Teacher's day Speech by Rama Poothathan @Melapalayam
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- மேலப்பாளையத்தில், திருநெல்வேலி வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா! சிறந்த ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன! திருநெல்வேலி செப்12: ஆண்டு தோறும், செப்டம்பர் மாதம், 5-ஆம் தேதி, "ஆசிரியர் தின விழா", நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின், இரண்டாவது ஜனாதிபதியான,"டாக்டர் சர்வப்பள்ளி இராதாகிருஷ்ணன்" பிறந்த நாள், இந்த ஆசிரியர் தின விழாவாக, கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதன் அடிப்படையில், "திருநெல்வேலி வடக்கு ரோட்டரி சங்கம்" மற்றும் "மேலப்பாளையம் அனைத்து மழலையர், தொடக்கப் பள்ளிகள் நலச் சங்கம்" ஆகியவற்றின் சார்பில் ஆசிரியர் தினவிழா, காலையில், மேலப்பாளையம், "முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி" கலையரங்கில் வைத்து, நடைபெற்றது. திருநெல்வேலி வடக்கு ரோட்டரி சங்க தலைவர் கே. முகம்மது தலைமை வகித்தார். "சிறப்பு" அழைப்பாளராக, 3212 ரோட்டரி மாவட்டத்தின், வருங்கால ஆளுநர் "இதயம்"வி.ஆர் முத்து, கலந்துகொண்டு, மேலப்பாளையத்தை சேர்ந்த, மழலையர் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 17 ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழ்கள், பாராட்டு கேடயங்கள் மற்றும் நினைவு பரிசுகள் ஆகியவற்றை, வழங்கி பேசினார். இவ்விழாவில், "ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநர்கள்" டாக்டர். எஸ். பிரேமச்சந்திரன், "மயில்" டி. பாலசுப்பிரமணியன் ஆகியோர், விருது பெற்ற ஆசிரியர்களை, பாராட்டி பேசி, வாழ்த்துரை வழங்கினர். தச்சநல்லூர், கரையிருப்பு "அய்யாசாமி" நடுநிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் "புலவர்" ராமபூதத்தான், "சிறப்பு" சொற்பொழிவு ஆற்றினார். மேலப்பாளையம் அனைத்து மழலையர் தொடக்கப்பள்ளிகள் நலச் சங்க பொருளாளர் கே.முத்துமணி, அனைவரையும் வரவேற்று பேசினார். மக்கள் தொடர்பு அலுவலர் எம்.செய்யது ரயீஸ் அலி, விருது பெற்ற ஆசிரியர்களின், பெயர் பட்டியலை வாசித்தார். திருநெல்வேலி வடக்கு ரோட்டரி சங்கத்தின், செயலாளர் "பேராசிரியர்"ஜேசன் நன்றியுரை கூறினார். மேலப்பாளையம் அனைத்து மழலையர் தொடக்கப் பள்ளிகள் நலச்சங்க செயலாளர் டி.எஸ்.எம்.ஓ.அசன், நிகழ்ச்சிகளை, தொகுத்து வழங்கினார். இந்த விழாவில், திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட, ரோட்டரி சங்கங்களில் இருந்து, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.