தோணுகால் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோணுகால் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் தலைமையில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் வருகின்ற ஜனவரி 6ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில் இந்த கிராம சபை கூட்டம் ஐந்து ஆண்டுகளில் கடைசி கிராம சபை கூட்டமாக கருதப்பட்டு தோணுகால் ஊராட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் ஆப்ரேட்டர்கள், வார்டு கவுன்சிலர்கள், மக்கள் நல பணியாளர்களுக்கு தோணுகால் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் கலந்து கொண்டு முன்மாதிரி கிராமமாக செயல்பட்டு வரும் தோணுகால் ஊராட்சியின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் தோணுகால், சந்திரன்குளம், வலையங்குளம், புளியம்பட்டி போன்ற கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.