சுப்ரீம் கோர்ட் 9 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு விவரம் | SC verdict | Tax Mining Rights

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • கனிம வளங்களுக்கு வரி விதிக்கும்
    அதிகாரம் யாருக்கு உள்ளது?
    மத்திய அரசுக்கா மாநில அரசுக்கா?
    கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் வரி விதிக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்த வந்த நிலையில், கடந்த 2011ல் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
    கனிம வளங்கள் மீது மாநில அரசுகள் வரி விதிக்க அதிகாரம் இல்லை என மத்திய அரசு வாதிட்டது. மாநில அரசுகள் வரி விதிக்க தொடங்கினால், கனிமங்கள் விலை கடுமையாக உயர்ந்து விடும் என சொன்னது.
    கனிம வளங்களுக்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் ராயல்டிதான் வரி. மாநிலங்கள் தனியாக வரி விதிக்க முடியாது என கனிமவள நிறுவனங்கள் வாதிட்டன.
    இந்த வழக்கில், தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு இன்று தீர்ப்பளித்தது. தலைமை நீதிபதி உட்பட 8 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினர். நீதிபதி நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பு கூறினார்.
    8 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அரசியல் அமைப்பு விதிகளின்படி, கனிம வளங்களுக்கு வரி விதிக்க பார்லிமென்ட்டுக்கு எதிகாரம் இல்லை
    மாநில சட்டமன்றங்களே கனிம வளங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை பெறுகின்றன.
    மாநில அரசுகள் தங்கள் வரம்புக்கு உட்பட்ட சுரங்கங்கள், குவாரிகளுக்கு வரி விதிப்பதை கட்டுப்படுத்த முடியாது என கூறப்பட்டுள்ளது.#SupremeCourt #AffirmsStates #Royalty #Minerals

Комментарии • 6