Maharani Chicken | மகாராணி சிக்கன் | Restaurant Style Maharani Chicken | Chicken Fry | Cookd

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2021
  • படிப்படியான செய்முறைகள் முதல் ஸ்மார்ட் ஷாப்பிங் பட்டியல்கள் வரை, உங்களுக்குத் தேவையான அனைத்தும் ஒரே இடத்தில், Cookd செயலியில் கிடைக்கிறது. app.cookdtv.com இல் முன் பதிவு செய்து கொள்ளுங்கள்.
    மிகவும் சுவையான சமையல் வீடியோக்களுக்கு இந்த லின்கை கிளிக் செய்து சப்ஸ்க்ரைப் செய்யவும் - bit.ly/cookd-tamil
    சிக்கன் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். மிகவும் எளிய முறையில் குறைந்த நேரத்தில் சுவையான மகாராணி சிக்கன் செய்து உண்டு மகிழுங்கள். இந்த ரெசிபியை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
    மகாராணி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
    கோழி கறி (எலும்பு இல்லாதது) - 500 கிராம்
    மாவு :
    பச்சை மிளகாய் - 5
    பூண்டு - 8 பல்
    சீரக தூள் - 3 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
    முட்டை - 1
    சோள மாவு - 3 தேக்கரண்டி
    மைதா மாவு - 1 தேக்கரண்டி
    உப்பு - 1 டீஸ்பூன்
    மற்ற மூலப்பொருள்கள்:
    எண்ணெய் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் (நீளமாக நறுக்கியது ) - 1
    காய்ந்த மிளகாய் - 3
    கறிவேப்பிலை - 1 கொத்து
    சீரக தூள் - 1 டீஸ்பூன்
    சிவப்பு மிளகாய் தூள் - ½ டீஸ்பூன்
    சிக்கன் மசாலா - 1 டீஸ்பூன்
    கருப்பு மிளகு தூள் - ½ டீஸ்பூன்
    உப்பு - ½ டீஸ்பூன்
    சிக்கன் மஹாராணி செய்முறை:
    1. பச்சை மிளகாய் மற்றும் பூண்டை விழுதாக அரைக்கவும்.
    2. கழுவி சுத்தம் செய்யப்பட்ட எலும்பில்லாத சிக்கன் துண்டுகளுடன் தயார் செய்த பச்சை மிளகாய் மற்றும் பூண்டு விழுதை கலக்கவும்.
    3. சிக்கன் கலவையில், உப்பு, சீரக தூள், மிளகாய் தூள், மற்றும் சிக்கன் மசாலா சேர்க்கவும்.
    4. முட்டை, கார்ன்ஃப்ளார் மற்றும் மைதாவைச் சிக்கன் கலவையுடன் சேர்க்கவும்.
    5. ஒரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சிக்கன் வேகும் வரை சுமார் 5 நிமிடங்கள் சிக்கனை பொரிக்கவும்.
    6. மற்றொரு கடாயில், எண்ணெய், நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
    7. கடாயில் பொரித்து வைத்த வறுத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு வனக்கவும்.
    8. உப்பு, சிக்கன் மசாலா, மிளகாய் தூள், சீரக தூள், கருப்பு மிளகு தூள் சேர்த்து, நன்கு வனக்கவும்.
    9. அடுப்பில் இருந்து இறக்கி, பரிமாறவும்.
    எங்களின் Facebook பக்கத்தை லைக் செய்யவும் - / cookdtv
    எங்களை Instagram இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யுங்கள் - / cookdtv
    எங்களை Twitter இல் பின்தொடர இந்த லின்கை கிளிக் செய்யவும் - / cookdrecipes
  • ХоббиХобби

Комментарии • 3