மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம்."ஓலைச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற சில தமிழ்நூல்கள்" எனும் தலைப்பிலமைந்த தங்களின் உரையினைக் கேட்டறிந்தேன். உலகின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களின் வரிசையில் ஆசியவியல் நிறுவன மருத்துவச்சுவடிகளும் இணைக்கப்பெற்று யுனெஸ்கோவுடன் இணைந்து செயலாற்றும் தகுதிப்பாட்டினைப் பெற்றுள்ளமைக்குப் பாராட்டுக்கள்.வார்சா,நார்வே,சியோல்,பேங்காங்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ்ஒலைச்சுவடிகளின் பெருமைகளை உலகறியச்செய்தமைப் பாராட்டிற்குரியது. ஓலைச்சுவடிகளின் விளக்க அட்டவணைகளையும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிநூற்பதிப்புகளையும் வெளிக்கொணர்ந்த பெருமையை ஆசியவியல் நிறுவனம் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன். இலக்கியம்,கணிதம்,மருத்துவம் முதலிய பல்துறை நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு உலக அறிஞர்கள் தமிழ்மொழியின் செம்மையினையும் தமிழ்ப்பண்பாட்டினையும் அறியும்படி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.இந்நூல்களைத் தமிழாய்வாளர்களும் தமிழறிஞர்களும் வாங்கிப்பெற்று பயனுறுவார்களாக.தங்களின் தமழ்த்தொண்டுத் தொடரட்டும் என வாழ்த்தும் உள்ளம். மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
அன்புடைய ஐயா, தமிழ்ச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற நூற்களைப் பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றின் பொருண்மையையும் தோன்றிய சூழல்களையும் தெளிவாகவும் உங்களின் உழைவிலா உழைப்புக்கு யுனோஸ்கோ நீட்டிய பணவாதரவையும் அவற்றைத் தாங்கள் மூல மொழியானத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உலகத்திற்கு அளித்தமையையும் ஒவ்வொரு நூலுக்கும் கொடுக்கப்பட்ட தலைப்பின் பின்னணியையும் வெளிநாடுகளில் ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்தமையும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கவேண்டிய இன்றியமையாமையையும் நூற்களின் இலக்கியவகைகளையும் விளக்கியுள்ளீர்கள். அரசு சாரா நிறுவனமாக விளங்கும் ஆசியவியல் நிறுவனம் தாங்குநர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து பொருள்பெற்று நூற்களைப் பதிப்பிக்கும் திறன் போற்றத்தக்கது. அதற்குத் தாங்கள் குடும்பமாகவுழைப்பதையும் எண்ணிப் பெருமையடைகிறோம். இன்னுந் தொடர்ந்து செல்ல வாழ்த்துகிறேன். வெல்கவே. அன்புடன் உங்கள் மதுரை செ பன்னீர் செல்வம் திசம் 17 2024 1538
மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு வணக்கம்."ஓலைச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற சில தமிழ்நூல்கள்" எனும் தலைப்பிலமைந்த தங்களின் உரையினைக் கேட்டறிந்தேன். உலகின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களின் வரிசையில் ஆசியவியல் நிறுவன மருத்துவச்சுவடிகளும் இணைக்கப்பெற்று யுனெஸ்கோவுடன் இணைந்து செயலாற்றும் தகுதிப்பாட்டினைப் பெற்றுள்ளமைக்குப் பாராட்டுக்கள்.வார்சா,நார்வே,சியோல்,பேங்காங்க் ஆகிய இடங்களில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ்ஒலைச்சுவடிகளின் பெருமைகளை உலகறியச்செய்தமைப் பாராட்டிற்குரியது. ஓலைச்சுவடிகளின் விளக்க அட்டவணைகளையும் நாற்பதுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிநூற்பதிப்புகளையும் வெளிக்கொணர்ந்த பெருமையை ஆசியவியல் நிறுவனம் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்கின்றேன். இலக்கியம்,கணிதம்,மருத்துவம் முதலிய பல்துறை நூல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டு உலக அறிஞர்கள் தமிழ்மொழியின் செம்மையினையும் தமிழ்ப்பண்பாட்டினையும் அறியும்படி செய்தமைக்கு வாழ்த்தி வணங்குகின்றேன்.இந்நூல்களைத் தமிழாய்வாளர்களும் தமிழறிஞர்களும் வாங்கிப்பெற்று பயனுறுவார்களாக.தங்களின் தமழ்த்தொண்டுத் தொடரட்டும் என வாழ்த்தும் உள்ளம். மொ.மருதமுத்து,ஆய்வு வளமையர்,சுவடிப்புலம்,ஆசியவியல் நிறுவனம்,சென்னை.
🙏💖🙏💖🙏💖🙏
❤🙏🙏🙏🙏🙏💐💐💐👍👍
🙏🙏🙏🙏❤❤❤
🎉
தமிழர்களின் பெருமைகளை வெளிக்கொணரும் ஆசியவியில் நிறுவனத்திற்கு தலைநகர் தமிழ் மன்றத்தின் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
நன்றி🙏
Title of the books are very thoughtful great job 👍
Thank you.
அன்புடைய ஐயா,
தமிழ்ச்சுவடிகளிலிருந்து உயிர்பெற்ற நூற்களைப் பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றின் பொருண்மையையும் தோன்றிய சூழல்களையும் தெளிவாகவும் உங்களின் உழைவிலா உழைப்புக்கு யுனோஸ்கோ நீட்டிய பணவாதரவையும் அவற்றைத் தாங்கள் மூல மொழியானத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து உலகத்திற்கு அளித்தமையையும் ஒவ்வொரு நூலுக்கும் கொடுக்கப்பட்ட தலைப்பின் பின்னணியையும் வெளிநாடுகளில் ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்தமையும் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கவேண்டிய இன்றியமையாமையையும் நூற்களின் இலக்கியவகைகளையும் விளக்கியுள்ளீர்கள்.
அரசு சாரா நிறுவனமாக விளங்கும் ஆசியவியல் நிறுவனம் தாங்குநர்களைக் கண்டறிந்து அவர்களிடமிருந்து பொருள்பெற்று நூற்களைப் பதிப்பிக்கும் திறன் போற்றத்தக்கது.
அதற்குத் தாங்கள் குடும்பமாகவுழைப்பதையும் எண்ணிப் பெருமையடைகிறோம்.
இன்னுந் தொடர்ந்து செல்ல வாழ்த்துகிறேன்.
வெல்கவே.
அன்புடன் உங்கள்
மதுரை செ பன்னீர் செல்வம் திசம் 17 2024 1538
மகிழ்ச்சி. நன்றி🙏
ஐயா தங்களை வணங்குகிறேன் தாங்கள் தமிழுக்கு செய்யும் தொண்டு அளப்பரியது
மகிழ்ச்சி. நன்றி🙏