239. ஓல மறைகள் அறைகின்ற (திருப்புகழ்) - Ola Maraigal Araikindra (Thirupugazh)
HTML-код
- Опубликовано: 16 янв 2025
- 239. ஓல மறைகள் அறைகின்ற (திருப்புகழ்) - Ola Maraigal Araikindra (Thirupugazh)
வரிசை எண் 359 - தலம் - திருவானைக்கா
ஓல மறைக ளறைகின்ற வொன்றது
மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர்
ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர்
எவராலும்..... (2)
ஓத வரிய துரியங் கடந்தது
போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும்
ஊனுமுயிரு முழுதுங்கலந்தது
சிவஞானம்.....(2)
சாலவுடைய தவர் கண்டு கொண்டது
மூல நிறைவு குறைவின்றி நின்றது
சாதி குலமு மிலதன்றி அன்பர்
சொனவியோமம்....(2)
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த
மெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபலம் அறவந்து நின்கழல்
பெறுவேனோ... (2)
வால குமர குககந்த குன்றெறி
வேல மயில எனவந்து கும்பிடு
வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர்
களைவோனே ... (2)
வாச களப வரதுங்க மங்கல
வீர கடக புய சிங்க சுந்தர
வாகை புனையும் ரணரங்க
புங்கவ வயலூரா ... (2)
ஞால முதல்வி யிமயம் பயந்தமின்
நீலிகவுரி பரைமங்கை குண்டலி
நாளு மினிய கனியெங்க ளம்பிகை
த்ரிபுராயி ....(2)
நாத வடிவி யகிலம் பரந்தவள்
ஆலின் உதர முள பைங் கரும்பு
வெண் நாவ லரசு மனை வஞ்சி
தந்தருள் பெருமாளே... (2)
சாரும் அநுபவர் அமைந்து அமைந்த
மெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய
தாப சபலம் அறவந்து நின்கழல்
பெறுவேனோ...
இந்த்ரிய தாப சபலம் அறவந்து
நின்கழல் பெறுவேனோ...
பெருமாளே...