்ன உணவுகள் எல்லாம் எப்படி செய்வது என்று ஒரு புத்தகம் போடுங்கள். ஏன் என்றால் எங்களிடம் வசதி இல்லை. உங்கள் சமையல் எங்கள் திருமணத்திற்கு புக் செய்ய. புத்தகம் மூலமாக நாங்கள் சமைத்து சாப்பிட்டு கொள்கிறோம்

    • @yazararafath380
      @yazararafath380 4 месяца назад +4

      😊​@@Paarthen-rasithen

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 4 месяца назад +146

    என் வாழ்நாளில் முதல்முறையாக கல்யாணத்தில் பணம் நகை கார் பங்களா சொத்து பற்றி பேசாமல் முழுக்க முழுக்க விருந்து அதிலும் இயற்கை உணவு பொருள் விருந்து பற்றி நீங்கள் இருவரும் மாற்றி மரியாதையாக பேசுவதும் மிக அழகு! தண்ணீர் முதல் மீதான உணவு மற்றும் கழிவுகள் வரை மிகச்சிறப்பானமுறையில் செய்துள்ளார்கள்! உங்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது! உறவினர் நண்பர்களைப்பற்றி மட்டுமல்லாமல் மற்றஜீவராசிகள் மண்வளம் மீதெல்லாம் அக்கறையுடன் திருமணவிருந்து வழங்கியது மிகவும் பாராட்டுக்குரியது சிவராமன் ஐயா! 👏👏👏👏👏👏👏 ரங்கராஜ் ஐயா பாராட்டுகள் 👏👏👏👏👏👏👏👏

  • @kvavlog8291
    @kvavlog8291 5 месяцев назад +316

    சிறுவாணி தண்ணீர் பெருமை உலக தமிழர்களுக்கு சொன்னதற்க்கு நன்றி 😊😊😊

    • @JC-dr1nm
      @JC-dr1nm Месяц назад

      😂😂😂

  • @kavithasaravanan4589
    @kavithasaravanan4589 5 месяцев назад +258

    இந்த உணவை அனைத்தையும் வீடியோவாக வெளியிட்டால் அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள் நன்றி

  • @kawsalyap1858
    @kawsalyap1858 5 месяцев назад +343

    இது நல்லதொரு தொடக்கம்; சிறு விவசாயிகள் பெரிதும் பயன் பெறுவார்கள் ❤

  • @joshuaesthar973
    @joshuaesthar973 5 месяцев назад +62

    சூப்பர் சார். முடிந்தால் ஒவ்வொரு பதார்த்தையும் ஒவ்வொரு வீடியோ போட்டால் நாங்களும் வீடுகளில் செய்து பழகிக் கொள்வோம். தானியங்களில் விதவிதமாக எங்களுக்கு செய்ய தெரியவில்லை முடிந்தால் போடுங்க வெள்ளை அரிசி பதார்த்தங்களை குறைத்துக் கொள்வோம்

  • @krishnavenisivanesan5471
    @krishnavenisivanesan5471 5 месяцев назад +70

    எதையும் சொல்வது எளிது அதனை செய்வது அரிது. ஆனால் நீங்கள் அதை செய்து காட்டியுள்ளீர்.மிகப் பெரிய சாதனை சார்.

  • @creativity6855
    @creativity6855 5 месяцев назад +454

    நம் பாரம்பரிய உணவில் இவ்வளவு பலவித உணவு இருக்கிறது என்பதை இந்த வீடியோவில் உங்கள் வீட்டு திருமணம் மூலம் தெரிந்து கொண்டேன்... பார்க்கும் மக்களும் இதில் இருந்து நம் பாரம்பரிய உணவுக்கு திரும்பினால் நன்றாக இருக்கும் ❤...வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐

    • @balamurugangvellore7482
      @balamurugangvellore7482 5 месяцев назад +11

      பசியுடன்....

    • @vijayvenkadesh4463
      @vijayvenkadesh4463 5 месяцев назад

      Qqàa😊😊ar5​@@balamurugangvellore7482

    • @thillaijayarajan5509
      @thillaijayarajan5509 5 месяцев назад +13

      பிறருக்கு சொல்வதையும் தன்னுடைய வீட்டு திருமணவிழாவில் கடைபிடித்ததற்கு நன்றி ஐயா.தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் நலமுடன்.

    • @rajalekshmiramalingam6478
      @rajalekshmiramalingam6478 4 месяца назад +4

      வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 💐🙏💐👍👍🙏🙏🙏💐💐🙏💐

    • @chandrikasadasivam7907
      @chandrikasadasivam7907 4 месяца назад

      ​@@thillaijayarajan5509🤣😊😊

  • @prabhakaran5196
    @prabhakaran5196 5 месяцев назад +152

    மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் சிவராமன் உழைப்புக்கு வாழ்த்துக்கள்

    • @shanthakrishnan4462
      @shanthakrishnan4462 Месяц назад

      Nice to hear Dr siva raman took so much care to provide ideal healthy food for his daughters wedding

  • @shubharamani2543
    @shubharamani2543 5 месяцев назад +70

    இந்த வீடியோ பார்த்த பிறகு கண்டிப்பா என் பெண்ணின் கல்யாணத்திற்கு சிறுதானியம் தான் என்று முடிவு செய்து விட்டோம்

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 месяцев назад +103

    மருத்துவரும், சமையல் கலைஞரும் துணிச்சலோடு சேவை மணப்பாண்மையோடு ஆரம்பித்த இந்த திருவிழா இன்றைய தலைமுறைக்கு விழிப்புணர்வு.
    இயற்கை விவசாயிக்கு ஒரு நம்பிக்கை. எல்லோரும் முயன்றால் 2050 ல் "தமிழன் உணவு (உலகில்) தலை சிறந்த உணவு" என்பதில் மாற்றுகருத்தில்லை.

  • @Sugunawx8tk5rd5f
    @Sugunawx8tk5rd5f 5 месяцев назад +58

    நான் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் நான் புதிதாக ஒரு தொழில் ஆரம்பித்து உள்ளேன் என் தொழில் நிச்சயம் ஒருநாள் மிகப்பெரிய வெற்றியடையும் அப்போது நான் எனது ஊருக்கு சிவராமன் ஐயா வீட்டு கல்யாண விருந்தைப் போல் சிறுதானிய வகைகள் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள் வெள்ளை சக்கரை சேர்க்காத இனிப்பு வகைகள் என்று ஆரோக்கியமான விருந்து அளிப்பேன் அப்போது மாதம்பட்டி ரங்கராஜன் அண்ணாவை தான் எனது சமையல் பண்ண கூப்பிடுவேன்

    • @shahulhameed3855
      @shahulhameed3855 5 месяцев назад +8

      கண்டிப்பா உங்க விருப்பம் நிறைவேறும் சகோதரி. வாழ்த்துக்கள் 💕💕💞

    • @lazyqueen8889
      @lazyqueen8889 5 месяцев назад

      வாழ்த்துக்கள் சகோதரி

    • @Sugunawx8tk5rd5f
      @Sugunawx8tk5rd5f 5 месяцев назад

      @@shahulhameed3855 மிக்க நன்றி சகோதரரே 🙏

    • @Sugunawx8tk5rd5f
      @Sugunawx8tk5rd5f 5 месяцев назад

      @@lazyqueen8889 மிக்க நன்றி சகோதரரே 🙏

    • @sudhachelladurai
      @sudhachelladurai 5 месяцев назад

      Kandippa nadakum sahodhari😍😍😍

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva 5 месяцев назад +217

    தொழிலை எப்படி நேசித்து பண்ண வேண்டும் என்பதற்கு மாதம்பட்டி ரங்கராஜ் அண்ணன் உதாரணம்..❤ மேலும் மேலும் வளர வேண்டும் அண்ணா மனநிறைவான வாழ்த்துக்கள்

  • @sureshchandar1959
    @sureshchandar1959 5 месяцев назад +84

    இதுவரை இதுபோன்ற ஒரு பாரம்பரிய உணவு விருந்தை திருமணத்திற்கு டாக்டர் சிவராமன் அவர்களைப் போல் வழங்கியிக்க நூற்றுக்கு நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை, வாழ்த்துக்கள் சமையல் கலைஞர் திரு. மாதம்பட்டியாருக்கு சிறப்பான வாழ்த்துகள்.

    • @mohanyogavanam4029
      @mohanyogavanam4029 4 месяца назад

      அருமை 🎉🎉

    • @naturalsselva
      @naturalsselva 4 месяца назад

      Arumayana kalaignan

    • @Paarthen-rasithen
      @Paarthen-rasithen 4 месяца назад

      Actress Saranya ponvannan Biography in Tamil
      ruclips.net/video/r26k8kjWhEg/видео.html

    • @snkgnktnr
      @snkgnktnr 4 месяца назад

      Sir.pls share rangarajan contact number .pls.

  • @BarishaBegam-bg9jk
    @BarishaBegam-bg9jk 4 месяца назад +18

    வெரும் சொல்லாக இல்லாமல் செயல்படுத்தியதுக்கு ரொம்ப நன்றி டாக்டர் சார் மாதம்பட்டி அண்ணே இன்னும் நீங்க நல்லா வளரனம்

  • @ramanmoon3546
    @ramanmoon3546 4 месяца назад +24

    என் வாழ்கை ல உருப்படியான நேர்காணல் இது தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நம் பாரம்பரிய உணவு 🥰🥰🥰😘😘😘😘😘😘 மாதாம் பட்டி ரங்கராஜ் 🎉🎉

  • @HemaLatha-cg2pk
    @HemaLatha-cg2pk 5 месяцев назад +72

    எணக்கு பிடித்தமான இரண்டு பேரையும் ஒன்னா பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்.

  • @purplecabbagebyrenuka
    @purplecabbagebyrenuka 4 месяца назад +238

    ஓட்டுமொத்த நல்லதையும், பாரம்பரியத்தையும் ஒரு கல்யாணத்தில் செய்து காட்டியுள்ளீர்கள். Wow, that's so amazing 👏. Hats off to both of you. பார்த்த எனக்கு மனசும் வயிறும் நிறைந்த மாதிரி இருந்தது.வாழ்க வளமுடன் மணமக்கள்.

    • @Paarthen-rasithen
      @Paarthen-rasithen 4 месяца назад

      Actress Saranya ponvannan Biography in Tamil
      ruclips.net/video/r26k8kjWhEg/видео.html

  • @aruvugamaruvugam5923
    @aruvugamaruvugam5923 5 месяцев назад +41

    வாழ்க பல்லாண்டு மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் மருத்துவர் சிவராமன் அய்யா குடும்பத்தார் 🎉

  • @mangayarkarasisankaralinga8046
    @mangayarkarasisankaralinga8046 5 месяцев назад +14

    தண்ணீர் பாட்டில் தவிர்த்து மிகவும் மகிழ்ச்சி இருபது வருடங்கள் முன்னர் தம்ளர்தானே உபயோகித்தோம்

  • @raghavannambi82
    @raghavannambi82 4 месяца назад +67

    இதுதான் செரியான நேரம் இதுக்கு அப்புரம் வரும் கல்யாணங்களிள் இது போல் சமைத்து அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு அளிக்களாம் 🎉🎉🎉

  • @thavamanim2216
    @thavamanim2216 5 месяцев назад +42

    வாழ்த்துக்கள், உங்கள் கல்யாண விருந்து தயாரிப்பு முறை புத்தகம் வெளியிட்டால் மிக மிக நன்றாக இருக்கும்

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 5 месяцев назад +76

    அருமையான இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் என் கண்களில் நீர் வழிந்தது ❤❤ இந்த அளவுக்கு மெனக்கெட முடியுமா ரங்கராஜ் நான் உங்கள் fan😂

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 5 месяцев назад +31

    இந்த நிகழ்ச்சி யை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நாங்கள் கோயம்புத்தூர். ரங்கராஜன் சார் சமையல் சாப்பிட்டு இருக்கிறோம். மிக நன்றாக இருக்கும். சிவராமன் சார் வீட்டு சமையல் நாங்கள் மிஸ் பண்றோம்

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 5 месяцев назад +28

    இயற்கை அன்னையை நீங்கள் நேசித்ததால் இயற்கை உங்களை மனதார வாய்ப்புக்கொடுத்து வாழ்த்தியுள்ளது 🙌 உங்களுக்கு கை கொடுத்த அனைத்து உழைப்பாளர்களுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்🙏🙏இறைவன் உங்களை ஆயுள் ஆரோக்கியமாக வைத்திருக்கட்டும்.💐💐💐

  • @RajageethaRaja-mv6bu
    @RajageethaRaja-mv6bu 5 месяцев назад +47

    உங்களுடைய சாப்பாட்டு சாப்பிட ஆசையா இருக்கு அண்ணா கடவுள் பாக்கியம் கொடுப்பார் நம்பிக்கை இருக்கிறது

  • @kiruthigasivanesan1564
    @kiruthigasivanesan1564 5 месяцев назад +44

    வார்த்தைகளை வாழ்வியல் ஆக்கி அனைவரையும் அதன் உண்மையை உணர செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ஐயா 👏👏👏👏

  • @mariajohn1978
    @mariajohn1978 5 месяцев назад +40

    ஒரு இலைக்கு... என்னென்ன இருந்தது எவ்வளவு செலவானது என்று கடைசி வரை சொல்லவே இல்லை .... இதே போல் செய்ய எல்லா எளிய மக்களுக்கும் ஆசைதான் .... இந்த செலவையும் சேர்த்து சொன்னால்... மற்றவர்களாலும் இதை செய்ய முடியுமா என யோசிக்கலாம் ...

    • @rohinir7769
      @rohinir7769 5 месяцев назад +8

      2000 rupees one plate

    • @mariajohn1978
      @mariajohn1978 5 месяцев назад

      @@rohinir7769 உறுதிபடுத்தி கூறுங்கள் ...

  • @jeyanthir4783
    @jeyanthir4783 4 месяца назад +12

    சீக்கிரமா ஒரு புத்தகம் போடுக, ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy Месяц назад +2

    Sivaraman sir மேடையில் பேசுவது போல் அவர் வீட்டுகல்யாணத்திலும் சிறுதானிய விருந்து கொடுத்து அசத்தி இருக்கிறார் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் நன்றி

  • @priyadharshinipeter5494
    @priyadharshinipeter5494 5 месяцев назад +34

    உங்கள் இருவரை போல எல்லாரும் சிந்திக்க வேண்டும்.நாடு வளம் பெற! மக்கள் செழிக்க! எல்லா உயிர்களுக்கும் வாழ வழி செய்வோம்

  • @neethimannan3352
    @neethimannan3352 4 месяца назад +12

    வெற்று வார்த்தைகளால் திட்டுவது, குறை சொல்லுவது, நாம் எல்லாரும் சாதாரணமாகச் செய்வதுதான்.
    அசாதாரணம்,
    நாம் சொன்னபடி செய்வதுதான்.
    அதற்காக எவ்வளவு மெனக்கெடல்.
    வாழ்த்துகள்! நன்றியும், ஐயா!!

  • @sundaramkr8940
    @sundaramkr8940 5 месяцев назад +14

    தம்பி ரங்கராஜின் சாதுவான ,பணிவான முகமும் அடக்கமான அணுகு முறையும், செய்முறை விளக்கமும் என்னை பிரமிக்க வைக்கிறது.நான் 80+ ல்உள்ளேன்.சாப்பிட ஆசையாக உள்ளது.
    சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியாது.நீடூழி வாழ எங்களுடைய ஆசீர்வாதங்கள்

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 5 месяцев назад +24

    ரங்கராஜ் பிரதர் மனசுல எப்போவும் உயரத்துல இருக்கீங்க ❤❤❤வாழ்க வாழ்க வளர்க வளர்க

  • @saiguru4270
    @saiguru4270 5 месяцев назад +99

    மருத்துவர் ஐயாவின் மருத்துவ குறிப்புகளும் அதே அளவிற்கு அவரது அமுததமிழும்,,சமையல் சக்கரவர்த்தி ரங்கராஜ் (என் முதலாளி)அவர்களின் 100% ஈடுபாடு உடைய சமையல் திறனும் இணைந்த இருவரின் காணொலி பேட்டியும் ஈடில்லா விருந்து...

    • @jodanjd3725
      @jodanjd3725 4 месяца назад

      Arumaiyana karurhu

    • @dharaninihi5066
      @dharaninihi5066 4 месяца назад

      நீங்க அவர்கிட்ட வேலை செய்றீங்களா

  • @mathi9394
    @mathi9394 4 месяца назад +16

    இந்த உரையாடலை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. சிவராமன் சார் சொன்னதோடு மட்டும் அல்லாது செயலிலும் செய்து காட்டி இருக்கிறீர்கள் இரண்டு பேரும் சேர்ந்து உணவுப் புரட்சிக்கு அடித்தளம் இட்டு இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @ameerbasha3427
    @ameerbasha3427 4 месяца назад +4

    பேச்சோடு மட்டும் இல்லாமல் செயலிலும் ஈடுபட்டது உண்மையிலே சிறப்பான விஷயம்... ❤❤ வாழ்த்துக்கள்

  • @varshini8871
    @varshini8871 5 месяцев назад +7

    வாழ்க வளமுடன் தமிழ் தலை முறைக்கு மாற்றம் வேண்டும் என்பதற்காக இந்த கல்யாணம் விருந்து ஒரு எடுத்துக்காட்டு இதை உணர்வுபூர்வமான ஆரோக்கியமான உணவு இதை மக்கள் பின்பற்ற வேண்டும். 200பேர் இது மாதிரி கல்யாணம் விருந்து வைத்தால் போதும் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் மணமக்களை வாழ்த்தி வாழ்த்தி அனைவரும் களைத்து விடுவர் இது ஒரு இமாலய வெற்றி மாதம்பட்டி ரெங்கராஜ் தம்பிக்கு ❤❤❤❤ இளைய தலைமுறையினர் பலர் இதை கொண்ட வேண்டும் .

  • @subhashini314
    @subhashini314 4 месяца назад +22

    சூப்பர் சார்... ஒரு புத்தகம் போடுங்கள் என்னைப் போல சிறுதானிய பாரம்பரிய உணவுகளை விரும்புபவர்களுக்கு மிகுந்த பயனாய் இருக்கும்... எனக்குத் தெரிந்த அளவில் கல்யாண விருந்தில் புரட்சி செஞ்சிருக்கீங்க... வாழ்த்துக்கள் 🎉🎉 என் வீட்டு பங்ஷன்ல சின்னதாக நாங்கள் செய்த மாற்றங்களை இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன் முழுவதும் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்தினோம் செக்கு எண்ணெய் நாங்களே நேரடியாக விவசாயிகளிடம் வாங்கி காயவைத்து ஆட்டி பயன்படுத்தினோம்... காய்களும் அதிகபட்சமாக நேரடி விவசாயிகளிடம் வாங்கினோம் குறிப்பாக ஊட்டியில் இருந்து ஒருவரை அரேஞ்ச் பண்ணி அங்கு விளைவன வாங்கினோம் சுவை மிக அற்புதமாக இருந்தது...அப்பளம் பொறிக்க மட்டுமே சன்பிளவர் ஆயில் வாங்கினோம்... ஆயிரம் ஆயிரத்து ஐநூறு பேர் வந்திருந்தார்கள் உணவை பாராட்டி சென்றார்கள்... மெனுவில் 11 வகைதான் ஆனால் அத்தனையும் கச்சிதமாக சரியாக இருந்தது குறிப்பாக வேஸ்ட் ஆகலை... செலவு மட்டும் கொஞ்சம் அதிகம்தான் அதற்கான மெனக்கெடலும் வேலைப்பளுவும் எங்களுக்கு ரொம்பவும் அதிகமாக இருந்தது

  • @anandrangasamy5349
    @anandrangasamy5349 5 месяцев назад +27

    மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் இயற்கை உணவு படைத்த கு.சிவராமன் ஐயா அவர்களுக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் விழாக்களில் இதுபோன்ற இயற்கை உணவுகள் கொடுப்பது என்னை போன்ற இயற்கை விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி அளக்கின்றது நன்றிகள் பல

  • @vasanthamohan3838
    @vasanthamohan3838 4 месяца назад +18

    கல்யாண விருந்து சாப்பிட்ட உணர்வை கொடுத்தது.நன்றி.

  • @elangovanmanickam2691
    @elangovanmanickam2691 4 месяца назад +13

    Sir நீங்க ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பித்தாள் அனைவரும் சுவைக்கலாம். சிறு தானியம் புகழ் உச்சம் தொடும். விவசாயம் பெருகும். வாழ்த்துக்கள் 🙏🏼

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 4 месяца назад +2

      சிறுதானிய விலையும் ஏறிடும் 😅😅😅😅

    • @FREEFIRESQAD
      @FREEFIRESQAD 4 месяца назад

      Super

  • @dr.glatharadhakrishnan3667
    @dr.glatharadhakrishnan3667 5 месяцев назад +10

    என்னுடைய எண்ணம் நீங்கள் நிறைவேற்றி இருக்கிறீர்கள், மிக சிறப்பு. என்னக்கு இந்த எண்ணம் வர முக்கிய காரணமும் மருத்துவர் ஐயா தான்

  • @sweetdreams2026
    @sweetdreams2026 5 месяцев назад +98

    சொல்லும் செயலும் ஒன்றினைந்து மாமனிதர் நீங்கள்.
    இதுவே உங்களின் நேர்மைக்கும், நம்பிக்கைக்கும் பெரும் முன்மாதிரியாக இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

  • @kalaiarasichandirasekaran9776
    @kalaiarasichandirasekaran9776 5 месяцев назад +16

    கேட்கவே எவ்ளோ நல்லா இருக்கு நல்ல உணவுகளை நம்ம குழந்தைங்க சாப்பிடனும்

  • @ramanrajesh5079
    @ramanrajesh5079 4 месяца назад +7

    ஒரு முன்மாதிரியான கல்யாண விருந்து கொடுத்ததற்கு ரொம்ப நன்றி இதைப் பார்த்து இன்னும் நிறைய பேர் இது மாதிரி விருந்து கொடுப்பாங்க வாழ்த்துக்கள்🙏

  • @arunadevi2930
    @arunadevi2930 5 месяцев назад +311

    Madhampatty sir, please release a book or video about cooking with sirudhaniyam, it will be useful for all of us who like to follow our traditional food items,Gudos to you both!!

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 месяца назад +8

    எங்கள் கொங்குத்தங்கம் மாதம்பட்டிரங்கராஜ் தம்பிக்குவாழ்த்துக்கள்

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. 5 месяцев назад +33

    தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளை கொண்டாடுவோம் ஒன்று படுவோம் உயர் உருவோம் என்று வணங்குகிறேன் 🙏

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 5 месяцев назад +13

    அனைவருக்கும் தெரியும் படி இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அனைவருக்கும் மிக்க நன்றி🙏

  • @Sivakumar-mb9qx
    @Sivakumar-mb9qx 4 месяца назад +33

    கோவைக்கு உங்களால் பெருமை வாழ்த்துக்கள் 🎉

  • @minklynn1925
    @minklynn1925 5 месяцев назад +12

    நம் பாரம்பரிய உணவு திருவிழா போல காட்சியளிக்கிறது🎉🎉🎉

  • @karthiv1544
    @karthiv1544 5 месяцев назад +52

    இந்த திருமண விருந்தில் ஏழை எளிய மக்களுக்கும் இந்த சிறுதானிய உணவை கொடுத்து இருந்தால் நல்ல இருக்கும் இருப்பவர்கள் இல்லாதவர்க்கு கொடுத்து இருக்கலாம் கோடி செலவு திருமணம் வேண்டாம்
    சிறு துளி ஏழை களுக்கு கொடுங்கள்😊

    • @rajasekarsekar1856
      @rajasekarsekar1856 5 месяцев назад +14

      உங்களைப் போன்று குறை சொல்ல இங்கு ஆட்கள் அதிகம்

    • @uselvamu8407
      @uselvamu8407 5 месяцев назад

      சொன்னால் என்ன தப்பு இந்த இரண்டு பேருமே கோடி கோடியாய் சம்பாரிங்கும் போது ஏழை மக்களுக்கும் கொஞ்சம் தந்தால் என்ன​@@rajasekarsekar1856

    • @karthiv1544
      @karthiv1544 5 месяцев назад +9

      இது குறை அல்ல ஏழைகளுக்கு கிடைக்காத இந்த சிறுதானிய சாப்பட்டை அவர்களுக்கும் கொடுத்து அவர்களுக்கு நிறைவை கொடுத்து இருக்கலாம் இது என் கருத்து

    • @GoogleBusinessAccount-mw2sr
      @GoogleBusinessAccount-mw2sr 5 месяцев назад

      குறை இல்லை. அவுங்க கருத்து. எல்லதுள்லையும் நீங்கதான் குறை சொல்றிங்க. .

    • @sivaprakash9975
      @sivaprakash9975 5 месяцев назад

      ​@@karthiv1544 tamilnadu la 7 and half crore people irukanga 4 crore people varumai kodu keela tha irukanga ...oru kalyanam la 300 peruku tha sapaadu poda mudiyum..ithula Elai eliya makkal ku epdi sapadu podrathu ..sapaadu micham aana kudukalam ...kiruku mathri comment panraa

  • @jagannathan7816
    @jagannathan7816 5 месяцев назад +35

    பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே

  • @drdeepikaravisankar5939
    @drdeepikaravisankar5939 4 месяца назад +46

    I am a siddha doctor, student of sivaraman sir.KUDOS to this team up with Madhampatty Rangarajan.Proud of this healthy initiation.

  • @malarganga_ammaponnu..
    @malarganga_ammaponnu.. 5 месяцев назад +14

    பல்லாண்டு காலம் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் முருகன் அருள் பெற்று நிறைந்த மனமும் உடலும் உள்ளமும் உற்சாகத்துடன் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள்

  • @UshaRani-hu5hb
    @UshaRani-hu5hb 4 месяца назад +5

    சிவராமன் மற்றும் ரங்கராஜன் கூட்டணி அமைத்து அசத்திட்டாங்க... கல்யாண சாப்பாடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் 👏👏

  • @kaviarasan4672
    @kaviarasan4672 4 месяца назад +8

    என்னோட கல்யாணத்துல கண்டிப்பா இந்த சாப்பாடு தான்

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 5 месяцев назад +39

    அந்தக் காலத்தில் நெல் அரிசி என்பது மிகவும் அபூர்வமானதாக இருந்தது .. சிறுதானியங்கள்மட்டும்தான் மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியதாக இருந்தது மக்கள் அனைவரும் சிறுதானிய உணவுகளை தான் சாப்பிட்டு ஆக வேண்டிய சூழ்நிலை இருந்தது .. ஒரு மழை இரண்டு மழை பெய்தாலே சீக்கிரமாக விளையக்கூடிய குறுகிய கால பயிர்கள் ... அப்படிப்பட்ட சிறுதானிய உணவுகளை சாப்பிட்ட மக்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சிறப்பாக ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் ஆனால் இந்த காலத்தில்சிறுதானியங்களை விவசாயிகள் மறந்துவிட்டார்கள் அதனால் சிறுதானியங்கள் தான் மிகவும் அபூர்வமாகிவிட்டது அதனால் விலையும் அதிகம்..நெல் அரிசி உணவுகளை அதிகமாக சாப்பிட என்று ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து இன்று வரை எல்லா வகையான நோய்களும் மக்களை தாக்கி வருகின்றன

    • @sarithasakthivel
      @sarithasakthivel 5 месяцев назад +1

      Correct

    • @muthuselviswamippan4908
      @muthuselviswamippan4908 5 месяцев назад

      குறுகிய கால நெல் மட்டும் தான் பின் விளைவு ஏற்படுத்தும் பாரம்பரிய நெல் நல்ல அரோக்கியம் தந்தது நன்றி

    • @valviyaltamil
      @valviyaltamil 5 месяцев назад

      ​@@muthuselviswamippan4908பாரம்பரிய வகை நெல் அறுபதாம் குருவை 60-70 நாள் அடுத்து 80 நாளில் இருந்து சம்பா வகை ஆறு மாதங்கள் வரை பல வகையான நெல் உள்ளது

    • @SaranyaLalitha
      @SaranyaLalitha 4 месяца назад

      பசுமை புரட்சி ஏற்படுத்திய தாக்கம் கலப்பின நெல் உணவு அதிகம் மக்கள் உண்ண தொடங்கிய காரணம்😮

    • @hamsavenimurugesan5552
      @hamsavenimurugesan5552 4 месяца назад

      ​@@muthuselviswamippan4908uu

  • @antonyselvam7017
    @antonyselvam7017 4 месяца назад +4

    சிவராமன் சார் உங்க வீட்டு பக்கத்து வீட்டில் இருந்தாலே எங்களுக்கு நோய் எதுவும் வராது❤

  • @arshakthikrishnan9325
    @arshakthikrishnan9325 4 дня назад

    ஹலோ சார்
    டாக்டர் சாரும் நீங்களும் நடத்திய உரையாடல் மற்றும் திருமணம் நடத்திய விதம் மிகச் சிறப்பாக உள்ளது நானும் உணவுத்துறை சார்ந்து வாழ்கிறேன் என்னுடைய தலைமையில் நான் நடத்தும் திருமணங்கள் என்னால் முடிந்தவரை வரும் தலைமுறைக்கு தீங்கு விளைவிக்காமல் நடத்தி வருகிறேன் தாங்கள் கூறியது போல் நான் மட்டும் நினைப்பதை விட எனக்கு ஆர்டர் கொடுப்பவர் நினைத்தாலே இது சாத்தியம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கண்டிப்பாக இதனை சாதிப்பேன் அதே போல் வாய்ப்பு கிடைக்கும்போது உங்களை சந்திக்கிறேன் வாழ்த்துக்கள்❤❤

  • @thillaijayarajan5509
    @thillaijayarajan5509 5 месяцев назад +6

    ஐயா சிறுதானிய உணவு களை மட்டுமே பயன்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.திரு.ரங்கராஜன் நெகிழியை பயன்படுத்தாமல் இவ்வளவு பெரிய விழாவில் கடைபிடித்ததற்கு வாழ்த்துக்கள்.என்ன ஒரு சமீக அக்கறை.தலை வணங்குகிறேன்.

  • @shantielangovan3802
    @shantielangovan3802 5 месяцев назад +13

    மாதம்பட்டி மெனு புத்தகம் விரைவில் சிவராமன் சார் கிளினிக்ல விற்பார்

  • @vijayalakshmipalaniappan234
    @vijayalakshmipalaniappan234 5 месяцев назад +5

    நான் கடந்த இருபது ஆண்டுகள் மேல் organic காய்கறிகள் மளிகை பொருட்களை தான் வாங்குகிறேன் எல்லாரும் இதை செய்தால் விலையும் குறையும் நம் மண்ணும் காப்பற்றலாம்

  • @dineshkumar-ov4cg
    @dineshkumar-ov4cg 4 месяца назад +3

    திருமணத்தில் இரண்டு மனங்கள் தான் ஒன்று படும், ஆனால் இந்த திருமணத்தில் இரண்டு சீர்திருத்தவாதிகள் ஒன்று பட்டுள்ளீர்கள்... மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட இருவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.. ராங்ராஜ் அண்ணா உங்கள் சமையல் recipe சொன்னால் நாங்கள் இன்னும் நலமுடன் இருப்போம்.. இயற்கைக்கு நீங்கள் செய்த மரியாதைக்கு வாழ்த்துக்கள் ஐயா... நன்றி..

  • @prathikshashrichannel2291
    @prathikshashrichannel2291 5 месяцев назад +15

    டாக்டர் சிவராமன் ஐயா மற்றும் மாதம்பட்டி ரங்கராஜன் அவருக்கும் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் கொண்டு வந்தமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

  • @maryrani.a8992
    @maryrani.a8992 5 месяцев назад +19

    Ranga Rajan sir yappavama sapatla kalakuvaga. Congratulations👏.

  • @CatharineKaroline
    @CatharineKaroline 5 месяцев назад +21

    A person who loves his profession more than him can only does impossibility into possible one. Really admiring this man

  • @devasenabharath6518
    @devasenabharath6518 4 месяца назад +3

    பேட்டி மிகவும் அருமையாக உள்ளது. இத்தனை வகை உணவு களையம் விறகு அடுப்பில் சமைத்தவருக்கும் பாராட்கள்

  • @sivanandarasapanchsadsaram7961
    @sivanandarasapanchsadsaram7961 3 месяца назад +1

    வணக்கம் ரங்கராஜ்பாண்டி
    உங்கள் சமையல் நான் சாப்பிட்டுபார்கவில்லைதான்
    ஆனால் சிவராமன் ஐயாவும்
    நீங்களும் கதைத்ததை கேட்கும்போது வயிறுநிறைய
    சாப்பிட்டமாதிரியான உணர்வை
    உணர்ந்தேன் சந்தோசம்
    வாழ்க வளர்க!

  • @sakthiganesh8161
    @sakthiganesh8161 4 месяца назад +3

    மருத்துவர் கு. சிவராமன் அவர்கள் ஒரு நல்ல மனிதர் இந்த மன்னையும் மக்களையும் இயற்கையையும் நேசிப்பவர் அவர் மகளும் மருமகனும் நம் முன்னோர்கள் சொல்லிச் சென்ற பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிந்து ஆசி வழங்கட்டும்

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 5 месяцев назад +17

    Hats off you doctor...keep shining mathampatti rangaraj....👍

  • @beautyskinandcare
    @beautyskinandcare 4 месяца назад +2

    எங்கள் வீட்டு கல்யாணத்திற்கு சமைத்தவர் உங்கள் தந்தை மாதம்பட்டி நாகராஜ் அவர்கள்..நல்ல சுவை.

  • @dhanshikdhanshik9243
    @dhanshikdhanshik9243 5 месяцев назад +8

    Tirunelveli sambar ku oru like podunga ❤😊

  • @muthulakshmi7116
    @muthulakshmi7116 5 месяцев назад +24

    Awesome initiative and amazing effort... kudos to both of you sir... 👏 😊

  • @Sivakumar-tr6ke
    @Sivakumar-tr6ke 5 месяцев назад +13

    Hat's off sivaraman sir for not dispose the plastic bottles thru the land

  • @jeevithavpjm6960
    @jeevithavpjm6960 5 месяцев назад +18

    I'm a big fan of Sivaraman sir and Mathampatti sir.. Now both are in one place so happy for that . Keep going sir for the good things.🎉

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 5 месяцев назад +11

    இது தாங்க நம்ம தமிழனின் சிறப்பு!

  • @gopiraj9170
    @gopiraj9170 5 месяцев назад +27

    4000 blessed stomachs ...happy to watch this with slight jealous :-)

  • @jothimk9651
    @jothimk9651 5 месяцев назад +7

    அருமை நம் பாரம்பரியமான நிறைய உணவுகளை கேட்க்கும்போதே அதன் சுவை நம்மை இன்னும் இன்னும் சாப்பிட வைக்கும் வாழ்க வளமுடன்

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 5 месяцев назад +20

    Super Sir. Both of them are really hardworking persons.

  • @user-gq9yl7dl7u
    @user-gq9yl7dl7u 5 месяцев назад +43

    This looks mouth watering and awesome! just love the idea of this healthy menu at weddings..
    I'm from Sri Lanka 🇱🇰 but I've never seen anyone doing this in our country yet..

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 5 месяцев назад +9

    தாதம்பட்டி ரங்கராஜ்வயதுகுறைவு ஆனால்அனுபவம்அதிகம்என்பதுமைதாவெள்ளை சக்கரைகலர்பவுடர் அஜினாமோட்டாஇதை சேர்க்கமால்செய்வது எப்படிப்பார்த்தாலும் கடினம்அதிலும்சுவை மாறாமல்புதிதுபுதிதாக செய்வதற்குவாழ்த்துக்கள்இவர்இரண்டுமூன்றுபடங்களிலும்கதாநாயகனாக நடித்துள்ளார்என்பது சிறப்புநன்றி

  • @ShivaKumar-jb4jr
    @ShivaKumar-jb4jr 5 месяцев назад +25

    No words Mr.Rangarajan & Team 💐 Hats of 👍

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 5 месяцев назад +15

    🎉 கேட்டாலே மற்றும் பார்த்தாலே நாவில் சுவை ஊறுகிறது.... குறைந்த பட்சம் எத்தனை நபருக்கு தங்களால் ஏற்பாடு செய்ய இயலும் நண்பரே...❤

  • @user-ic5mu4cj7q
    @user-ic5mu4cj7q 5 месяцев назад +4

    Vera level brother.madhampatty rangarajan sir,unga dedication excellent .❤❤❤❤❤❤❤.

  • @thurai2505
    @thurai2505 5 месяцев назад +6

    மருத்துவர் சிவராமகிருஷ்ணன் நல்ல மனிதர்❤❤❤❤❤

  • @nirmalakumari6755
    @nirmalakumari6755 5 месяцев назад +5

    Congratulations. Dr. Veetu thirumanam. Ketkavaa Santhoshamaga iruku. God Bless You Thambi. 🙌

  • @rathimani5374
    @rathimani5374 4 месяца назад +1

    மிகவும் உபயோகமான காணொளி.. வாழ்த்துக்கள் சிவராமன் ஐயா மற்றும் ரெங்கராஜ் அண்ணா 💐💐🙏🏻🙏🏻

  • @divyacs
    @divyacs 5 месяцев назад +11

    I feel like 'jeyichtom maara' for both of you🙏🙏🙏

  • @VijiKalyan25
    @VijiKalyan25 5 месяцев назад +30

    Humble request to Mathampatti Rangarajan sir, can you please share how to cook using siruthaniyam?

  • @velmurugansundaramoorthy4623
    @velmurugansundaramoorthy4623 5 месяцев назад +16

    Thanks to you both. Very nice to watch this video. In future this type of food only will be follow in most of the functions in the society.

  • @mramasamy8625
    @mramasamy8625 5 месяцев назад +1

    சிவராமன் ஐயா மேடையில் சிறுதானியங்களை அன்றாடம் உணவில் இருக்குமாறு பார்க்க வேண்டும் என்று கூறுவார் அதன்படி அவரே முன்னுதாரணமாக நடைமுறை படுத்தி‌காட்டிவிட்டார் இதற்க்கு ரொம்ப சிரமம் பணமும் செலவழித்து உள்ளார் வாழ்த்துக்கள் மணமக்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் சார்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 4 месяца назад +1

    Doctor சிவராமன் வீட்டு கலியாண சாப்பாடுகள் சத்தான சுவையாகவும் பார்க்கவே சிறப்பு வாழ்த்துக்கள் கலியாண தம்பதிகளுக்கு 🙏🏻🙏🏻🙏🏻💙❤️

  • @cr7ff1k999
    @cr7ff1k999 5 месяцев назад +4

    Such a struggle pa. Superb. Hats off Madhampatty rangaraj avargale

  • @tamizhratana340
    @tamizhratana340 5 месяцев назад +9

    புத்தகம் வெளியிடுங்கள் விரைவில்

  • @malarvizhikamaraj5576
    @malarvizhikamaraj5576 4 месяца назад +2

    Wow.கேட்கவே அருமையாக இருக்கிறது.இரண்டு பேரின் முயற்சி மற்றும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.👌👌👍👍

  • @dharumagi1467
    @dharumagi1467 5 месяцев назад +72

    எளிய மக்களின் வாழ்வை எப்போதும் இவர்கள் அரிய போவதில்லை ❤❤❤வாழ்க வளம் உடன் ❤❤

  • @ramanisrinivasan9353
    @ramanisrinivasan9353 4 месяца назад +2

    பேச்சு ஒன்று செயல் ஒன்று என்று சொல்வார்கள் நீங்கள் சொல்வதைத்தான் செய்திருக்கிறீர்கள் பாராட்டுகள்