😭 மிகச்சிறந்த விழியமிது. காஃப்காவை தாங்கள் உள்வாங்கி, எங்கள் உணர்வுகளில் உட்புகுத்திய விதம் அற்புதம். காணொளி நகர நகர என் விழிகளின் ஓரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். கசிவது கண்ணீர் தானா..இரத்தமா என்று.. நாடெங்கும் உலகெங்கும் வீசும் இரத்தவாடை என் அமர்விடத்தைச் சுற்றி வீசுகிறது. குப்பென்று அடிவயிற்றிலிருந்து வெடித்து கிளம்பிய வேதனைச் சிரிப்பு.. உலகைக் கடைத்தேற்றும் என்று நம்பிய கோட்பாடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாகி விட்டன...இல்லை.. இல்லை..அந்த "கோட்பாட்டுச் செயல்வீர்களெல்லாம்" தடம் மாறி, எட்டுத்திக்கும், உடைந்த கண்ணாடிச் சிதறலாகிவிட்டனர். ஐயகோ!! இவர்களைத் தலைவர்களென, தோழர்களென பின்பற்றிய செம்மறிகள் பாவம். சாதி,மதம் இன்றி மனித நேயத்துடன் மனிதர்கள் ஒன்று படக்கூடாதா?மனிதர்கள் வாழ முடியாதா? வாழக்கூடாது, என பல்வேறு வழிகளில் நிந்தனை செய்கிறது இச்சமூகம், காலை சுற்றிய கருநாகம் போல. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கருத்துக்களை கூற இங்கே சுதந்திரம் இல்லை. சாவுக்காக நிறைய மனிதர்கள் எவருக்கும் பயனின்றி, நல்ல அனுபவங்களை சுமந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் முகமூடிகளை அணிந்து கொள்ளும் மனிதக் கூட்டம்.. பகுத்தறிவு சாதி மறுப்பு முகமூடி, ஜனநாயகம் புரட்சிப் பேசும் முகமூடி, ஆன்மீகத்தை அன்பை பேசும் முகமூடி, "உண்மை" பேசும் முகமூடி இவ்வாறு உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என பல்வேறு முகமூடிகளால் உலகமே நிரம்பி வழிகிறது. கடவுளர்களும் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை கடவுள் எதுவென்று எவருக்கும் தெரியவில்லை!! மிர்தாதாகவும், மைக்கேல் நெயோமியாகவும் வாழ்பவர்களின் வாழ்க்கை பேரவலம். முகமூடி அணியாதவன் முட்டாளாகி விடுகிறான். இல்லை. பெரிய கரப்பான் பூச்சி ஆக்கப்பட்டு விடுகிறான். ஆம், அவர்களுள் நானும் ஒருவன். ஐயா, நன்றி.
ஐயா நீங்கள் பல தத்துவங்களையும்,பலரின் நூல்களையும் விளக்குவது மிக அருமை.அதிலும் உங்கள் உள்ளார்ந்த நம்பிக்கைகளையும் மிக நுட்பமாக இடையில் இணைத்து அதுதான் மிக சிறப்பு என உணரச்செய்ய முயல்வது மிக அருமை.நன்றி.
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்🎉 எங்கள் நட்பு வட்டாரங்களின் வாழ்க்கையை இன்றைய தேதி வரை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிய படைப்பாளிகளுள் இவரும் உண்டு. இவருடைய படைப்புகள் எங்களுடைய வாழ்க்கையை இன்றளவும் செதுக்கிக்கொண்டேயிருக்கின்றது❤❤❤❤❤❤❤❤. காணொளி வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉. சமயம்..... கடவுள்.... வழிபாடுகள்..... புனிதம்..... ஆன்மீகம்.... ஆத்மா.... போன்ற கற்பிதங்களைத் துணிச்சலுடன் கட்டுடைத்தவர் அவர். ஆனால்,. அந்தத் துணிச்சலை இன்றைக்கு நாம் பொதுவெளியில் அவ்வளவு எளிதாகவெல்லாம் பேசிவிட இயலாது. ஏனென்றால்,, மனித இனம் கடவுளின் பெயரால்.... சமயத்தின் பெயரால்.... புனிதங்களின் பெயரால்... ஆன்மீகத்தின் பெயரால்.... சடங்குகள்..சம்பிரதாயங்கள்....வழிபாடுகள்....மூட நம்பிக்கைகளின் பெயரால் 😢😢😢😢அடிமைத்தனத்திற்குள் சிக்கி சீர்கெட்டுப்போய்கிடக்கின்றது😢😢😢😢😢😢😢😢😢😢 இயல்பான வாழ்க்கையை வாழ இந்த கற்பிதங்கள் நம்மை அனுமதிப்பதேயில்லை.😮😮😮😮😮😮 நன்றி.
When I was very young below the age of 10, I have seen a serial which was based on this story in doordarshan. After seeing this video I came to know this is the story of Kafka. For few days I even feared every night, tomorrow I may also become like this creature. Thanks sir for the nostalgia.
For me,your philosophical exploration is different level in the realm of philosophy as you are taking us to different philosophers to understand the philosophical concepts clearly. Thank you sir.
Thank you sir. We had metamorphosis and trail tamil translation at our home, but I couldn't read more than15 to 30 pages of these two books. You explained these things very well. Good service to me & people like me. I have then and then know about Kafka, existentialism. But your discourse is good. Self alienation is very much prevails even in free democratic states due to rigid institutional structure and ibstitution of family.. This discourse gave solace to mind. Whether we can avoid these kind of experiences of alienations is million dollar question. It is how the life is. For Simple humans to endure it or otherwise get freedom in death by Natural way only. 16-12-23. Thanks.
மனித இனம் உணவு இன்றிகூட பல நாள் வாழ்ந்து விடலாம்.. ஆனால் உறவின்றி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது... ஒருவன் தான் தனக்காக ஒரு போதும் வாழமுடியாது அப்படி வாழவேண்டிய சூழ்நிலைக்கு ஒருவர் தள்ளப்பாட்டால் ஒன்று அது அவரால் தனக்கு தானே கொடுக்க ப்பட்ட தண்டனை.. அல்லது அந்நிலையை அவருக்கு அவரின் குடும்பத்தாரல் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம்... இவ்வுலகம் ஏற்படுத்தி வைத்த மதிப்பீடுகளை தாண்டி வாழ்ந்ததால்.. இந்த தண்டனை.. எது எப்படியோ அவ்வாழ்க்கை கரப்பானின் வாழ்க்கை க்கு ஒப்பாகும்... வாழ்வில் இப்படி பட்ட கரப்பான் வாழ்க்கை வாழும் மனிதர்கள் விசாரணையற்ற கைதிகளாகவே வாழ்ந்து நிதி கிடைக்காமலே மரணத்தை தழுவி விடுகிறார்கள்... எனவேதான் மரணம் ஒரு விடுதலையைக் கொடுக்கும் என இன்றும் பல மனிதர்கள் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்... இப்படி ப்பட்ட கரப்பான் வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை புதுபித்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. தன்னைஅறிய..சுயம் குறித்து அறிய.. தன் மாயக் கோட்டையில் இருந்து வெளியே வர வேண்டும்...... சுய மதிப்பீடுகளை.. விழுமியங்களை உடைத்து எறிந்து.... இருத்தலியல் மனித சமுதாயத்தினை அடக்கி கட்டிப் போட்டுள்ள சமுதாய கோட்பாடுகளாகிய சங்கலிகளை மிகப்பெரிய சம்மட்டி கொண்டு அடித்து உடைத்து விடுதலை பெற சில வழி வகை செய்கிறது.... அது தான் உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் நி உலகத்தில் போராடலாம.. உயர்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நி வாழலாம்...
Castle என்றால் கொத்தளம் என்று கொள்ளலாம். தமிழில் கோட்டை கொத்தளம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு. கோட்டை என்பது அனைவரும் அறிந்ததே. இதுவே ஆங்கிலத்தில் fort எனப்படும். பொதுவாக பெரிய அளவில் சிறு குன்றுகள் மேல் எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி உயர்ந்த மதில்கள், உடைக்க முடியாத கதவுகள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு கட்டிடம். உள்ளே மாளிகைகளும் மற்றும் பல அரசுக் கட்டிடங்களும் இருக்கும். பல கோட்டைகள் காலப்போக்கில் அழிந்து விட்டாலும் செஞ்சி, கோல்கொண்டா போன்ற கோட்டைகள் இன்றும் தென் இந்தியாவில் பிரசித்தி பெற்றவை. ஆனால் கொத்தளம் என்றால் என்ன, எப்படி இருக்கும் என்பது பலரும் அறியாதது. இதுவே ஆங்கிலத்தில் castle எனப்படும். கோட்டை போன்று பெரிதானது அன்று, பெரிய மதில்கள் இருக்காது. ஆனால் இதுவும் பார்க்க சிறு கோட்டை போலவும் இருக்கும். பொதுவாக கோட்டை அரசுக் கட்டிடம் என்றால் கொத்தளங்கள் மந்திரிகளும் பிரபுக்களும் வசிக்கும் கட்டிடங்களாகும். இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் நிறைய castleகள் எனப்படும் கொத்தளங்கள் இருக்கின்றன.
சரளமான நடை.இருத்தல்...உறுத்தல்...போன்ற ஆழமான கருத்துக்கள் ரத்தினச் சுருக்கம்.தத்துவப் படைப்புகளை விறு விறுப்பாக சுவையாக Cross references உடன் கொண்டு கூட்டி சொல்வது சிறப்பு ங்க சார்
Sir, your philosophical hermeneutic exploration, interpretation on his novel is excellent and inspired. It is very special and useful for philosophical encounter with hermeneutic interpretation Thank you sir.
An outstanding series about things/thoughts that are considered difficult. I appreciate you and your team's tremendous hard work. I also appreciate the views whose interest sustains this project. Hats off to you sir...
வெற்றியென்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி அல்ல. நீ வெல்வதனால் உனது மன அமைதியும் சுதந்திரமும் பறிபோகும் என்றால் உனக்கேன் அந்த வெற்றி? வேண்டாம் விட்டுவிடு, அந்த பட்டுக் குருவியைப் போலே! வெல்வதெல்லாம் வெற்றியல்ல, தோற்பதெல்லாம் தோல்வியல்ல!! பலர் வென்றும் தோற்கிறார்கள், வெகு சிலர், வெகு சிலர் மட்டும் தோற்றும் வெல்கிறார்கள்!!! வெற்றிதான் இலக்கு என்றால், அதன் அர்த்தம் என்ன என்பதை அறிந்து வைத்திரு, அர்த்தமே இல்லாத வெற்றிகள் உனக்குத் தேவையில்லை!!!! .. 09.01.2024
I rate this episode as most brilliant. I veer around to the view based on my experience and your final analysis on “ alienation” and “Shunya Trap” that existentialism framework while providing insight into our lives and purpose lead many of my friends into nihilism, negativity and suicidal tendencies out of frustration. Please issue an alert as most youth get influenced easily.
sir im your one of the admirer.... espescialy for your philosophical teacher (like a social teacher). please take care of your health because while you speak it seems you are having Shortness of breath slightly.........
நல்ல காணொளி. மிக்க நன்றி. பிரதரிக் நீட்சாவுக்கு முன்னரே இருத்தலிய கருத்துக்களை முன் வைத்து கதைகளையும் காவியங்களையுமே எழுதியவர் தான் பியதோர் தஸ்தாயெவ்ஸ்க்கி (Fyodor Mikhailovich Dostoevsky). அவருக்கும் முன்னரே சோரேன் கியர்க்கேகார்ட் (Søren Kierkegaard). ஆக நீட்சா தான் முதன்முதலாக இக்கருத்தியலை முன் வைத்தார் என்பது சரியாகாது. அதில் ஆழமாக பயணித்திருப்பார் என்று வேண்டுமானால் கூறலாம். அவரை விட ஜான் பால் சார்தே. தஸ்தாயெவ்ஸ்க்கியின் மீது இறைமறுப்பாளாராக இருந்த நீட்சாவும் சரி, ஆல்பர்ட் கமூவும் சரி, வைத்திருந்த அபிமானமும் மரியாதையுமே இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும்.
Sir it would be nice if you translate these kind of videos in hindhi and english.It would beneficial to lot of people who has difficulty in understanding tamil.videos of this quality should be made into other languages to cater the rational minds.Hope you will take as a request
This is the 31st death anniversary of one of our friend a working lady at the prime of young age, life ended by suicide caused by the alienation. The discourse seems to well suited at her 31st death anniversary. 16-12-23
Deeper Connect Sir.Often trapped into angst or dread or kind off. Nature including plants and animals, children, innocence in people give solace and pull me back , maybe to this- another necessary conditioned trap
Dear sir, Many thanks that you gave a cockroachian philosophy of human existence. You have done a decent act of omnipresent கரப்பான் in a way that emancipates life in whole. Life goes on and on whether we like it or not. But creators like Kafka is omnipresent in soul of human existence. He lives on for ever like cockroach which can never be destroyed or eliminated from existence for sure. We should emulate cock in every sphere of life to combat hate, injustice, jealousy, greed, loquacious crowds. I am looking forward to Kafka on the shore aswell. Selvaraj r
If we want society should spin into nihilism and madness Existential philosophy will facilitate. If positive energy should flow indulge in Vedanta. Intellectuals may not suggest this perhaps due to their “ conditioning” by Western philosophies like Existentialism or Marxism. Unleash your innate potential by adopting positive vibes . Good for individual and society even if it is based on certain” fictional” values as in reality every philosophy can be questioned and ripped apart.
So, a kid comes back from school & doesn't do any home work, nothing for several days. The teacher keeps asking him on the whys. One day, the kid says that he read most of the existentialists & so understood that life has absolutely no meaning, after all & so, stopped doing everything including the home work!. The teacher informs the parents & somehow they all bring the kid back to normal life, whatever that is!. Very Depressing to know on these existentialists' views on life tho I haven't read any of them, myself, fortunately or unfortunately. MeenaC:-)
ஜோன் போல் சார்தரின்”குமட்டல்” நாவல், காம்யுவின் ஒரு பெரும் கல்லை ஒருவன் மலையை நோக்கி நகர்த்தி உருட்டிவிடும் நாவல் அதேபோல் நீட்ஷேயின்”ஜொரதுஷ்டன் இவ்வாறு கூறினான்” என்ற நாவல், ஜிப்ரானின்”இறை தூதர்” என்ற படைப்பு, இவைகளைடன் முகம்மது நபி(ஸல்) அவர்களின் போராட்ட பயணம்(ஹிறா குகையில் இருந்து 10 லட்சம் சதுர மைலை ஆட்சி செய்யும் ஒரு தலைவனாக மாறியது வரை), அவ்வாறே புத்தரின் உள்நோக்கிய தேடல்( அரச மாளிகையில் இருந்த இளவரசன் எல்லாவற்றையும் துறந்து ஓர் புத்தனாக மாறுதல்), மற்றும் தாவோவின் பயணம், காந்தி,மாவோ, மாக்ஸ் ,சேகுவேரா போன்றோரின் அரசியல் பயணம் மற்றும் அண்மைய நிகழ்வுகளாகிய தலிபான்களின் நவ-ஏகாதிபத்தியத்திற்கெதிரான காலனியநீக்க போராட்டம் அதேபோல் ஹமாஸின் ஏகாதிபத்திய சியோனிஸத்திற்கெதிரான காலனியநீக்க விடுதலை போராட்டம் என்பன போன்றவற்றை ஒப்பிட்டு ஓர் கானொளி போடுவீர்கள் என்றால் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நிச்சியமாகத்தெறியும் இது கடுமையாக உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்று என்று❤
வாழ்க்கை அபத்தமானது என்பதும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதும் ஒருவருடைய மனதைப் பொருத்தது. இந்தக் காணொலி முதல் வகையைச் சேர்ந்ததே. Depressive disorder is a disease in the mind. Unfortunately this disease is not recognised by the sufferer themselves; not recognised by the family members also. Consequence of this is suicidal death. Feeling of “worthlessness” and “social isolation” are characteristic of this disorder. I found many Indian and Western Philosophers lost any of their parents before taking their new path in life.(including Gautam Buddha, Ramana and many others as I listened to you). This is reactive depression. I suggest you to consider a discussion with a Psychiatrist on the Philosophical aspects of the Depressive disorder and the evil effects of the non-recognition to the individual and to the society.
where has gone your God During Covid ? Science helped to protect our life No one God got down to earth to save us. God is a profitable business forever.
😭 மிகச்சிறந்த விழியமிது. காஃப்காவை தாங்கள் உள்வாங்கி, எங்கள் உணர்வுகளில் உட்புகுத்திய விதம் அற்புதம்.
காணொளி நகர நகர என் விழிகளின் ஓரத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். கசிவது கண்ணீர் தானா..இரத்தமா என்று.. நாடெங்கும் உலகெங்கும் வீசும் இரத்தவாடை என் அமர்விடத்தைச் சுற்றி வீசுகிறது. குப்பென்று அடிவயிற்றிலிருந்து வெடித்து கிளம்பிய வேதனைச் சிரிப்பு.. உலகைக் கடைத்தேற்றும் என்று நம்பிய கோட்பாடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாகி விட்டன...இல்லை.. இல்லை..அந்த "கோட்பாட்டுச் செயல்வீர்களெல்லாம்" தடம் மாறி, எட்டுத்திக்கும், உடைந்த கண்ணாடிச் சிதறலாகிவிட்டனர். ஐயகோ!! இவர்களைத் தலைவர்களென, தோழர்களென பின்பற்றிய செம்மறிகள் பாவம்.
சாதி,மதம் இன்றி மனித நேயத்துடன் மனிதர்கள் ஒன்று படக்கூடாதா?மனிதர்கள் வாழ முடியாதா? வாழக்கூடாது, என பல்வேறு வழிகளில் நிந்தனை செய்கிறது இச்சமூகம், காலை சுற்றிய கருநாகம் போல. உள்ளத்தில் ஊற்றெடுக்கும் கருத்துக்களை கூற இங்கே சுதந்திரம் இல்லை. சாவுக்காக நிறைய மனிதர்கள் எவருக்கும் பயனின்றி, நல்ல அனுபவங்களை சுமந்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் முகமூடிகளை அணிந்து கொள்ளும் மனிதக் கூட்டம்.. பகுத்தறிவு சாதி மறுப்பு முகமூடி, ஜனநாயகம் புரட்சிப் பேசும் முகமூடி, ஆன்மீகத்தை அன்பை பேசும் முகமூடி, "உண்மை" பேசும் முகமூடி இவ்வாறு உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என பல்வேறு முகமூடிகளால் உலகமே நிரம்பி வழிகிறது. கடவுளர்களும் பல்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை கடவுள் எதுவென்று எவருக்கும் தெரியவில்லை!! மிர்தாதாகவும், மைக்கேல் நெயோமியாகவும் வாழ்பவர்களின் வாழ்க்கை பேரவலம். முகமூடி அணியாதவன் முட்டாளாகி விடுகிறான்.
இல்லை. பெரிய கரப்பான் பூச்சி ஆக்கப்பட்டு விடுகிறான். ஆம், அவர்களுள் நானும் ஒருவன்.
ஐயா, நன்றி.
கவலைப்பட வேண்டாம் தோழரே....
எங்கள் நட்பு வட்டாரங்களும்....
தங்களுடைய மனநிலையில்தான் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்😢😢😢
என்ன செய்ய 😮
நன்றி.
100 முறை கேட்டாலும் சலிக்காத வீடியோ....இருப்பின் வலி..😢😢😢
ஐயா நீங்கள் பல தத்துவங்களையும்,பலரின் நூல்களையும்
விளக்குவது மிக அருமை.அதிலும் உங்கள்
உள்ளார்ந்த நம்பிக்கைகளையும் மிக நுட்பமாக
இடையில் இணைத்து அதுதான் மிக சிறப்பு
என உணரச்செய்ய முயல்வது மிக அருமை.நன்றி.
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்🎉
எங்கள் நட்பு வட்டாரங்களின் வாழ்க்கையை இன்றைய தேதி வரை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவிய படைப்பாளிகளுள்
இவரும் உண்டு.
இவருடைய படைப்புகள் எங்களுடைய வாழ்க்கையை இன்றளவும் செதுக்கிக்கொண்டேயிருக்கின்றது❤❤❤❤❤❤❤❤.
காணொளி வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி🎉🎉🎉🎉.
சமயம்.....
கடவுள்....
வழிபாடுகள்.....
புனிதம்.....
ஆன்மீகம்....
ஆத்மா....
போன்ற கற்பிதங்களைத் துணிச்சலுடன்
கட்டுடைத்தவர் அவர்.
ஆனால்,. அந்தத் துணிச்சலை இன்றைக்கு நாம் பொதுவெளியில்
அவ்வளவு எளிதாகவெல்லாம்
பேசிவிட இயலாது.
ஏனென்றால்,,
மனித இனம்
கடவுளின் பெயரால்....
சமயத்தின் பெயரால்....
புனிதங்களின் பெயரால்...
ஆன்மீகத்தின் பெயரால்....
சடங்குகள்..சம்பிரதாயங்கள்....வழிபாடுகள்....மூட நம்பிக்கைகளின் பெயரால் 😢😢😢😢அடிமைத்தனத்திற்குள் சிக்கி சீர்கெட்டுப்போய்கிடக்கின்றது😢😢😢😢😢😢😢😢😢😢
இயல்பான வாழ்க்கையை வாழ இந்த கற்பிதங்கள் நம்மை அனுமதிப்பதேயில்லை.😮😮😮😮😮😮
நன்றி.
என் ஆதர்ச நாயகனை பற்றி பேசியதற்கு ஐயா தங்களுக்கு என் மனமார்ந்த பெரும் நன்றிகள் பல.
மெய்யாலுமா
Can you suggest me some tamil existentialism books ?
Tell me more tamil existentialism books
இருத்தலின் உறுத்தல்... what a sentence..👏👏
இவர் சொல்வது பாரமாகவும் தெரியலாம், பாதையாகவும் புரியலாம். அருமை; வாழ்த்துக்கள் திரு முரளி அவர்களே.
காஃப்கா குறித்து அவரது படைப்புகள் குறித்து நுட்பமான பார்வை அருமை ங்க சார்.
When I was very young below the age of 10, I have seen a serial which was based on this story in doordarshan. After seeing this video I came to know this is the story of Kafka. For few days I even feared every night, tomorrow I may also become like this creature. Thanks sir for the nostalgia.
பேராசிரியர் அவர்களே, வாழ்வு, அரசியல் , தத்துவம் குறித்த உங்கள் புரிதலை ஒரு காணொலியாக வெளியிடுங்கள் .பயனுள்ளதாக இருக்கும்
For me,your philosophical exploration is different level in the realm of philosophy as you are taking us to different philosophers to understand the philosophical concepts clearly. Thank you sir.
No one could have handled so subtly about existentialism. Excellent understanding and narration.
Thank you sir. We had metamorphosis and trail tamil translation at our home, but I couldn't read more than15 to 30 pages of these two books. You explained these things very well. Good service to me & people like me. I have then and then know about Kafka, existentialism. But your discourse is good. Self alienation is very much prevails even in free democratic states due to rigid institutional structure and ibstitution of family.. This discourse gave solace to mind. Whether we can avoid these kind of experiences of alienations is million dollar question. It is how the life is. For Simple humans to endure it or otherwise get freedom in death by Natural way only. 16-12-23. Thanks.
Very nice message sir. 👍👍
மனித இனம் உணவு இன்றிகூட பல நாள் வாழ்ந்து விடலாம்..
ஆனால் உறவின்றி ஒரு நிமிடம் கூட வாழமுடியாது...
ஒருவன் தான் தனக்காக ஒரு போதும் வாழமுடியாது
அப்படி வாழவேண்டிய சூழ்நிலைக்கு ஒருவர் தள்ளப்பாட்டால் ஒன்று அது அவரால் தனக்கு தானே கொடுக்க ப்பட்ட தண்டனை..
அல்லது அந்நிலையை அவருக்கு அவரின் குடும்பத்தாரல் கூட கொடுக்கப்பட்டிருக்கலாம்...
இவ்வுலகம் ஏற்படுத்தி வைத்த மதிப்பீடுகளை தாண்டி வாழ்ந்ததால்.. இந்த தண்டனை..
எது எப்படியோ அவ்வாழ்க்கை கரப்பானின் வாழ்க்கை க்கு ஒப்பாகும்...
வாழ்வில் இப்படி பட்ட கரப்பான் வாழ்க்கை வாழும் மனிதர்கள் விசாரணையற்ற கைதிகளாகவே வாழ்ந்து நிதி கிடைக்காமலே மரணத்தை தழுவி விடுகிறார்கள்...
எனவேதான் மரணம் ஒரு விடுதலையைக் கொடுக்கும் என இன்றும் பல மனிதர்கள் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்...
இப்படி ப்பட்ட கரப்பான் வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தன்னை புதுபித்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது..
தன்னைஅறிய..சுயம் குறித்து அறிய.. தன் மாயக் கோட்டையில் இருந்து வெளியே வர வேண்டும்...... சுய மதிப்பீடுகளை.. விழுமியங்களை உடைத்து எறிந்து....
இருத்தலியல் மனித சமுதாயத்தினை அடக்கி கட்டிப் போட்டுள்ள சமுதாய கோட்பாடுகளாகிய சங்கலிகளை மிகப்பெரிய சம்மட்டி கொண்டு அடித்து உடைத்து விடுதலை பெற சில வழி வகை செய்கிறது....
அது தான் உன்னை அறிந்தால் உன்னை அறிந்தால் நி உலகத்தில் போராடலாம..
உயர்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நி வாழலாம்...
🎉❤🎉❤🎉❤🎉❤
Castle என்றால் கொத்தளம் என்று கொள்ளலாம். தமிழில் கோட்டை கொத்தளம் என்று ஒரு சொல் வழக்கு உண்டு.
கோட்டை என்பது அனைவரும் அறிந்ததே. இதுவே ஆங்கிலத்தில் fort எனப்படும். பொதுவாக பெரிய அளவில் சிறு குன்றுகள் மேல் எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி உயர்ந்த மதில்கள், உடைக்க முடியாத கதவுகள் போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் பொருந்திய ஒரு கட்டிடம். உள்ளே மாளிகைகளும் மற்றும் பல அரசுக் கட்டிடங்களும் இருக்கும். பல கோட்டைகள் காலப்போக்கில் அழிந்து விட்டாலும் செஞ்சி, கோல்கொண்டா போன்ற கோட்டைகள் இன்றும் தென் இந்தியாவில் பிரசித்தி பெற்றவை.
ஆனால் கொத்தளம் என்றால் என்ன, எப்படி இருக்கும் என்பது பலரும் அறியாதது. இதுவே ஆங்கிலத்தில் castle எனப்படும். கோட்டை போன்று பெரிதானது அன்று, பெரிய மதில்கள் இருக்காது. ஆனால் இதுவும் பார்க்க சிறு கோட்டை போலவும் இருக்கும். பொதுவாக கோட்டை அரசுக் கட்டிடம் என்றால் கொத்தளங்கள் மந்திரிகளும் பிரபுக்களும் வசிக்கும் கட்டிடங்களாகும். இன்றும் பல ஐரோப்பிய நாடுகளில் நிறைய castleகள் எனப்படும் கொத்தளங்கள் இருக்கின்றன.
தனக்காக, தன் இருப்பிற்காக எழுதுவார்.❤
சரளமான நடை.இருத்தல்...உறுத்தல்...போன்ற ஆழமான கருத்துக்கள் ரத்தினச் சுருக்கம்.தத்துவப் படைப்புகளை விறு விறுப்பாக சுவையாக Cross references உடன் கொண்டு கூட்டி சொல்வது சிறப்பு ங்க சார்
அருமையான பதிவு சகோதரே👌👌🙏🙏
Professor, the great.. என்ன ஒரு பொறுமை.. விளக்குவதில். நமக்கு கிடைத்த வரபிரசாதம் இவர்.
Sir, your philosophical hermeneutic exploration, interpretation on his novel is excellent and inspired. It is very special and useful for philosophical encounter with hermeneutic interpretation Thank you sir.
Another high quality video..super sir.
An outstanding series about things/thoughts that are considered difficult. I appreciate you and your team's tremendous hard work. I also appreciate the views whose interest sustains this project. Hats off to you sir...
Correction: Viewers
இருப்பின் வலி...
உள்ளது தந்து,
உதவுதல்
தானம்!
உள்ளம் தந்து,
பரவுதல்
ஞானம்!!
தன்னையே ஈதல்,
த் யாகத்தில்
வாழ்தல்!!!
தானாய் எங்கும்,
ஆதல்
வ் யாபகம்!!!!
..
05.01.2024
எழுத்து விதைகளை இதய மண்ணில் தூவினால் செழித்து வளர்வது தனிமனிதன் அல்ல சமுதாயம்..
..
- மேதா 65 / 2022 -
வெற்றியென்று சொல்லப்படுவதெல்லாம் வெற்றி அல்ல. நீ வெல்வதனால் உனது மன அமைதியும் சுதந்திரமும் பறிபோகும் என்றால் உனக்கேன் அந்த வெற்றி? வேண்டாம் விட்டுவிடு, அந்த பட்டுக் குருவியைப் போலே!
வெல்வதெல்லாம் வெற்றியல்ல, தோற்பதெல்லாம் தோல்வியல்ல!!
பலர் வென்றும் தோற்கிறார்கள், வெகு சிலர், வெகு சிலர் மட்டும் தோற்றும் வெல்கிறார்கள்!!!
வெற்றிதான் இலக்கு என்றால், அதன் அர்த்தம் என்ன என்பதை அறிந்து வைத்திரு, அர்த்தமே இல்லாத வெற்றிகள் உனக்குத் தேவையில்லை!!!!
..
09.01.2024
This explanation really great and inspiring ..... I got introduced to UG krishnamurti by your video only..... Thanks for posting this video
A new experience for me. Thankyou
three stories are really really extraordinary narrated
Sir very interesting. Thank you.
Chosenism is creating alienation. It's going to end. Cafca is one of the prophesy for the coming end by unconditional love and forgiveness ❤
சிறப்பு😢சார்.
Transcendentalism and Henry David Thoreau pathi pesunga sir
Excellent talk on Franz Kafka. Thank you Sir
திசம்பர் 17 ஞாயிறு இரவு 8:52 அமைதிய சூழல்
I rate this episode as most brilliant. I veer around to the view based on my experience and your final analysis on “ alienation” and “Shunya Trap” that existentialism framework while providing insight into our lives and purpose lead many of my friends into
nihilism, negativity and suicidal tendencies out of frustration. Please issue an alert as most youth get influenced easily.
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் வீழ்வான். தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் தேர்ந்தெடுக்கப்பட்ட உயிரால் தேய்ந்து புது இன்ப உலகம் உருவாகிறது என்பது திண்ணம் ❤
We wish you to get one lakh subscribers.
சமூகத்தின் சாட்டையில் நானும் ஒரு பம்பரம்.
This is a useful video awesome.. a deep one with Comrade Thiaku
Excellent Video on Kafka. Three stories are seamlessly intertwined. Your videos will be very helpful for future generations. Thank You Sir 👍
sir im your one of the admirer.... espescialy for your philosophical teacher (like a social teacher). please take care of your health because while you speak it seems you are having Shortness of breath slightly.........
God bless you all are gods om
Good morning sir
Yes . Correct story. It is happening in persons life in India also. How many beggars, many little boys, little girlish even animals.
வணக்கம் அய்யா ❤
முரளி... அடையாளம் முதலில் சிறிய வடிவமைப்பு... அடுத்த கட்டமைப்பு சற்று பெரியதாக சமுதாயம்...முடிந்த முடிவு... இருத்தல் இல்லாமை ஆகிவிட்டது..🎉
Love from Dubai... I would like to meet you sir ❤
I had read this story, metamorphosis, but I couldn't able to understand fully, sir thanks
Excellent novel author
Post video about Ekkankar
அபத்தமான உலகில் தூக்கி எறியப்பட்டிருக்கிறோம்
❤❤❤❤
😊 எழுதியதை படித்துப் பார்த்து பின் எரித்து விடுவார்கள். 😊
கரப்பான் பூச்சி ❤
Cafca❤❤❤❤❤❤
எனக்குமான ஒரு castle..😎
நல்ல காணொளி. மிக்க நன்றி.
பிரதரிக் நீட்சாவுக்கு முன்னரே இருத்தலிய கருத்துக்களை முன் வைத்து கதைகளையும் காவியங்களையுமே எழுதியவர் தான் பியதோர் தஸ்தாயெவ்ஸ்க்கி (Fyodor Mikhailovich Dostoevsky). அவருக்கும் முன்னரே சோரேன் கியர்க்கேகார்ட் (Søren Kierkegaard).
ஆக நீட்சா தான் முதன்முதலாக இக்கருத்தியலை முன் வைத்தார் என்பது சரியாகாது. அதில் ஆழமாக பயணித்திருப்பார் என்று வேண்டுமானால் கூறலாம். அவரை விட ஜான் பால் சார்தே.
தஸ்தாயெவ்ஸ்க்கியின் மீது இறைமறுப்பாளாராக இருந்த நீட்சாவும் சரி, ஆல்பர்ட் கமூவும் சரி, வைத்திருந்த அபிமானமும் மரியாதையுமே இதை மறைமுகமாக சுட்டிக்காட்டும்.
sir,pls do educate us with about demosthanes philosophy
நன்றிகள் உரித்தாகுக ❤
🛐🛐🛐
Pls do video about objectivism ayn rand
கலையும், தத்துவமும்!!
Sir, I have a requst... Can you discuss the works of 'David foster Wallace' and his speech 'This is water' ...?
ஐயா, eternal devinity என்கிற சேனலினை பார்த்து அல்லது அவரை தொடர்பு கொண்டு ஒரு காணொளி போட்டால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும். நன்றி.
Sir it would be nice if you translate these kind of videos in hindhi and english.It would beneficial to lot of people who has difficulty in understanding tamil.videos of this quality should be made into other languages to cater the rational minds.Hope you will take as a request
This is the 31st death anniversary of one of our friend a working lady at the prime of young age, life ended by suicide caused by the alienation. The discourse seems to well suited at her 31st death anniversary. 16-12-23
🙏🙏🙏🙏🙏
Please do a video on Dostoyevsky..
Sir pls make a video about Bruce Lee
கண்ணீரே எனது பதில். மனது கனக்கிறது
Again oru video call meeting panunga sir if it's possible
Deeper Connect Sir.Often trapped into angst or dread or kind off. Nature including plants and animals, children, innocence in people give solace and pull me back , maybe to this- another necessary conditioned trap
Dear sir,
Many thanks that you gave a cockroachian philosophy of human existence.
You have done a decent act of omnipresent கரப்பான் in a way that emancipates life in whole.
Life goes on and on whether we like it or not.
But creators like Kafka is omnipresent in soul of human existence.
He lives on for ever like cockroach which can never be destroyed or eliminated from existence for sure.
We should emulate cock in every sphere of life to combat hate, injustice, jealousy, greed, loquacious crowds.
I am looking forward to Kafka on the shore aswell.
Selvaraj r
அபத்தமான வாழ்வியல்
அது குறித்த கண்ணோட்டம்
கரப்பானாக அவதானித்து
அந்த சுவாரஸ்யமான
தத்துவ சமிக்ஞை உடன்
இருத்தலியல்.....
If we want society should spin into nihilism and madness Existential philosophy will facilitate. If positive energy should flow indulge in Vedanta. Intellectuals may not suggest this perhaps due to their “ conditioning” by Western philosophies like Existentialism or Marxism. Unleash your innate potential by adopting positive vibes . Good for individual and society even if it is based on certain” fictional” values as in reality every philosophy can be questioned and ripped apart.
So, a kid comes back from school & doesn't do any home work, nothing for several days. The teacher keeps asking him on the whys. One day, the kid says that he read most of the existentialists & so understood that life has absolutely no meaning, after all & so, stopped doing everything including the home work!. The teacher informs the parents & somehow they all bring the kid back to normal life, whatever that is!. Very Depressing to know on these existentialists' views on life tho I haven't read any of them, myself, fortunately or unfortunately. MeenaC:-)
ஜோன் போல் சார்தரின்”குமட்டல்” நாவல், காம்யுவின் ஒரு பெரும் கல்லை ஒருவன் மலையை நோக்கி நகர்த்தி உருட்டிவிடும் நாவல் அதேபோல் நீட்ஷேயின்”ஜொரதுஷ்டன் இவ்வாறு கூறினான்” என்ற நாவல், ஜிப்ரானின்”இறை தூதர்” என்ற படைப்பு, இவைகளைடன் முகம்மது நபி(ஸல்) அவர்களின் போராட்ட பயணம்(ஹிறா குகையில் இருந்து 10 லட்சம் சதுர மைலை ஆட்சி செய்யும் ஒரு தலைவனாக மாறியது வரை), அவ்வாறே புத்தரின் உள்நோக்கிய தேடல்( அரச மாளிகையில் இருந்த இளவரசன் எல்லாவற்றையும் துறந்து ஓர் புத்தனாக மாறுதல்), மற்றும் தாவோவின் பயணம், காந்தி,மாவோ, மாக்ஸ் ,சேகுவேரா போன்றோரின் அரசியல் பயணம் மற்றும் அண்மைய நிகழ்வுகளாகிய தலிபான்களின் நவ-ஏகாதிபத்தியத்திற்கெதிரான காலனியநீக்க போராட்டம் அதேபோல் ஹமாஸின் ஏகாதிபத்திய சியோனிஸத்திற்கெதிரான காலனியநீக்க விடுதலை போராட்டம் என்பன போன்றவற்றை ஒப்பிட்டு ஓர் கானொளி போடுவீர்கள் என்றால் சிறந்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.நிச்சியமாகத்தெறியும் இது கடுமையாக உழைப்பை வேண்டி நிற்கும் ஒன்று என்று❤
நீங்கள் குறிப்பிட்டதில் பலவற்றை திரு முரளி அவர்கள் ஏற்கனவே காணொளிகளாக பதிவேற்றம் செய்து விட்டார்.
வாழ்க்கை அபத்தமானது என்பதும், வாழ நினைத்தால் வாழலாம் என்பதும் ஒருவருடைய மனதைப் பொருத்தது.
இந்தக் காணொலி முதல் வகையைச் சேர்ந்ததே.
Depressive disorder is a disease in the mind.
Unfortunately this disease is not recognised by the sufferer themselves; not recognised by the family members also.
Consequence of this is suicidal death. Feeling of “worthlessness” and “social isolation” are characteristic of this disorder.
I found many Indian and Western Philosophers lost any of their parents before taking their new path in life.(including Gautam Buddha, Ramana and many others as I listened to you). This is reactive depression.
I suggest you to consider a discussion with a Psychiatrist on the Philosophical aspects of the Depressive disorder and the evil effects of the non-recognition to the individual and to the society.
where has gone your God During Covid ? Science helped to protect our life No one God got down to earth to save us.
God is a profitable business forever.
I am 𓆣
krigr was throne in to tha sakkadai
Sir, Talk about Ayn rand's philosophy. Give your opinions. I personally think her view is not needed for this society whatsoever.
Vow
@@ilangovanilangovan7985 sorry? What do you mean to say?
கயிற்றரவு
Hi
@k.karlmarx