மீனாட்சியம்மன் பாமாலை -- Meenakshi Amman Pamalai-- (Lyrics in Comments Section)

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 21

  • @srk8360
    @srk8360 3 месяца назад +1

    அற்புதமான பாடலும்
    இனிமையான குரலும்
    மிகவும் அருமை 👌👌..
    பாடல் முழுமையும்
    தந்திருப்பது மிகவும்
    மகிழ்ச்சி..
    நன்றி அம்மா 🙏💐💐💐💐💐

  • @geethakennedy3985
    @geethakennedy3985 10 месяцев назад +2

    பாடல் வரிகள் அருமை.

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 года назад +4

    தெய்வீகக் குரலில் மீனாட்சி அம்மன்பாடல் கேட்க கேட்க மெய்மறந்தேன்.அன்னைமீனாட்சி அம்மன் திருவடிகள் போற்றி போற்றி சரணம் சரணம் அம்மா தாயே!

  • @kamachisolaiyappan7237
    @kamachisolaiyappan7237 3 года назад +14

    அருமையான பாடல் மிகவும் நல்ல குரல் வளம் மகிழ்ச்சி நன்றி

  • @angappanvijaya8668
    @angappanvijaya8668 Месяц назад

    கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் பாடலை அழகாக பாடிய அகிலா நடேசனுக்கும்,வடிவமைத்த பரணி சிதம்பரத்திற்கும்,மற்றும்,மணி வெங்கிடாஜலம்,ராணி மெய்யப்பன் அவர்களுக்கும் அன்னை தையலின் வாழ்த்துக்கள். 2:18

  • @abirameamirdha6816
    @abirameamirdha6816 3 года назад +3

    ⚛️🙏⚛️ குமரகுருபரர் அருளம்சமே.. ஆசிகள் வேண்டும் 🙏⚛️ அபிராமி சரணம் 🇮🇳

  • @mugu1968
    @mugu1968 Год назад +2

    மிக சிறப்பு

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 года назад +1

    முதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ
    முகத்திலே கண்ணை வைத்தான்
    முகம்பார்க்க விரும்பாது பகையான மனிதனோ
    முதுகையே பார்த்து நின்றான்
    சதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்
    தர்மத்தை வேண்டி நின்றான்
    தர்மத்தின் தேவனோ தன்னையும் பிறரையும்
    சதிகாரர் கையில் வைத்தான்
    மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    இருமனப் பேயரும் கள்ளுண்டு கவராடும்
    இறைமுறை பிழைத்த அரசும்
    ஏய்க்கின் நெஞ்சமும் வஞ்சமும் சூழ்ச்சியும்
    இருகையில் ஒளிந்த வாளும்
    கருமிருட் கள்வரும் கடிப்பதைக் கடித்தபின்
    கருக்கும் பார்க்கும் நரியும்
    காலத்தில் வந்ததை ஞானத்தில் வந்ததாய்க்
    கண்ணாடி குள்ள மதியும்
    வரையின்றி வாழுமோர் உலகிலே என்னையும்
    வசைகாண விட்ட மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    விளையாட்டுப் பிள்ளையும் பறிக்கப் பலாமரம்
    வேரிற் பழுத்த தேபோல்
    விரும்பினாற் சமைக்கின்ற விதத்திலே கோழிகள்
    வீட்டினில் வளர்வ தேபோல்
    வளையலார் கைக்கென்று வாரத்தில் முழுதாக
    வளர்கின்ற கீரை யேபோல்
    வருவார்கள் உண்ணவே உணவுடன் என்னையும்
    வைத்த தல்லாமல் உலகில்
    வளங்கொண்ட செல்வத்தைபெட்டியில் மறைவாக
    வைத்ததே என்று மிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    செப்பினாற் சிலைசெயும் வினைஞரும் மெதுவாகச்
    செப்பிலே பாதி கொள்வார்
    செம்பொனால் நகைசெயும் கொல்லரும் மறைவாக
    சேதாரம் பாதி கொள்வார்
    தப்பினால் ஏழையர் உடலிலே பணக்காரர்
    சதைவெட்டி உண்டு பார்ப்பார்
    தர்மகர்த் தாக்களும் தர்மகாரி யத்திலே
    தங்கள்கா ரியங்கள் பார்ப்பார்
    வைப்புயர் நிலத்திலே வளரவே தெரியாத
    மரத்தையும் படைத்த மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    தான்பெற்ற செல்வனை ஏன் பெற்றோம் என்று
    தான் தாயன்று மாண்டு போனாள்
    தந்தையும் இப்பிள்ளை உருப்படா தென்றுதான்
    தணலிலே வெந்து போனான்
    ஊன்பெற்றயானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்
    உயரத்தில் ஒளிந்து கொண்டான்
    உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டுமே
    உறவாக வந்து நின்றாள்
    வான்பெற்ற பேறுபோல யான் பெற்ற தமிழிலே
    வாழ்கிறேன் வண்ண மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    பூர்வத்தில் செய்ததோ இந்நாளில் செய்ததோ
    புண்ணி யம்மட்டு மிச்சம்
    பொருளாக தந்ததோ அருளாக வந்ததோ
    புகழாரம் உண்டு கொஞ்சம்
    ஆர்வத்திற் சேர்ந்ததோ அனுபவம் ஈந்ததோ
    அறிவினுக் கில்லை பஞ்சம்
    அமைதியில் லாதவன் துயில் கொண்டு தேறவே
    ஆண்டவன் விரித்த மஞ்சம்
    வார்க்கின்ற கவியின்றி வேறொன்று மில்லையே
    வையையிற் பூத்த மலரே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

  • @ramasamyv4861
    @ramasamyv4861 3 года назад +5

    Super achi

  • @mskrishnamoorthy3162
    @mskrishnamoorthy3162 2 года назад +1

    This grand rendering of the blessed song on goddess Meenakshi to whom i bow as many times as possible for blessing me with devotional piety and pious as I am towards the blessed goddess l am pleased to hear the blessed song by the singer soulfully rendering the blessed song and so please accept my thanks for the same

  • @mahakalyan-jk5ge
    @mahakalyan-jk5ge Год назад

    Om namah shivaya om sakthi Om Sakthi thaye Amma Om Sakthi Om Sakthi Om Sakthi

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 года назад +2

    முட்டாள்கள் பலர்கூடி முடிவுசெய் தாவதே
    முழுதான ஜனநாயகம்
    முதலாளி மடியிலே முட்டாள்கள் ஆடினால்
    முழுதான பணநாயகம்
    பட்டாளம் அதனையே பறித்துக்கொண்டோடினால்
    பலமான ஆதிபத்யம்
    பாரிலே இம்மூன்றும் சக்கரம் போல்வரப்
    பார்க்கின்ற கண்களுக்கு
    வட்டாடத் தோன்றுமே யல்லாது நேர்செலும்
    வழிதோன்ற மார்க்க மிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    கத்தியால் தலையையும் சீவலாம், மரத்திலே
    கலைவண்ணம் செய்து விடலாம்
    கனல் கொண்டு நாட்டையே எரிக்கலாம்;
    விளக்கிலே கருவாக ஒளிர விடலாம்
    புத்தியால் வாழவும் வைக்கலாம்:
    நல்லர் புகழையும் மாய்த்து விடலாம்
    பொருள் மட்டும் சேருமேல் நன்மையும் தீமையும்
    பொருளால் நடத்தி விடலாம்
    மத்தளம் போலிதில் சத்தியம் படுமபாட்டை
    மாற்றவோர் சக்தி யிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    திருடனும் அரகரா சிவசிவா என்றுதான்
    திருநீறு பூசு கின்றான்
    சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர் சொல்லிச்
    சீட்டைப் புரட்டு கின்றான்
    முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின்
    முதல்வனை வணங்கு கின்றான்
    முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில்
    முருகனைக் கூவு கின்றாள்
    வருடுவார் கைக்கெலாம் வளைகின்ற தெய்வம் என
    வாழ்க்கையைக் காக்க விலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    பொய்யப்பன் சபையிலே கைகட்டி நிற்பனேல்
    பொருளப்பன் துணைகி டைக்கும்
    பொருளப்பன் மூலமே சூதாடிப் பார்ப்பனேல்
    புகழப்பன் நிலைகி டைக்கும்
    மெய்யப்பன் தன்னையே நம்பினேன் அவன்எனை
    வீணப்ப னாக்கி விட்டான்
    வினையப்பன் தன்னுடன் விதியப்பன் என்பவன்
    வீட்டுக்கே வந்து விட்டான்
    மையப்பும் கண்ணினால் அப்பனை அம்மைநீ
    வாங்கிக் கொள்வண்ண மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    தும்பிக்கை போனபின் யானையைப் பூனையும்
    துரத்திடும் தன்மையே போல்
    துணிவிலாக் கோழையைச் சிறுவரும் கைகொட்டிச்
    சூழ்கின்ற அவல மே போல்
    நம்பிக்கை போனவன் வாழ்க்கையும் காலத்தில்
    நலிவுறும் என்ன அஞ்சி
    நடுங்காத தொடர்கிறேன் வருகின்ற
    நாளை என் காலம் என்றே
    வம்புக்குச் சொக்கனை வளையாடும் கைகளில்
    வளைக்கின்ற வண்ண மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    நீரிலே வாழ்கின்ற மீன்களும் நத்தையும்
    நிலத்திலே சாவ தென்ன?
    நிலத்திலே வாழ்கின்ற மனிதனும் மிருகமும்
    நீரிலே சாவதென்ன?
    சீருலாப் பேருவாச் சிறப்புலாக் கொண்டாரும்
    சிறுமையில் அழிவ தென்ன?
    சேரிடம் அறியாமற் சேர்ந்ததோ ? இல்லையேல்
    சிறுமதிப் போக்கி னாலோ?
    மார்புலாஞ் சேலையில் மணமுலாம் மாலையை
    மகிழ்வுலா விட்ட மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    அர்ச்சனைப் பூக்களும் கழுநீர்ப் புறத்திலே
    அழிவுற்று வீழ்வதென்ன?
    அழகுமா ளிகைகளும் பிளவுண்டு வெடிப்புண்டு
    அவலமாய் நிற்ப தென்ன?
    கர்ச்சனைச் சிம்மமும் கைகட்டி வாய்பொத்திக்
    கண்தேக்கி வாழ்வதென்ன?
    கர்மவீரர்களும் மாமவீ றார்களாய்க்
    கர்மத்தை மறந்த தென்ன?
    வர்மமில்லா நெஞ்சின் கேள்வியைப் பதிலாக
    வளர்க்கவா மஞ்சள் மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    பொய்யான கற்பனைப் போக்கிலே போனவன்
    புகழையும் இழப்ப துண்டு
    புகழேனும் போதையில் உண்மையை மறைப்பவன்
    புத்தியை இழப்ப துண்டு
    மெய்யான ஞானியும் விதிவிட்ட காற்றிலே
    விலையாகிப் போவதுண்டு
    விவரமே இல்லாமல் காலத்தின் போக்கிலே
    வீணர்கள் வாழ்வ துண்டு
    மையாருங் கண்ணினால் மைந்தர்க்குச் சரியான
    வழிகாட்டும் வஞ்சி மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    காடுசென்றே கொண்ட மனைவியைத்தோற்றவன்
    காகுத்தன் என்ற கதையும்
    காடுசெல் லாமலே களத்திலே தோற்றவன்
    கண்ணனால் வென்ற கதையும்
    வீடுகண் டேபிறன் மனைவியைச் சேர்ந்தவன்
    மேனிப்புண் கொண்ட கதையும்
    வெற்றியும் தோல்வியும் தேவர்க்கும் உண்டென்ற
    வேதத்தைச் சொல்ல விலையோ!
    மாடுவென்றா லென்ன மனிதன்வென்றா லென்ன
    வல்வினை வெற்றி மயிலே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @priyaannamalai2799
    @priyaannamalai2799 3 года назад +3

    Super

  • @niraiisaikudam5674
    @niraiisaikudam5674  3 года назад +11

    மீனாட்சியம்மன் பாமாலை
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
    குருவின்றி வித்தையைக் கற்றவன் நெஞ்சிலே
    குடிகொள்ள அமைதி யிலேயே
    குழைநின்ற கையிலும் வளைகின்ற மெய்யிலும்
    குணங்காண ஒருவ ரிலையே
    இருவென்று சொல்லாமல் இருப்பதைத் தந்தாலும்
    எவர்பாலும் நன்றியிலையே
    இடதுகண் ஓர்சொல்லும் ஓர்சொல்லும்
    எடுத்துரைக் கின்ற உலகில்
    மருவொன்று மில்லாத வாழ்வதை அறியாத
    மனிதனைப் படைத்த சிலையே !
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே !
    சேர்கின்ற பொருள்களை செம்மையாய் எந்நாளும்
    காக்கவும் திறமை இலையே
    ஜெயிக்கின்ற கட்சியில் நுழைகின்ற வித்தையைத்
    தேருமோர் அறிவு மிலையே
    பேர்வந்த வேளையிற் பேரையே விலையாகப்
    பேசவுந் தெரிய விலையே
    பிடித்தகை நழுவவே விளக்கெண்ணெய் பூசுவார்
    பெரிதாக வாழு முலகில்
    வார்க்கின்ற பொதிகையும் வளர்க்கின்ற வைகையும்
    வளம்பாட வாழும் சிலையே !
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    தாசியின் மார்பிலும் தவுல்கொண்ட தோளிலும்
    தழும்புதான் மிச்ச மாகும்
    சன்யாசி பையிலும் சாவண்ட மெய்யிலும்
    சாம்பல்தான் மீத மாகும்
    பாசத்து நெஞ்சிலும் பழக்கத்து நட்பிலும்
    படும்பாடு கோடி யாகும்
    பல்லோர்க்கும் நல்லவன் பொல்லாத வன் எனும்
    பழம்பாடல் வாழு முலகில்
    மாசற்ற பொன்னொடும் வைரமும் மணிகளும்
    மார்பாட வாழும் சிலையே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே !
    கோமுட்டி காத்ததோர் கோமுட்டி அங்ஙனே
    கோமுட்டி பிள்ளை மாண்டான்
    கொடியபாம் பதனையே வளர்த்தவன் பிள்ளையும்
    கொடியபாம் பதனில் மாண்டான்
    நாய்கட்டிக் காத்தவன் பிள்ளையும் அவ்வண்ணம்
    நாய்க்கடி பட்டு மாண்டான்
    நான் மட்டும் எங்ஙனம் மாள்வனென் றெண்ணுதி
    நன்றிகொன் றார்கை யன்றி?
    வாய்முட்டும் கள்ளிலே சேய்முட்டும் வண்ணமே
    தான் முட்டும் மன்ன னருகே
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!
    நாக்கினால் ஊரையே நாட்டித் திரட்டுவான்
    நாக்குக்கும் வெற்றி தந்து
    நாடகக் காரனின் வேடத்தில் நின்றவன்
    நடிப்புக்கும் வெற்றி தந்து
    தூக்கினால் மேலழும் ஓட்டைத் துருத்திக்கும்
    தூக்கத்தில் வெற்றி தந்து
    தூயவர் வாழ்க்கையில் தோல்விமேல் தோல்வியே
    தொடுத்துவைக் கின்ற கலையே!
    வாக்கிலாச் செல்வமே! மனமிலாத் தெய்வமே!
    வடிவான மஞ்சள் நிலவே!
    மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

  • @banjusmusic
    @banjusmusic 3 года назад +2

    Very nice 😀

  • @skminecraftyt84
    @skminecraftyt84 10 месяцев назад +1

    பாடல் வரிகள் வேண்டும்மா

  • @sundarik4891
    @sundarik4891 Год назад +1

  • @keshavdhanraj1042
    @keshavdhanraj1042 2 года назад +1

    மயிலை கற்பகாம்பாள் பாமாலை முழுமையாக போடவும் அம்மா🥰

  • @rmppethaperumal
    @rmppethaperumal 3 года назад +3

    please share audio file if you have it

  • @pappustimezz
    @pappustimezz 8 месяцев назад

    Give full lyrics

  • @m.a.mukilan
    @m.a.mukilan 9 месяцев назад