CHURCH BELL/ VASEL MISSION /416 நற்செய்தியின் திறவுகோல் - அன்பு -Breaking News - Luke 10: 25-37
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- CHURCH BELL/ VASEL MISSION /416 நற்செய்தியின் திறவுகோல் - அன்பு -
Breaking Good News
Bible - New Testament - Translation English to Tamil
The Gospel of Luke - Love -
Chapter 10 Verses 25 to 37
The Samaritan is a character in the Christian Bible in the parable of the Good Samaritan. This parable, told by Jesus, is found in the Gospel of Luke (Luke 10:25-37).
Some information about the parable of the Good Samaritan:
The term "good Samaritan" is commonly used to refer to a person who saves or helps a stranger in need.
The parable of the Good Samaritan is one of the stories that Jesus told during his Sermon on the Mount.
The parable of the Good Samaritan is very helpful for the development of human society.
25 Just then a lawyer stood up to test Jesus. "Teacher," he said, "what must I do to inherit eternal life?"
26 He said to him, "What is written in the law? What do you read there?"
27 He answered, "You shall love the Lord your God with all your heart, and with all your soul, and with all your strength, and with all your mind; and your neighbor as yourself."
28 And he said to him, "You have given the right answer; do this, and you will live."
29 But wanting to justify himself, he asked Jesus, "And who is my neighbor?"
30 Jesus replied, "A man was going down from Jerusalem to Jericho, and fell into the hands of robbers, who stripped him, beat him, and went away, leaving him half dead.
31 Now by chance a priest was going down that road; and when he saw him, he passed by on the other side.
32 So likewise a Levite, when he came to the place and saw him, passed by on the other side.
33 But a Samaritan while traveling came near him; and when he saw him, he was moved with pity.
34 He went to him and bandaged his wounds, having poured oil and wine on them. Then he put him on his own animal, brought him to an inn, and took care of him.
35 The next day he took out two denarii, gave them to the innkeeper, and said, 'Take care of him; and when I come back, I will repay you whatever more you spend.'
36 Which of these three, do you think, was a neighbor to the man who fell into the hands of the robbers?"
37 He said, "The one who showed him mercy." Jesus said to him, "Go and do likewise."
பைபிள் - புதிய ஏற்பாடு - மொழிபெயர்ப்பு ஆங்கிலம் - தமிழ்
நற்செய்தியின் திறவுகோல் - அன்பு -
Breaking Good News
யோவான் நற்செய்தி
தமிழ்
சமாரியன் என்பது, கிறிஸ்தவ விவிலியத்தில் உள்ள நல்ல சமாரியன் உவமைக்குள் வரும் ஒரு கதாபாத்திரம். இயேசு கூறிய இந்த உவமை, லூக்கா நற்செய்தியில் (லூக்கா 10:25-37) உள்ளது.
நல்ல சமாரியன் உவமை குறித்த சில தகவல்கள்:
தேவைப்படும் அந்நியரைக் காப்பாற்றும் அல்லது உதவும் நபரைக் குறிக்க "நல்ல சமாரியன்" என்ற சொல் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.
இயேசு தனது மலைப்பிரசங்கத்தின்போது கூறிய கதைகளில் நல்ல சமாரியன் உவமையும் ஒன்று.
மனித சமூக மேம்பாட்டுக்கு நல்ல சமாரியன் உவமை பெரிதும் உதவுகிறது.
25 திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
26 அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக்கிறீர்?" என்று அவரிடம் கேட்டார்.
27 அவர் மறுமொழியாக, "உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக" என்று எழுதியுள்ளது" என்றார்.
28 இயேசு, "சரியாய்ச் சொன்னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
29 அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார்.
30 அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை; "ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடைகளை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31 குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறு பக்கமாக விலகிச் சென்றார்.
32 அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கமாய் விலகிச் சென்றார்.
33 ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார்.
34 அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார்.
35 மறுநாள் இருதெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, "இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்" என்றார்.
36 "கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார்.
37 அதற்கு திருச்சட்ட அறிஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்