காதலித்து ஏமாற்றிய நபர் - அதிமுக பின்புலத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • திருச்சி-07.10.24
    காதலித்து விட்டு ஏமாற்றிய நபரை மீண்டும் சேர்த்து வைக்க கோரி போலீசில் பெண் புகார் - அதிமுக பின்புலத்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக குற்றச்சாட்டு
    திருச்சியில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம் பெண் ஒருவர் திருச்சியை சேர்ந்த ஸ்ரீ பொன்னய்யன் என்பவரை instagram மூலம் பழக்கம் ஏற்பட்டு அவரை காதலித்து வந்துள்ளார். நீண்ட நாட்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர் இந்த நிலையில் ஸ்ரீ பொன்னையன் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் ஸ்ரீ பொன்னையனிடம் தெரிவித்த போது இது குறித்து வீட்டிற்கு தெரிந்தால் திருமணம் செய்து வைக்க மாட்டார்கள் எனவே கருவை கலைத்துவிடு எனக் கூறி அதற்கான மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்துள்ளனர். அதன் பின் ஸ்ரீ பொன்னையன் அந்த பெண்ணிடம் பேசாமல் இருந்துள்ளார்.
    பலமுறை அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் ஸ்ரீ பொன்னையனை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடைய தோழிகள் அவரை அப்பொழுது காப்பாற்றி உள்ளனர்.
    நான் தற்கொலைக்கு முயன்றதை அறிந்த காதலன் தன்னுடன் சேர்ந்து விடுவார் என அவர் நம்பியுள்ளார் ஆனால் அதன் பின்பும் அவர் முற்றிலுமாக அந்த பெண்ணிடம் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் அதை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தாமதப்படுத்திய காவலர்கள் அந்தப் பெண் திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்தபின் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். இதற்கு இடையே தனக்கு முன் ஜாமீன் வேண்டுமென ஸ்ரீ பொன்னையன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் அந்த முன் ஜாமின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளனர்.
    தற்பொழுது அவர் தலைமறைவாக உள்ளார். இந்த நிலையில் இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண்ணும் அவருடைய வழக்கறிஞர் அமல் ஆண்டனி இருவரும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர் அப்பொழுது பேசிய அந்த பெண்,
    அந்த நபர் தன்னுடைய மாமா திருச்சியில் உள்ள பிரபல எண்ணெய் கடையின் உரிமையாளர் என்றும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் என்றும் கூறியுள்ளார்
    மேலும் முன்னாள் எம்பி பா. குமாரிடம் தான் பணியாற்றி வருவதாகவும் ஸ்ரீ பொன்னையன் தெரிவித்துள்ளார்.
    தன்னை திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறினார். ஆனால் கர்ப்பம் ஆக்கிவிட்டு அவர் ஏமாற்றி சென்றுவிட்டார்
    தற்பொழுது எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை இது குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை நீண்ட போராட்டத்திற்கு பின்பு தான் தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நான் காதலித்து வந்துள்ளேன் அவர் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதுதான் என்னுடைய தற்போதைய கோரிக்கை என்றார்.
    வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து பேசிய வழக்கறிஞர் அமல் ஆண்டனி,
    ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பி.என்.எஸ் 69 சட்டப்படி தான் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தது ஜூலை மாதத்திற்கு முன்பு என்பதால் இந்திய தண்டனைச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதுவும் இந்திய தண்டனை சட்டம் 420 மற்றும் 417 ஆகிய இரண்டு சட்டங்களில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    இந்த இரண்டு சட்டங்களையும் ஒன்றாக சேர்த்து வழக்கு பதிவு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது இருந்த போதும் இவ்வாறு செய்துள்ளது அந்த நபரை காப்பாற்றும் முயற்சியாகவே உள்ளது அதற்கு பின்னால் அரசியல் பலமோ அதிகார பலமோ பண பலமோ எது அவரை காப்பாற்ற முயற்சிக்கிறது என்பது தெரியவில்லை ஆனால் போலீசார் அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ஏற்கனவே போலீசார் அவர் வெளிநாடு தப்பி சென்று விட்டதாக கூறினார்கள் தற்பொழுது அவர் இங்குதான் இருக்கிறார் ஆனால் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை என்கிறார்கள்.
    இதுவே சந்தேகமாக உள்ளது எனவே அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    பேட்டி:
    1. வழக்கறிஞர் அமல் ஆண்டனி
    2. பாதிக்கப்பட்ட பெண்
    #trichy #news #trichydistrictnews #tamil #dmk #breakingnews #trichyngo #tamilnews #trichydmk #police #crime #admk #bjp #எடப்பாடி_பழனிச்சாமி #m.k stalin #tamilnadu arasu #abuse #chennai #kovai #madurai #fir #trichy city police

Комментарии •