நம்பிக்கையூட்டும் அழகிய நினைவூட்டல்கள்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- நம்பிக்கையை மேற்கொள்வோம், ஒவ்வொரு தருணமும் நம்மை சீர்படுத்திக் கொள்ள தயாராக இருப்போம்,
ஏக இறையோடு தொடர்பை நிலைநாட்டிக் கொண்டே இருப்போம்,
நமது பலவீனத்தால் ஏற்படும் கலங்கங்களை நீக்க, பலவீனத்தை ஒப்புக்கொண்டு மீட்சி தேடியவர்களாக, விடுபட்டுப்போன ஆத்மார்த்த இறைதொடர்பை மீண்டும் நிலைநாட்டி, தூய்மையைக் கொண்டுவந்தபடி இருப்போம்.
இவ்வாறாக நாம் தயாராகையில் சமாதானமான தெளிவும், வழிகாட்டுதல்களும் நம் வாழ்வில் அழகிய முறையில் மலரும். அருள்மிக்க நேரானதொரு பாதை நம்முள் மெல்ல மெல்ல நிலைக்க ஆரம்பிக்கும்.
நிதானத்தை மேற்கொள்வோம். சிறிய விஷயமாக இருந்தாலும், அது நன்மையாக இருந்து, அதை செய்யக்கூடிய வாய்ப்பு நமக்கு வருகையில், அதனை பயன்படுத்திக் கொள்வோம். நன்றியுணர்வோடு நன்மையாக்கித் தருவாயாக என்ற எண்ணத்தைக் கொண்டு.
நன்மைக்கு கண்டிப்பாக நன்மையுள்ளது, அதுவே நமக்கான நல்லதொரு மறுமை.
நம்பிக்கையூட்டும் நினைவூட்டல் நம் சிந்தனைக்கு:
நம்மையடுத்து என்ன இருக்கிறது என வழிதெரியாத இருண்ட இரவுகளில் கூட, சூரியன் மீண்டும் உதிக்க வைக்கப்படுகின்றது. இதை நாம் ஒவ்வொருவரும் சான்றுபகர்கின்றோம்.
அகிலங்கள் அனைத்தையும் பரிபாலிப்பவனின் வழிகாட்டுதலில்தான் நமக்கான புகலிடமுள்ளது.
அருமையான விளக்கம் மிகவும் தெளிவாக இருந்தது.