தெரியாம செய்துட்டேன்... தோப்புக்கரணம் போட்ட திருச்செந்தூர் கோயில் தெய்வயானை
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- திருச்செந்தூர் கோவில் யானையிடம் " இனி யாரையும் அடிப்பியா " என பாகன் கேட்டதற்கு தலையாட்டி மாட்டேன் என பதிலளித்து தோப்புக்கரணம் இட்டு மன்னிப்பு கேட்டது நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி கோவில யானை தெய்வானை தாக்கியதில் யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் இருவரும் உயிரிழந்தனர். பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யானை 21 நாட்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த நிலையில் 18-ம் நாளான இன்று வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழு இன்று யானை தெய்வானையை பரிசோதனை செய்தனர். அப்போது யானைக்கு பழங்கள் மற்றும் உணவுகளை வழங்கி யானை பாகன்களிடம் யானையின் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். அப்போது யானைப்பாகன் செந்தில் குமார் யானை தெய்வானையிடம் "இனி யாரையும் அடிப்பியா..? " என கேட்டதற்கு "தலையாட்டி" மாட்டேன் என பதில் அளித்தது. தொடர்ந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேள் என்றதும் தன் தும்பிக்கையை காதில் வைத்து ஒரு காலை தூக்கி தோப்புக்கரணம் இட்டு மன்னிப்பு கேட்டு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து யானை முழு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிவித்த மருத்துவக்குழுவினர் இனி யானைக்கு நடை பயிற்சி வழங்க வேண்டி உள்ளது அவசியமாக இருப்பதாகவும் கால்நடை மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். யானைப்பாகனின் கேள்விக்கு பதில் அளித்ததுடன் செய்த தவறுக்கு தோப்புக்கரணம் இட்டு மன்னிப்பு கேட்டது நெகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.