வங்கப் பூமி இயற்கைவளம் | எங்க ஊரே புதுக்குடியிருப்பு | புதுமைப்பாடல் தோற்றுகை |
HTML-код
- Опубликовано: 17 янв 2025
- @புதுக்குடியிருப்பு
"வங்கப் பூமி இயற்கைவளம்
அங்க நீரே இருபுறமும்
இங்க வயலே இனிதாகும்
எங்க ஊரே புதுக்குடியிருப்பு"
பொங்கு கடல்சூழ்ந்த ஈழம்
மண்ணேரி முனையைப் பற்றும்
கிழக்கு கதிர்தந்த ஆதி
படுவான் எழுவான் சுற்றம்
ஏரிக்கு துவாரமிந்த ஆறு
வடக்கே தாழங்குடா முற்றம்
பறவைக்கு கொக்கிக்குளமே கூடு
தெற்கே கிரான்குளம் தேற்றும்
"வங்கப் பூமி இயற்கைவளம்
அங்க நீரே இருபுறமும்
இங்க வயலே இனிதாகும்
எங்க ஊரே புதுக்குடியிருப்பு"
கடலோரம் தோனாவும் தேக்கிடும்
திரைமீளர் நாவாய்த்திறம் மெச்சிடும்
விரட்டி அலையாடி கலந்து உடனாகும்
கலங்கிக் கலங்காத நெய்தற்கடல் உண்டு
உழுதுண்டு வாழ்வார் உடல்நல்கும்
நீர்வரத்துக் குளம் கொண்ட வேளாண்மை
உவர்ப்பு ஆறோடு சதுப்பு நிலமாகும்
அமைதி ஆற்றும் மருதவயல் உண்டு.
"வங்கப் பூமி இயற்கைவளம்
அங்க நீரே இருபுறமும்
இங்க வயலே இனிதாகும்
எங்க ஊரே புதுக்குடியிருப்பு"
பூவரசம் தொடுவாய் புங்கையடி
தேத்தா புன்னை புளியடி வீதிகளும்
மரத்தோடும் மரபு கொண்ட ஊரே
பழமைசெறி புதுமை நகர் புதுக்குடியிருப்பு
ஞானமொடு ஓர்மமும் அறமுமுண்டு
இனம்காக்க உயிறீந்த மறவருண்டு
இனமக்கள் உயிரிழந்த சுவடுமுண்டு
உணர்வோடு உயிரான புதுக்குடியிருப்பு
"வங்கப் பூமி இயற்கைவளம்
அங்க நீரே இருபுறமும்
இங்க வயலே இனிதாகும்
எங்க ஊரே புதுக்குடியிருப்பு"
#புதுக்குடியிருப்பு_மண்முனைப்பற்று
❤👌✨