பன்னீர் ஃப்ராங்கி ரோல் | Paneer Frankie Recipe in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • We also produce these videos on English for everyone to understand
    Please check the link and subscribe
    • Paneer Frankie | Panee...
    பன்னீர் ஃப்ராங்கி ரோல் | Paneer Frankie in Tamil
    தேவையான பொருட்கள்
    பன்னீர் - 200 கிராம்
    தயிர் - 3 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    காஷ்மீரி சில்லி பவுடர் - 1 தேக்கரண்டி
    மல்லி தூள் - 1 தேக்கரண்டி
    சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
    கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
    சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    1/2 பழம் - எலுமிச்சை சாறு
    எண்ணெய் - 2 தேக்கரண்டி
    சப்பாத்தி
    புதினா & கொத்தமல்லி சட்னி செய்ய
    புதினா இலைகள்
    கொத்துமல்லி தழை
    பச்சை மிளகாய் - 2
    பூண்டு - 2 பற்கள்
    இஞ்சி
    1/2 பழம் - எலுமிச்சை சாறு
    சீரகம் - 1/4 தேக்கரண்டி
    தயிர் - 2 தேக்கரண்டி
    தண்ணீர்
    கலா ​​நாமக் - 1/4 தேக்கரண்டி
    காய்கறி சாலட் செய்ய
    வெங்காயம் - 1
    குடை மிளகாய் - 1
    கேரட் - 1
    முட்டைக்கோஸ்
    சாட் மசாலா - 1 தேக்கரண்டி
    #பன்னீர்ஃப்ராங்கி #PaneerFrankie #PaneerRoll
    செய்முறை
    1. ஒரு கிண்ணத்தில் பன்னீர் துண்டுகள், கெட்டி தயிர், மஞ்சள் தூள் காஷ்மீரி மிளகாய் தூள் ,மல்லித்தூள் ,சீரகத்தூள் ,கரம் மசாலா தூள் சாட் மசாலா தூள் ,தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்
    2. அடுத்து ஊறவைத்த பன்னீர் துண்டுகளை கடாயில் சேர்த்து நன்கு வறுக்கவும்
    3. இதற்க்கு புதினா சட்னி தயார் செய்ய வேண்டும்
    4. இதற்க்கு ஒரு மிக்ஸியில் புதினா இலை, கொத்தமல்லி இலை, பூண்டு, கெட்டி தயிர்,ஒரு துண்டு இஞ்சி ,தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
    5. அடுத்து ஒரு காய்கறி சாலட் செய்ய ஒரு கிண்ணத்தில் மெல்லிதாக நறுக்கிய பெரிய வெங்காயம், குடை மிளகாய், கேரட், முட்டை கோஸ், சாட் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்
    6. இறுதியான ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் செய்து வைத்த புதினா சட்னி, காய்கறி சாலட் மற்றும் ஊறவைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து சுருட்டி வைத்துக்கொள்ளவும்
    7. பன்னீர் ஃப்ராங்கி ரோல் தயார்

Комментарии • 42