தேன் கவிதைக்கு சொந்தக்காரன் - எம் தேனிக் காரன் என்பதில் எனக்குத் தனிக் கர்வம் ...... இதுவரை பெற்றக் கவிக் குழந்தைகளில் ... வைரமாய் ஜொலிக்கின்றான் வைர முத்து என்றெண்ணி .... தமிழ் தாய் பூரித்துப் போகின்றாள் ...... தங்கள் தமிழ் கேட்டு ...... இனி வரும் கவி எவனும் தங்கள் கவிதைகளின் நுனி அளவு பாதிப்பு இன்றி .... எழுத முடியாது தமிழோடு இயஙக முடியாது இதுவே தங்கள் வெற்றி ....... - தங்கையா
காதலித்துப் பார் காதலித்துப் பார்! உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவிதை வரும்... கையெழுத்து அழகாகும்..... தபால்காரன் தெய்வமாவான்... உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்... கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்... காதலித்துப்பார் ! தலையணை நனைப்பாய் மூன்று முறை பல்துலக்குவாய்... காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்... வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்... காக்கைகூட உன்னை கவனிக்காது ஆனால்... இந்த உலகமே உன்னை கவனிப்பதாய் உணர்வாய்... வயிற்றுக்கும் தொண்டைக்கமாய் உருவமில்லா உருண்டையொன்று உருளக் காண்பாய்... இந்த வானம் இந்த அந்தி இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம் காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் காதலித்துப் பார்! இருதயம் அடிக்கடி இடம் மாறித் துடிக்கும்... நிசப்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்... உன் நரம்பே நாணேற்றி உனக்குள்ளே அம்புவிடும்... காதலின் திரைச்சீலையைக் காமம் கிழிக்கும்... ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும் உதடுகள் மட்டும் சகாராவாகும்... தாகங்கள் சமுத்திரமாகும்... பிறகு கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்... காதலித்துப் பார்! சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே... அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே... அதற்காகவேனும்... ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும் அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே.. அதற்காகவேனும்... வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே செத்துக் கொண்டே வாழவும் முடியுமே... அதற்காக வேணும்... காதலித்துப் பார்!
அன்புத் தோழியே உங்களின் குரலே ஓர் கவிதைதான். வைரமுத்து அவர்களின் கவிதைத் தொகுப்பு மிகவும் இனிமை. சிறு வேண்டுகோள் Background இசையின் அளவு சற்றே குறைவாக இருந்தால் வைரமுத்து அவர்களின் வரிகளை நன்கு ரசிக்கலாம். நன்றி.
வைரமுத்து இந்த வைரத்தின் பேனா மட்டும் எப்போதும் அழகான வரிகளை பிரசவிக்கும் .
கவிதையை கிரகிக்க முடியாமலும் ரசிக்க முடியாமலும் பின்னனி இசை கெடுக்கிறது..
மகிழ்ச்சி
அற்புதமான கவிக்கு அழகாய் பின்னூட்டம் 👌
இந்த கவிதைகளை கேக்கும் போது மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி
கவியரசு வைரமுத்து அவர்களின் மனதில் கருக்கொண்டு பிரசவிக்கும் எழுத்துக்குழவிக்கு நான் அடிமை
நேரமிருந்தால் என் கவிதைக்கு ஆதரவு தாருங்ஙள் தோழர்...
ruclips.net/video/CGQr_6MqMwo/видео.html
super
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கண்கள் பார்வை
அடையும்...!
காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
இதயம் துடிக்க
துவங்கும்...!
மனித பிணங்கள்
எழுந்து நடக்கும்....!
சமூக அவலம்
நெருப்பில் சாகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
பாமரன் கவிஞன் ஆவான்....!
எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
அறியாமை தீ
அணைந்து போகும்...!
அறிவாளியாகி
அனைத்தும் பெறுவான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கடலில் எறிந்தால் மீனாக நீந்துவான்...!
வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
புவி ஈர்ப்பு....
சக்தி இழக்கும்...!
எழ முடியாதவனுக்கு
சிறகு முளைக்கும்....!
நட்சத்திரங்கள் எல்லாம் இவனை அண்ணாந்து பார்க்கும்...!
தூரம் -
நேரமெல்லாம் காணாமல் போகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
உங்கள் கவிதைகளில் குளிக்கக் கூட முடியுமா? குளித்தேன் குளிக்கும் போது சூட்டில் வெதுவெதுத்தேன் பின்னர் குளிரில் வெடவெடுத்தேன்.வைரக்கவியே!
தேன் கவிதைக்கு
சொந்தக்காரன் - எம்
தேனிக் காரன்
என்பதில் எனக்குத் தனிக் கர்வம் ......
இதுவரை பெற்றக்
கவிக் குழந்தைகளில் ...
வைரமாய் ஜொலிக்கின்றான்
வைர முத்து என்றெண்ணி ....
தமிழ் தாய் பூரித்துப் போகின்றாள் ......
தங்கள்
தமிழ் கேட்டு ......
இனி வரும்
கவி எவனும்
தங்கள் கவிதைகளின்
நுனி அளவு பாதிப்பு இன்றி ....
எழுத முடியாது
தமிழோடு
இயஙக முடியாது
இதுவே
தங்கள்
வெற்றி .......
- தங்கையா
உண்மை....!
காதலித்துப் பார்
காதலித்துப் பார்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....
உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !
தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும்
தொண்டைக்கமாய்
உருவமில்லா
உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம்
இந்த அந்தி
இந்த பூமி
இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!
இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!
சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!
ஐ லைக் திஸ் இஸ் .... கவிதை நன்றி.... ❤
உங்கள் குரலில் சாதாரண வார்த்தைகளும் சங்கீதம் பாடுகிறது.. வாழ்த்துக்கள் தோழி..
Super🎉
Ur voice n present super mam.
அற்புதமான உங்களின் குரல்வளம்
கவிதை வரிகளில் சற்று தேன் தெளித்து மேலும் இனிக்கச்செய்கிறது.
வாழ்த்துக்கள் சகோதரி...
விறகு
அவன்
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?
கொண்டையில் பூமணக்கக்
கொசுவத்தில் நான்மணக்கத்
தண்டையில ஊர்மணக்கத்
தங்கமயில் போறதெங்கே?
தூக்குச் சட்டியில்ல
தொணைக்குவர யாருமில்ல
காலுக்குச் செருப்புமில்ல
காட்டுவழி போறதெங்கே?
அவள்
தூண்டிமுள்ளுக் கண்னழகா
தூரத்தில் பேரழகா
போறவளக் கேலிசெய்யும்
புளியவிதைப் பல்லழகா
முருக மலைமேல
முள்விறகு நானெடுக்க
பொழப்பு நடக்கணுமே
புறப்பட்டேன் கால்கடுக்க
ஒம்பொழப்பு தரையோட
எம்பொழப்பு மலையோட
நெத்திவெயில் பொழுதாச்சு
நேரமில்லை விளையாட
எட்டுமேல எட்டுவச்சு
எட்டுமைல் நான்நடந்தா
உச்சிப் பொழுதுவரும்
உள்நாக்கில் தாகம்வரும்
செத்தஎலி மிதந்தாலும்
செல்லாத்தா சுனைத்தண்ணி
உள்நாக்க நனைக்கையிலே
உசுருக்கு உசுருவரும்
கோடைவெயில் சுட்டதிலே
கொப்புளந்தான் மெத்தவரும்
கொப்புளத்தக் கற்பழிச்சுக்
குச்சிமுள்ளு குத்தவரும்
இண்டம் புதர் இழுக்கும்
எலந்தமரம் கைகிழிக்கும்
பொத்தக் கள்ளிமுள்ளு
பொடவையில நூலெடுக்கும்
பொசுக்கென்று மழைவருமோ?
போகையிலே புயல் வருமோ?
காஞ்சமரம் வெட்டையிலே
ரேஞ்சர் வருவானோ?
எங்கிருந்தோ பயம்வந்து
எச்சில் உலந்திவிடும்
மாத விலக்கானாலும்
பாதியில் நின்னுவிடும்
வேறகு வெட்டும் அரிவாளோ
வேறகவிட்டு வெரலுவெட்டும்
கத்தாழை நார்தானே
கடைசியிலே கயிறுகட்டும்
கட்டிவச்ச வேறகெடுத்து
நட்டுவச்சு நான்தூக்க
நலுங்காமத் தூக்கிவிட
நானெங்கே ஆள்பார்க்க?
இடுப்புப் புடிக்க
எங்கழுத்துக் கடுகடுக்க
மந்தைவந்து நான்சேர
மாலை மசங்கிவிடும்
மந்தையில வெறகவச்சா
மங்கையைத்தான் பாப்பாக
பச்சை விறகாச்சேன்னு
பாதிவெலை கேப்பாக
கேட்ட வெலைக்குவித்துக்
கேழ்வரகு வாங்கிக்கிட்டு
முந்தாநாள் கத்தரிக்கா
முந்தியில ஏந்திக்கிட்டுக்
குடிசைக்கு நான்போனாக்
குடிதண்ணீர் இருக்காது
என்வீட்டு அடுப்பெரிக்க
எனக்கு விறகிருக்காது
நன்றி்..
கோடி நன்றிகள் உங்களுக்கு... ✨✨✨
தமிழ் /தென் தமிழ்/தேன் தமிழ்/என்ற ஆக /கவிதை மழையில்!!!
சொன்ன நம்ப மாட்டீங்க இதுல அவர் சொன்ன மாதிரித்த என் வாழ்கையும் இருக்கு
❤❤
yetho anubavichu eluthinathu polaaa,,,,,, unarchiyoda uyirottamanathu ka vithai,...!
Vaira. Varigal
அன்புத் தோழியே உங்களின் குரலே ஓர் கவிதைதான். வைரமுத்து அவர்களின் கவிதைத் தொகுப்பு மிகவும் இனிமை. சிறு வேண்டுகோள் Background இசையின் அளவு சற்றே குறைவாக இருந்தால் வைரமுத்து அவர்களின் வரிகளை நன்கு ரசிக்கலாம். நன்றி.
6:58
கவிதையை ரசிக்க முடியாத படி music sound அதிகமாகி எரிச்சல் ஆகுது