எந்நாளுமே துதிப்பாய் || Tamil Christian Song || Worship songs || Jesus Never Fails || Lyric video
HTML-код
- Опубликовано: 23 янв 2025
- JESUS NEVER FAILS
TAMIL CHRISTIAN SONG
TAMIL WORSHIP SONGS
LYRICS:
எந்நாளுமே துதிப்பாய் - என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது
பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ? பாழான நோயை அகற்றி குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
எத்தனையோ கிருபை, உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி, நேயமதாக ஜீவனை மீட்டதால்.
நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய் நன்மையாலுன் வாயை; உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு, ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.
தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.