10K ஓட்டத்திற்கான பயிற்சி முறைகள் | How to train for a 10K race | Tamil vlog
HTML-код
- Опубликовано: 7 дек 2024
- வணக்கம் நண்பர்களே!! இன்றைய காணொளியில் ஒரு 10 கிலோமீட்டர் ஓட்டு போடுவதற்காக மேற்கொள்ள வேண்டிய பயிற்சி முறைகளை குறித்து பார்க்கப் போகிறோம். எவ்வாறு படிப்படியாக நம்முடைய வேகத்தையும் தூரத்தையும் அதிகப்படுத்தி, ஓட்ட இலக்கை அடைய வேண்டும் என்பதைக் குறித்து பேசியுள்ளேன். அதோடுகூட பத்து வாரத்திற்கான பயிற்சி அட்டவணையையும் கொடுத்துள்ளேன். வாருங்கள்!! 10 கிலோ மீட்டர் ஓட்டத்தில் ஓடுவதற்கு தயாராகுவோம்!!
#10Ktrainingschedule #RUNNING
HIIT TRAINING VLOG: • 2K SERIES | EPISODE - ...
நன்றி அண்ணா தெளிவான விளக்கம்
என்ன உணவு எடுத்து கொள்ள வேண்டும் veg or nonveg ?
உணவுப் பழக்கம் பற்றிய அடுத்த வீடியோ விரைவில் வருகிறது. வெஜ் அல்லது அசைவம் இரண்டையும் எடுத்துக் கொள்ளலாம்.
Gym tarbil odalamaa
Yes, definitely. But there is a difference between treadmill running and on ground running. So you can alternate between both.
App பேர் சொல்லுங்க
app எதுவும் இல்லை சகோ! அனுபவம்தான்.
அண்ணா நா தினமும் 10 k ஓடரன் அனா காலையில் ஓட முடியுது அனா மாலை ஓட முடியவில்லை... ஏன் .. தொடை தசைகள் வலிக்குது அண்ணா.. அனா எப்போதும் வாமப் எடுக்கரன் அண்ணா ஆனாலும் ஒரு வேலை மட்டுந்தான் ஓட முடியுது ஏன் அப்பொறம் தினமும் கடல்கறையிதான் ஓடரன் அண்ணா.... அதுக்கு. என்ன தீர்வு....
தசைகள் ரெக்கவரி ஆகுவதற்கு 24 மணி நேரம் கொடுக்க வேண்டும். காலை மற்றும் மாலைக்கு வித்தியாசம் உஷ்ணம் சூழல் தான். அதோடு 24 மணி நேரம் ரெக்கவரி ஆகி இருக்க வேண்டும். ஒரு வாரத்தில் நான்கிலிருந்து ஐந்து நாட்கள் ஓடிவிட்டு இரண்டு நாட்கள் ஓய்வு கொடுப்பது மிகவும் நல்லது. தசைகளில் செல் ரிப்பேர் ஆகுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
இதோடு சேர்ந்து ஹைட்ரேஷன் அதாவது நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நேரம் ஓடினால் மாத்திரம் போதும். உங்கள் தசைகளுக்கு ஓய்வு கொடுக்கும் போது உங்களுடைய திறனும் அதிகரிக்கும் வேகமும் அதிகரிக்கும். Workout, hydration (தண்ணீர்), nutrition (உணவு), rest(ஓய்வு), recovery(மீட்பு), workout. இந்த ஐந்து விஷயங்களும் ஒரு நாளில் நடக்க வேண்டும். ரெக்கவரிக்கு மிக முக்கியமான ஒரு விஷயம் தூக்கம். குறைந்தபட்சம் 6 மணி நேரம் தூக்கம் தேவை. அப்போதுதான் தசைகளில் செல் ரிப்பேர் நடக்கும்.
படிப்படியாக வேகத்தைக் கூட்டுங்கள், உங்களது முயற்சிகளில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.