Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • காலை 10 மணிஅளவில் சின்னாறு வனப்பகுதி அடைந்து அங்குள்ள வனத்துறை அலுவலகம் அருகில் உள்ள கடையில் தேநீர் அருந்திவிட்டு நதிக்கரை பயணத்தை தொடங்கினோம். கேரள வனத்துறையைச் சார்ந்த அலுவலர்கள் (வழிகாட்டிகள்) எங்களுக்கு முன்பாக இருவரும் பின்புறமாக இருவரும் வந்தார்கள்.
    அடர்ந்த மரங்களின் ஊடே நீரின் சலசலப்பு கேட்டவுடன் நம் மனதில் ஒருவித மகிழ்ச்சி இனம்புரியா ஆனந்தம் அனைத்தும் சேர எப்போது நதியில் கால்நனைப்போம் என்றிருந்தது. இருப்பினும் வழிகாட்டியாக வழிநடத்திய கோவை சதாசிவம் ஐயாவின் ஆலோசனைப்படி நடந்தோம். சின்னாறு தனது பெயருக்கு ஏற்ப அளவாக ஆரவாரமின்றி சில இடங்களில் ஓடிக்கொண்டும், சில இடங்களில் நடந்தும் சென்றது. (இதற்கு தனியாக சதாசிவம் அண்ணன் தந்த விளக்கம் இருக்கே, அது தனி அழகு).
    பின்னர் சின்னாறு வனப்பகுதியின் அமைப்பை அழகாக எடுத்துரைத்தார். சின்னாறு தனிச்சிறப்பு என்பது சாம்பல் அணில் மற்றும் சாம்பல் நிற மந்தி. ஓடுகின்ற ஆற்று நீரில் பல நன்னீர் உயிரினங்கள் வாழ்வதைக் குறிப்பிட்டார். குறிப்பாக நான்கு வகையான மீன்கள், நீர் நாய் போன்றவை குறித்து பேசியபோது ஆர்வம் மேலிட்டது.
    இந்த அனுபவத்தை காணொளி வாயிலாக உங்களுடன்
    பகிர்ந்துள்ளேன். இக்காணொளி 7 பகுதியாக பிரிக்கபட்டு RUclips இல் பதிவேற்றம் செய்துள்ளேன் அதற்கான லிங்க் யையும் இதனுடன் இணைத்துள்ளேன் அனைத்தையும் கண்டுகளியுங்கள்.
    நன்றி!!!

Комментарии • 4

  • @devarajans5658
    @devarajans5658 4 года назад

    தமிழ் ... சிறப்பு...!!!

  • @subhar1153
    @subhar1153 4 года назад

    Iyarkai epothum alagu.. athai rasipom athey samayam paathukaappom ...nice feel☺️👍👌

    • @user-vq1vf8rs1c
      @user-vq1vf8rs1c 4 года назад

      Subha R சிறப்பு வாழ்த்துக்கள் தோழமையே தொடரட்டும் உங்களின் பயணம்

  • @savewildlifetamil
    @savewildlifetamil 4 года назад

    எங்களுக்கு குடுத்துவைக்கல