பிறர் வாழ வேண்டுமெனில் - Pirar Vala Vendumenil - Lyrical Video
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Lyrics: Dr. Thomas Thangaraj
Vocals: Alfred Vethanayagam
Music & Edit: Ronnie Allen
-------------------
பிறர் வாழவேண்டுமெனில்
நான் சாக வேண்டும்
நான் சாகவேண்டுமெனில்
அவர் வாழ வேண்டும் - எனில் இயேசு
தினம் வாழவேண்டும்
1. நான் என்னும் ஆணவத்தால்
நாளெல்லாம் வாழ்ந்திருந்தேன்
பிறர் வாழ்வை எண்ணாமல்
பாதையிலே மயங்கி நின்றேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
2. மற்றவர்கள் மனம் மகிழ
மன்னவனே நீ மரித்தாய்
மற்றவர்கள் மனம் நோக
மதியிழந்து நான் இருந்தேன்
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்
3. உலகுக்காய் நான் வாழ
ஒரு மனது துடிக்கையிலே
உள்ளுக்குள் கறைபட்ட
மறுமனது மறுத்ததையா
இன்றே என்னை அர்ப்பணம் செய்திடுவேன்