மறையுரை | Fr. G. Kanikai Raj | அற்புத குழந்தை இயேசு அருள்தலம் | Pallikaranai | The Homily | Sermon

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • பொதுக்காலம் 17ஆம் வாரம் - வியாழன்
    முதல் வாசகம்
    குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.
    இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6
    எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: “நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்."
    எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார்.
    அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: “இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.”
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    பதிலுரைப் பாடல்
    திபா 146: 1-2. 3-4. 5-6
    பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்.
    அல்லது: அல்லேலூயா.
    என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
    நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். - பல்லவி
    ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
    அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். - பல்லவி
    யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
    அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! - பல்லவி
    நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
    திப 16: 14b
    அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தை திறந்தருளும். அல்லேலூயா.
    நற்செய்தி வாசகம்
    நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர்.
    ✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53
    அக்காலத்தில்
    இயேசு மக்களை நோக்கிக் கூறியது: “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்."
    “இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?” என்று இயேசு கேட்க, அவர்கள், “ஆம்” என்றார்கள். பின்பு அவர், “ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்” என்று அவர்களிடம் கூறினார்.
    இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
    ஆண்டவரின் அருள்வாக்கு.
    #மறையுரை_சிந்தனைகள் #மறையுரை #மறைக்கல்வி #christ #christian #Jesuschrist #verseoftheday #ourladyoffathima #vailankannishrine #sermon #sermons #homily #bernat #carmel #christiansermons

Комментарии • 2

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 2 месяца назад

    உங்கள் மறையுரைகள் அனைத்தும் அருமை இறைவனுக்கு நன்றி ❤❤

  • @MerryMerry-nj9sb
    @MerryMerry-nj9sb 2 месяца назад

    நன்றி பாதர் ❤❤❤ இறைவனின் கரத்தில் எப்பொழுதும் களிமண்ணாக இருக்கவே விரும்புகிறேன் praise the Lord