இரவு 7.00 மணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • 1) கூடுதலாக 100 கிராம் எடை இருப்பதாக கூறி பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதி போட்டியிலிருந்து இந்திய வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் - சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தது இந்தியா
    2) வினேஷ் போகாட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார் பிரதமர் நரேந்திர மோதி - தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது என தலைவர்கள் கருத்து
    3) வினேஷ் போகாட் தகுதி நீக்கத்தில் எவ்வித மாற்றமும் இல்லை - அனைவருக்கும் ஒரே விதிதான் என சர்வதேச மல்யுத்த சம்மேளனம் அறிவிப்பு
    4) மத்திய அரசின் 2024 ஆம் ‍ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுகள் - சந்திராயன் - 3 திட்ட விஞ்ஞானிகள் உட்பட 33 பேர் தேர்வு
    5) ஒன்பது மாநிலங்களில் காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு செப்டம்பர் மூன்றாம் தேதி இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
    6) அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு - ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
    7) முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தினம் - நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் மரியாதை
    8) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் கைலாஷ்நாதன் - சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
    9) வன்முறை அரங்கேறும் பங்களாதேஷில் இந்திய தூதரகம் பாதுகாப்புடன் செயல்பட நடவடிக்கை - இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்ட பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நாளை தாயகம் திரும்புகிறார்
    10) இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் - வெற்றி பெற 249 ரன் இலக்காக நிர்ணயித்தது இலங்கை
    Visit : TamilNews - Doordarshan
    EMAIL : ddtamil2024@gmial.com
    INSTAGRAM : / ddtamilnews
    FACEBOOK : / ddpodhigainews
    TWITTER : x.com/DDTamilNews
    RUclips : / @ddtamilnews

Комментарии •