சிறுத்தையே வெளியில் வா- பாரதிதாசன் கவிதை/siruthaye veliyil va bharathidasan poetry in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • பாரதிதாசன் இளைஞர்களை விடுதலைப் போருக்கு எழுந்து வரும்படி அழைத்த கவிதைதான் " சிறுத்தையே வெளியில் வா" இக்கவிதை விளக்கங்களுடன் வழங்கப்பட்டுள்ளது
    #filmora #filmoramobile
    #tamilpoetry #tamiloldsongs #tamilnadu #tamilliterature #bharathidasan #bharathidasankavithai
    பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
    திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
    எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
    புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
    நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
    சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
    சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
    இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
    கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
    பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
    தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
    நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
    வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
    மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
    புரட்சிப் பாவலர் பாரதிதாசன்

Комментарии • 33