திங்களை போற்றுதும்! திங்களை போற்றுதும்! கொங்கு அலர்தார்ச் சென்னிக் குளிர்வெண் குடைபோன்றுஇவ் அம்கண் உலகு அளித்தலான். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்! காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேரு வளம் திரிதலான். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்! நாம நீர்வேலி உலகிற்கு, அவன் அளிபோல் மேல்நின்று தான் சுரத்தலான் பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும் ! (10) வீங்கு நீர்வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கி பரந்து ஒழுகலான். இதை படித்ததும் உங்கள் மனது “இதை எங்கோ படித்திருக்கிறோமே’ என்று நினைவோடு போராடும் முன் இதோ கூறுகிறேன் விடையை :ஆம் , தமிழை முதல் படமாக எடுத்த அனைவரும் இதை பள்ளியில் படித்திருக்கிறோம். பாடல் பொருள் இந்த உலகை ஒரு வெள்ளை குடை கொண்டு காப்பதால் அந்த நிலவை போற்றுவோம். அந்த மலையை சோழனின் சக்கரம் போல் வலம் வருவதால் அந்த ஆதித்தனை போற்றுவோம். கடல் சூழ்ந்த இந்த உலகிற்கு நீர் வளம் அருள்வதால் அந்த மழையை போற்றுவோம். சோழ குலத்தை போல் பரந்து விரிந்திருப்பதால் நம் பூம்புகார் நகரை போற்றுவோம் . குறிப்பு: இந்த பாடலில் சந்திரன் ,சூரியன் மழை,வாழும் நகரம் என போற்றுகிறார்கள்.கடவுள் வாழ்த்து என்று தொடங்குவது தானே வழக்கம்? நம் தமிழ் புத்தகங்கள் கூட அவ்விதம் தானே தொடங்கியது? இளங்கோவடிகள் சமண சமயத்தை தழுவியவர் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்ற கூற்று உண்மையாக இருப்பின் சோழர்களை புகழ்ந்து எழுதி இருப்பது ஆச்சரியமே !! புகார் நகர் சிறப்பு ஆங்கு, பொதியில் ஆயினும் இமயம் ஆயினும் பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும் நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை ஒடுக்கம் கூறார் உயந்தோர் உண்மையின் முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே. பாடல் பொருள்: பொதிகை இமயம் போல எல்லாத் தேவைகளும் எப்போதும் கிடைப்பதால் யாரும் இடம்பெயராத பழங்குடிகள் வாழும் சிறப்புடைய புகார் நகரம் அழியாது என்றும் இருக்கும் என்பர் பெரியவர்கள். எல்லாத் துறைகளிலும் சிறந்த அறிவாளிகள் அங்கு வாழ்வதால்.
Great work from arr
திங்களை போற்றுதும்! திங்களை போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னிக் குளிர்வெண் குடைபோன்றுஇவ்
அம்கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு
மேரு வளம் திரிதலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!
நாம நீர்வேலி உலகிற்கு, அவன் அளிபோல்
மேல்நின்று தான் சுரத்தலான்
பூம்புகார் போற்றுதும்! பூம்புகார் போற்றுதும் ! (10)
வீங்கு நீர்வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கி பரந்து ஒழுகலான்.
இதை படித்ததும் உங்கள் மனது “இதை எங்கோ படித்திருக்கிறோமே’ என்று நினைவோடு போராடும் முன் இதோ கூறுகிறேன் விடையை :ஆம் , தமிழை முதல் படமாக எடுத்த அனைவரும் இதை பள்ளியில் படித்திருக்கிறோம்.
பாடல் பொருள்
இந்த உலகை ஒரு வெள்ளை குடை கொண்டு காப்பதால் அந்த நிலவை போற்றுவோம்.
அந்த மலையை சோழனின் சக்கரம் போல் வலம் வருவதால் அந்த ஆதித்தனை போற்றுவோம்.
கடல் சூழ்ந்த இந்த உலகிற்கு நீர் வளம் அருள்வதால் அந்த மழையை போற்றுவோம்.
சோழ குலத்தை போல் பரந்து விரிந்திருப்பதால் நம் பூம்புகார் நகரை போற்றுவோம் .
குறிப்பு:
இந்த பாடலில் சந்திரன் ,சூரியன் மழை,வாழும் நகரம் என போற்றுகிறார்கள்.கடவுள் வாழ்த்து என்று தொடங்குவது தானே வழக்கம்? நம் தமிழ் புத்தகங்கள் கூட அவ்விதம் தானே தொடங்கியது?
இளங்கோவடிகள் சமண சமயத்தை தழுவியவர் என்பது இதற்கு காரணமாக இருக்கலாம். மேலும் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்ற கூற்று உண்மையாக இருப்பின் சோழர்களை புகழ்ந்து எழுதி இருப்பது ஆச்சரியமே !!
புகார் நகர் சிறப்பு
ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய
பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை
ஒடுக்கம் கூறார் உயந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுது உணர்ந்தோரே.
பாடல் பொருள்:
பொதிகை இமயம் போல
எல்லாத் தேவைகளும் எப்போதும் கிடைப்பதால்
யாரும் இடம்பெயராத பழங்குடிகள் வாழும்
சிறப்புடைய புகார் நகரம் அழியாது
என்றும் இருக்கும் என்பர் பெரியவர்கள்.
எல்லாத் துறைகளிலும் சிறந்த அறிவாளிகள்
அங்கு வாழ்வதால்.