ஆறுதல் அளிக்கும் நமது தாய்| தமிழில் ஜெபமாலை | 1-1-2025
HTML-код
- Опубликовано: 19 янв 2025
- இந்த புதிய ஆண்டை கடவுளின் தாயான மரியாவுடன் தொடங்குவோம், வரும் ஆண்டில் அவர் நம்மை வழிநடத்துவார். என்றும் ஆறுதல் அளிக்கும் நமது தாய்...அன்னை மரியாள்
In this video we will pray the Joyful Mystery of the Rosary jebamalai sollum murai in tamil. புதிய ஜெபமாலை சொல்லும் முறை, Rosary in tamil new version, ஜெபமாலை மறையுண்மைகள் ஜெபமாலை தேவ ரகசியங்கள் Saturday Tamil Rosary | #TamilJebamalaisaturday| JoyfulMystery Tamil Rosary| #tamilrosaryprayertoday மகிழ்ச்கை நிறை மறை உண்மைகள் | Joyful Mystery Tamil Rosary | 14-12-2024 Tamil Jebamalai | Saturday Rosary in Tamil | #Tamilrosarydaily #tamiljebamalai #jebamalai #jebamalaitamil #saturdayrosarytamil #saturdayrosary We pray the holy Rosary daily to obtain the graces through the intercession of our Blessed Mother. She sees us through every trials and tribulations and speaks to Jesus on behalf of each one of us. Pray with us daily @5.30 am in the morning
Subscribe to Divine Grace Daily Rosary and kindly subscribe to our channel. @DivineGraceDaily-25
அளவில்லாத சகல நன்மையும், சுரூபியுமயிருக்கிற எங்கள் சர்வேசுரா சுவாமி! நீச மனிதரும் நன்றியறியாத பாவிகளுமாயிருக்கிற அடியோர்களது மட்டில்லாத மகிமை பிரதாபத்தைக் கொண்டிருக்கிற தேவரீருடைய திருச்சந்நிதிலே இருந்து ஜெபம் பண்ணப் பாத்திரமாகாதவர்களாய் இருந்தாலும், தேவரீருடைய அளவில்லாத தயவை நம்பிக்கொண்டு தேவரீருக்குத் துதி வணக்கமாகவும் பரிசுத்த தேவ மாதாவிற்குத் ஸ்தோத்திரமாகவும் ஐம்பத்து மூன்று மணி ஜெபம் பண்ண ஆசையாயிருக்கிறோம். இந்த ஜெபத்தை பக்தியோடே செய்து, பராக்கில்லாமல் முடிக்கத் தேவரீருடைய ஒத்தாசையைக் கட்டளை பண்ணியருளுங்கள் சுவாமி. சகலமான புண்ணியங்களுக்குள்ளே விசுவாசம் என்கின்ற புண்ணியம் அஸ்திவாரமாய் இருக்கிறபடியினாலே முந்த முந்த விசுவாசப்பிரமானம் சொல்கிறது.
ஜெபமாலை செய்யும் முறை:
1. பாடுபட்ட சிலுவையில்:
விசுவாசப் பிரமாணம்:
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து அர்ச்சிஷ்ட கன்னிமரியாயிடமிருந்து பிறந்தார்.
போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து ஜீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய ஜீவியத்தை விசுவசிக்கிறேன்.
-ஆமென்.
2. பெரிய மணியில்:
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல, பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல, எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும்.
ஆமென்.
3. மூன்று சிறிய மணியில்:
1. பரம தந்தையாம் இறைவனுக்கு மகளாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் விசுவாசம் பலனளிக்கும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே. பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்வர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
அர்ச்சிஷ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். -ஆமென்.
2. திருமகனாம் இறைவனுக்குத் தாயாய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் நம்பிக்கை வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
3. தூய ஆவியாராகிய இறைவனுக்கு மிகவும் ஏற்புடையவராய் இருக்கிற புனித இறையன்னையே, எங்களிடம் அன்பு வளரும்படியாக உம் திருமைந்தனை மன்றாடும்.
அருள் நிறைந்த....
4. மூன்று சிறிய மணிகளுக்குப் பின்:
திரித்துவத் துதி:
பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல, இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென்.
5. ஒவ்வொரு மறை உண்மைகளைச் சொல்லி தியானிப்போம்:
ஒரு பரலோக மந்திரம், 10 அருள் நிறைந்த மந்திரம் மற்றும் ஒரு திரித்துவத் துதி சொல்வோம்.
6. ஒவ்வொரு பத்து மணிகள் முடிந்ததும்:
ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
நரக நெருப்பிலிருந்து எங்களை மீட்டருளும்.
எல்லாரையும் விண்ணுலகப் பாதையில் நடத்தியருளும்.
உமது இரக்கம் யார் யாருக்கு அதிகத் தேவையோ அவர்களை மோட்சம் கொண்டு சேர்த்தருளும்.
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள்:
(திங்கள், சனி)
1.கபிரியேல் தூதர் கன்னிமரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானித்து, தாழ்ச்சி என்னும் வரத்தைக் கேட்டுச் செபிப்போமாக.
2. கன்னி மரியாள் எலிசபெத்தம்மாளைச் சந்தித்ததைத் தியானித்து, பிறரன்பு என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
3. இயேசு பிறந்ததைத் தியானித்து, எளிமை என்னும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
4. இயேசு கோயிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்ததை தியானித்து, இறைவனின் திருவுளத்துக்குப் பணிந்து நடக்கும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.
5. காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததை தியானித்து, நாம் அவரை எந்நாளும் தேடும் வரத்தைக் கேட்டு செபிப்போமாக.