"கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்"(6/106) "சுத்த சிவநிலை"
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஆறாம் திருமுறை / Sixth Thirumurai
106. சுத்த சிவநிலை
நேரிசை வெண்பா
திருச்சிற்றம்பலம்
1. கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்
கலந்தான் கருணை கலந்து.
2. எல்லா
நலமும் எனக்கே கொடுக்கின்றான்
எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
ஒன்றாகி நின்றான் உவந்து.
3. எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.
4. சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்
நித்தியனென் உள்ளே நிறைகின்றான் - சத்தியம்ஈ
தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்
சந்தோட மாய்இருமின் சார்ந்து.
5. அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன்
அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்
செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.
6. அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே
அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார்
சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்
உடையான் உளத்தே உவந்து.
7. தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்
தானே எனக்குத் தருகின்றான் - தானேநான்
ஆகப் புரிந்தானென் அப்பன் பெருங்கருணை
மேகத்திற் குண்டோ விளம்பு.
8. பாலும் கொடுத்தான் பதிதிறக்கும் ஓர்திறவுக்
கோலும் கொடுத்தான் குணங்கொடுத்தான் - காலும்
தலையும் அறியும் தரமும் கொடுத்தான்
நிலையும் கொடுத்தான் நிறைந்து.
9. வெவ்வினையும் மாயை விளைவும் தவிர்ந்தனவே
செவ்வைஅறி வின்பம் சிறந்தனவே - எவ்வயினும்
ஆனான்சிற் றம்பலத்தே ஆடுகின்றான் தண்அருளாம்
தேன்நான் உண் டோங்கியது தேர்ந்து.
10. வஞ்சவினை எல்லாம் மடிந்தனவன் மாயைஇருள்
அஞ்சிஎனை விட்டே அகன்றனவால் - எஞ்சலிலா
இன்பமெலாம் என்றனையே எய்தி நிறைந்தனவால்
துன்பமெலாம் போன தொலைந்து.
#thiruvarutpa#vallalar#arutperumjothi#வடலூர்வள்ளலார் #arutperunjothi #சிதம்பரம்இராமலிங்கம் #திருவருட்பா# #திருஅருட்பா#ஆறாம்திருமுறை #சுத்தசிவநிலை#சமரசசுத்தசன்மார்க்கம் #சன்மார்க்கம் #வடலூர்வள்ளல்பிரான் #திருச்சிற்றம்பலம் #சிவமயம் #thiruchitrambalam