நாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy in Tamil |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #chickengravy #nattukozhigravy #chicken
    நாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy
    தேவையான பொருட்கள்
    நாட்டுக் கோழி சிக்கன் 1/2 -கிலோ
    சின்னவெங்காயம் - 150 கிராம்
    இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூணு ஸ்பூன்
    மல்லி, மிளகாய் சேர்த்து அரைத்த மசாலா பொடி - 3 ஸ்பூன் / • Kulambu milagai thool ...
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
    தேங்காய் துருவல் - நான்கு ஸ்பூன்
    சீரகத்தூள் - ஒரு ஸ்பூன்
    தாளிப்பதற்கு
    பட்டை ,சோம்பு, ஏலக்காய் - சிறிதளவு
    கருவேப்பிலை ,மல்லி இலை - தேவையான அளவு
    நல்லெண்ணெய் - ஒரு குழி கரண்டி அளவு
    உப்பு - தேவையான அளவு
    செய்முறை
    குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு ,ஏலக்காய் போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி அதோடு மஞ்சள்தூள் , சேர்த்து கழுவிய சிக்கன் ,இஞ்சி பூண்டு பேஸ்ட் , உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி அதோடு மிளகாய்தூள் ,மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போக 10 நிமிடம் நன்கு வதக்கவும்.
    பின்பு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
    பின்பு தேங்காய் துருவல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் சேர்த்து நன்கு வதக்கி கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்.
    பின் ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கால் ஸ்பூன் சோம்பு ,மல்லி இலை கருவேப்பிலை போட்டு தாளித்து கிரேவியில் ஊற்றி கலந்துவிட்டால் மிகவும் ருசியான நாட்டுக்கோழி கிரேவி ரெடி.
    நாட்டு கோழி வாங்கி இந்த மாதிரி மிளகு ,சீரகம் பொடித்து போட்டு நாட்டு கோழி வறுவல் செய்து சாப்பிடுங்க
    இந்த நாட்டுகோழி வறுவல் சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட சாம்பார் ,ரசம் ,தயிர் சாதத்திற்கு சூப்பரா இருக்கும் வாங்க எப்படி செய்றதுனு பார்க்கலாம்
    நாட்டுக்கோழி தசைகளுக்குத் தெம்பைக் கொடுக்கவும், நரம்புகளுக்கு உரத்தை அளிக்கவும் நாட்டுக் கோழியினங்கள் உதவுகின்றன. சுவாச நோய்களுக்கும் நாட்டுக் கோழி சிறந்த மருந்து
    நாட்டுக் கோழி கிரேவி | Nattu kozhi gravy | Asaiva samayal
    For More Recipes Visit samayalkurippu....
    NATTU KOLI GRAVY IN TAMIL samayal kurippu in Tamil
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/NQFN5s
    Follow us on blogspot goo.gl/CWdapK
  • ХоббиХобби

Комментарии • 53