சென்னையில் டிசம் 17-19 தேதிகளில் மிகுந்த எச்சரிக்கையும், கவனமும் தேவை| தாழ்வு பகுதி தீவிரமடைகிறது|

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024
  • டெல்டாவெதர்மேன் 5ம் சுற்று பருவமழை முன்னறிவிப்பு எண் : 6| தேதி: 16.12.2024 பிற்பகல் 3 மணி 30 நிமிடங்கள்
    வானிலை வாட்ஸ் அப் குழுவில் இணைய:
    chat.whatsapp....
    வானிலை அமைப்பு:
    == தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகர்ந்துள்ளது.
    == இத்தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் நன்குமைந்த தாழ்வு பகுதியாக மாறி இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிக்கு நகர்ந்து பிறகு வடதமிழக கடற்கரை நோக்கி மிக மெதுவாக நகரத்துவங்கும்.
    == இச்சலனம் சாதகமான வானிலை காரணிகளால் கடற்கரை அருகே வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. தாழ்வு மண்டலமாக மாறுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
    =======================================
    வானிலை எதிர்ப்பார்ப்பு:
    1. இச்சலனமும் கடந்த சலனங்கள் போன்றே அரேபிய உயரழுத்தம், பசிபிக் உயரழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை என பல வானிலை காரணிகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
    2. சாதகமான கடல்வெப்பநிலை, கடல் சார்ந்த அலைவுகள் மற்றும் காற்று முறிவு காரணமாக மழைப்பொழிவை கொடுக்கூடிய சலனமாக அமையும்.
    3. தென்மேற்கு வங்ககடலில் இருந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும் போதும் மிக மெதுவாக நகர்வதற்கும், தமிழக கடல்பகுதியில் ஒரே இடத்தில் மையம் கொள்வதற்கும் வாய்ப்புகள் தெரிகிறது.
    4. டிசம்பர் 17 (நாளை) காலை முதல் டிசம் 20 வரையிலான 4 நாட்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும். இந்த 5ம் சுற்று மழை டிசம் 22 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
    5. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17,18, 19 தேதிகளில் பரவலாக மிககனமழைக்கு வாய்ப்பு தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் டிசம்பர் 17,18,19 தேதிகளில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை!
    6. #சென்னை, #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #செங்கல்பட்டு #விழுப்புரம் #புதுச்சேரி #கடலூர் மாவட்டங்களில் டிசம்பர் 17-19 தேதிகளில் பரவலாக கன முதல் மிககனமழை வரை எதிர்ப்பார்க்கலாம். டிசம்பர் 17ம் தேதி இரவு முதல் டிசம்பர் 19ம் தேதி காலை வரையிலான 36 மணி நேரத்தில் #சென்னை, #திருவள்ளூர், #காஞ்சிபுரம், #செங்கல்பட்டு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் அதித கனமழை வாய்ப்பு உள்ளது.
    7. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மண்ணின் ஈரப்பதம், நீர் நிலைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் பகுதிகளின் தாழ்வான, நீர் நிலைகள் அருகே வசிக்கும் மக்கள் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் டிசம் 20ம் தேதி வரை இருக்க வேண்டியது அவசியம்.
    8. அதேபோல பெஞ்சல் புயல் பாதித்த #புதுச்சேரி #கடலூர் #விழுப்புரம் #திருவண்ணாமலை மாவட்டங்களில் சற்று கூடுதல் கவனம் தேவை.
    9. டெல்டா மாவட்டங்களான #நாகப்பட்டினம் #மயிலாடுதுறை #காரைக்கால் #திருவாரூர் #தஞ்சாவூர் மாவட்டங்களில் டிசம் 17,18, ஆகிய தேதிகளில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களிக் கனமழையும் பதிவாகும்.
    10. தென் மாவட்டங்கள் & உள் மாவட்டங்களில் டிசம்பர் 19ம் தேதி வரை பெரிதாக மழை பதிவாக வாய்ப்பு இல்லை என்றாலும், இச்சலனம் வலுவிழந்த பின்பு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென்மாவாட்டங்கள் என் ஒட்டுமொத்த தமிழகக்திலும் இடி மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
    சலனத்தின் நகர்வை பின் தொடர்ந்து அறிக்கைகள் தொடர்ந்து வழங்கப்படும்.
    என்றும் இயற்கையுடன்
    டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர்
    #northeastmonsoon2024 #Northeastmonoon #Deltarians #ChennaiRains
  • НаукаНаука

Комментарии •