PRAISE & WORSHIP.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • 1. கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமே
    கருத்துடன் துதிப்போம் இனிய நாமமதை
    கடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்
    கரைபில்லை அவரன்பு கரையற்றதே
    இயேசு நல்லவர் இயேசு வல்லவர்
    இயேசுவைப்போல் வேறோர் நேசரில்லையே
    2. கொடுமையோர் சீறல் பெருவெள்ளம் போல
    அடிக்கையில் மோதியே மதில்களின் மீதே
    பெலனும் இவ்வேழைக்கும் எளியோர்க்கும் திடனாய்
    வெயிலுக்கும் ஒதுங்கும் விண் நிழலுமானார்
    3. போராட்டம் சோதனை நிந்தை அவமானம்
    கோரமாய் வந்தும் கிருபையில் நிலைக்க
    தேவ குமாரனின் விசுவாசத்தாலே நான்
    ஜீவித்து சேவிக்கத் திடமளித்தார்
    4. கல்லும் முள்ளுகளுள்ள கடின பாதையிலே
    கலக்கங்கள் நெருக்கங்கள் அகமதை வருத்த
    எல்லை இல்லா எதிர் எமக்கு வந்தாலும்
    வல்லவர் இயேசு நம் முன் செல்கிறார்
    5. சீயோனில் சிறப்புடன் சேர்ந்திட இயேசு
    சீக்கிரம் வரும் நாள் நெருங்கி வந்திடுதே
    முக முகமாகவே காண்போமே அவரை
    (நாம் )யுக யுகமாகவே வாழ்ந்திடுவோம்

Комментарии •