மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் ஆவணப்படம் | Documentary | Antony Church Marambadi

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • #Antony_Church_Marambadi
    திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடியில் காலத்தால் அழியாத பாரம்பரியத்தின் அடையாளமான கோதிக், உரோமானிய கலை அமைப்பில் எழுந்துள்ள இத்திருத்தலம் இந்திய அளவில் புகழ் பெற்றது. 18ஆம் நூற்றாண்டில் நடப்பட்ட சிலுவை, வல்லமைமிக்க காணிக்கை மண்டபம், வட்டகோவில், கவின்மிகு அழகுடன் எழுந்து நிற்கும் இரட்டைக் கோபுரங்கள் (1889) இத்திருத்தலத்தின் வரலாற்றுச் சின்னங்கள், எண்ணற்ற திருப்பயணிகளின் நம்பிக்கை வாழ்வுக்கு மையமான இத்திருத்தலம் 2010-2019 இடைப்பட்ட ஆண்டுகளில் புதுப்பிக்கப்பெற்று புதுப்பொலிவுடன் இருப்பதைக் காண்பது மன மகிழ்வைத் தருகின்றது.
    2017- ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு ஆன்மீகச் சுற்றுலாத்தளம் என்ற சிறப்பு உரிமையை இத்திருத்தலத்திற்கு வழங்கியுள்ளது.
    வாரத்தோறும் செவ்வாய்கிழமைகளில் காலை 11.00 மணிக்கும், மாலை 7.00 மணிக்கும் சிறப்பு நவநாள் திருப்பலியும், குணமளிக்கும் வழிபாடும், நற்கருணை ஆசீரும் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 4.45 மணிக்கும் 8.30 மணிக்கும் திருப்பலி நடைபெறும்.

Комментарии • 6