ஆடி-1 தேங்காய் சுடும் பண்டிகை | சேலம் தேங்காய் சுடும் திருவிழா | MyNa Vlog 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆடி-1 #festival #funtion # MyNa Vlog 2023
    Hi friends,
    I welcome you all to my RUclips channel in Tamil. Here is my first video. Its my native place Salem district special recipe "Thengai suduthal" for Aadi 1 celebration. Its a traditional and unique recipe. Try it. You will love it :
    Aadi 1 Special | Coconut Baking | Thengai Suduvathu | Aaddi 1 Special Coconut | Salem Special
    This video is about how to make a coconut desert in a easy way..aadi 1 is a famous festival in salem.they will make coconut baking in their home.
    aadi matha pirappu aadi special vedi thengai festival celebrates salem and erode
    சேலம்: தட்சிணாயன புண்ணியகாலமான ஆடிமாதம் நாளை சனிக்கிழமையன்று பிறக்கிறது. ஆடி மாதத்தின் முதல் நாளில் சேலம், நாமக்கல், ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் சில கிராமப்பகுதிகளில் தேங்காய் சுடும் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்
    தேங்காய் சுடும் பண்டிகை, tamil festival, ஆடி மாதம், aadi festival, aadi festival video, day in my life, daily routine, lifestyle vlog, ஆடி 1, aadi 1 special, coconut baking, aadi special
    ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா...
    புதுமணத்தம்பதிகள் தலையை ஆடியைதேங்காய் சுட்டு சந்தோஷத்துடன் கொண்டாடினார் ...
    வாழ்வில் வசந்தம் ஏற்பட வேண்டி சேலம் ஈரோடு தர்மபுரி நாமக்கல் கரூர் போன்ற காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகவே கூறப்படுகிறது அதர்மத்துக்கும் தர்மத்துக்கும் இடையே மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ஆடி 18 அ huன்று முடிவுக்கு வந்தது இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டுமென்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1ம் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள் இந்த பூஜையின் போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாகப் படைத்து வழிபட்டதாகஒரு ஐதீகம் உள்ளது ஆண்டாண்டு காலம் அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் இந்த காவிரி நீர்ப் பிடிப்பு மாவட்டங்களில் ஆடி மாதம் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது
    அதன்படி இன்று சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தேங்காய்சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டது இந்த பண்டிகை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஜாதி மத பேதம் இன்று அனைவரும் ஒற்றுமையுடன் தேங்காய் சுட்டு மகிழ்ந்தனர் மேலும் புதுமணத்தம்பதிகள் முதல் ஆடி முன்னிட்டு ஜோடியாக தேங்காய் சுட்டு தலை தீபாவளி போலவே கொண்டாடி மகிழ்ந்தனர் இந்த தேங்காய் சுடும் நிகழ்ச்சியில் தேங்காயில் உள்ள நீரை எடுத்து விட்டு பொட்டுக்கடலை பாசிப் பருப்பு ஏலக்காய் வெல்லம் போன்றவற்றை செலுத்தி நெருப்பில் சுட்ட பின்பு அருகில் உள்ள விநாயகர் கோயில் படைத்து குடும்பத்தினர் ஒன்றுகூடி மிகுந்த மகிழ்ச்சியுடன் நெருப்பில் சுட்ட தேங்காயை அதனுள் இருக்கும் பூரணமும் உண்டு மகிழ்ந்தனர்

Комментарии •