பைகளில் உள்ள மகோகனி 🌳 (மரக்கன்றுகளை) எப்படி நடவு செய்ய வேண்டும் ? 0 mortality/Ganesh nursery

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • வாழை கரும்பு -நெல் -சோளம் போன்ற எந்த விவசாயம் வேண்டுமானாலும் செய்யுங்கள் ..!! விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களில் விலை மதிப்பு மிக்க மகோகனி(12 வருடம் ) சந்தனம் (20 வருடம்) செம்மரம் (20 வருடம்)
    போன்ற மரங்களை அது உங்களுக்கு கொடுக்கும் பலன் மிகப்பெரிய அளவில் இருக்கும் ..
    எண்ணற்ற விவசாயிகள் என்னிடம் பேசும்போது அது ஒன்றே ஒன்றுதான் தொடர்ந்து கூடுவார்கள் நூறு செம்மர செடிகளை வாங்கி வைத்தேன் அதில் 10 or 20 செடி தான் வந்துள்ளது என்றும் அந்த இருபது செடிகளும் வேகமாக வளராமல் வருடக்கணக்கில் ஒரே உயரத்தில் இருப்பதாகவும் சொல்வார்கள்
    உங்களது உழைப்பையும் ..
    நேரத்தையும்..
    பணத்தையும்..
    மிச்சப் படுத்துங்கள்..
    தமிழ்நாட்டில் எந்த ஒரு நர்சரி காட்ட முடியாத ஒரு அற்புதமான விஷயத்தை உங்களுக்கு கணேஷ் நர்சரி காட்ட தயாராக இருக்கிறது 3 மாத செம்மரக் கன்றுகள் தொடங்கி அறுவடைக்கு தயாராக இருக்கும் 20 வருட செம்மரம் வரை எங்கள் நர்சரியில் நீங்கள் வந்து பார்த்து உங்களுக்கு பிடித்த செம்மரக் கன்றுகள் மற்றும் மரக்கன்றுகளை வாங்கலாம் .. நர்சரி உலகில் எங்களுடைய வயது 40 கணேஷ் நர்சரி தமிழ்நாட்டின் மிகப்பெரிய மொத்தவிலை நர்சரி..
    உயரமான மரக்கன்றுகளை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டிற்கு நீங்கள் ஒரு வருட மரக்கன்றை தேர்வு செய்வதாக வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஒரு வருடத்தில் அந்த மரக்கன்று மழைக்காலம் வெயில்காலம் பனிக்காலம் போன்ற அனைத்து சூழ்நிலைகளையும் தாங்கி வந்திருக்கும் இதனால் உங்கள் தோட்டத்தில் வந்து இறப்பது என்பது அரிதாகவே இருக்கும் !!உங்களுடைய நேரத்தையும் ..உழைப்பையும் ..
    பணத்தையும் மிச்சப் படுத்துங்கள்..
    விதைகளை வீரியமான தாய் மரங்களிலிருந்து 35 வருட கடந்த தாய் மரத்திலிருந்து மட்டுமே விதைகளை பெறுகிறோம் (CPT Tree )இதனால் செடிகள் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இயற்கையாகவே வளரும்..
    40 வகையான மரக்கன்றுகள் கிடைக்கும் 40வருட அனுபவத்தோடு..& மேலும் விலை உயர்ந்த செம்மரக் கன்றுகள் 1 அடி முதல் 6 அடி 7 அடி முதல் 8 உயரம் வரை கிடைக்கும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் ஒரே இடத்தில் ....
    (கொரியர் அனுப்ப இயலாது)
    GANESH NURSERY GARDEN
    FIRST BLOCK , VELLALAVIDUTHI, TALUK, Gandarvakkottai, Tamil Nadu
    Contact:9943119955/9443065802
    மரப் பயிர் சாகுபடி செய்வதற்கு முன் நிலத்தை தயார் பண்ணுவதற்கான முறைகள்:
    1.எந்த வகை நிலமாக இருந்தாலும் முறையான மண் வளபாதுகாப்பு பணியான நிலத்தை சுற்றி வரப்புகள் அமைத்தல் குறித்து வரப்புகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளை முதலில் செய்து கொள்ள வேண்டும்
    2. அடுத்து முடிந்தவரை பலதானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரங்களை வளர்த்து 45வது நாள் மடக்கி உழுது மிகவும் சிறப்பானது. 3.அதன் பின்பு மண்ணுக்கு ஏற்ற வகையிலான குழி எடுத்து தேவையான அளவு இயற்கை இடுபொருட்களை இட்டு வளர்க்கவேண்டும்
    4.ஒவ்வொரு பட்டத்திலும் ஏதாவது ஒரு பயறு வகை பயிர்களை மரத்தின் வேர்களை அதிகம் காயப்படுத்தாத அளவிற்கு மேலோட்டமாக உழுது விதைத்து பயிர் செய்வது நல்லது.
    5 அவ்வாறு ஊடுபயிர் செய்ய விரும்பாதவர்கள் கொழுக்கட்டை புல் போன்ற புல்வகைகளை விதைத்து முழுமையாக வளர்த்து பயன்பெறலாம்
    6.பயிருக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்க வைப்பது மரம் எளிமையாக மரத்தின் தண்டு பெருத்து வளர உதவி செய்யும்.
    7. நாம் வளர்க்கும் மரத்திலிருந்து விழும் இலைகளை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே மக்க வைக்க வேஸ்ட் டீகம்போஸர் தெளித்து விட வேண்டும் 8.வருடத்திற்கு ஒருமுறையாவது பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து 45- 50 வது நாள் மடக்கி விடுவது நல்லது.
    9. மரத்தின் மொத்த உயரத்தில் தரையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தை மட்டுமே கவாத்து பண்ண வேண்டும் மீதியுள்ள இரண்டு பாகம் அளவிற்கு அதிக இலைகளோடு மரங்கள் இருந்தால் மரங்கள் தண்டு பெருத்து வளரும்.

Комментарии • 14

  • @iamnitinkarn
    @iamnitinkarn 2 года назад +3

    We are from vasai mumbai we plant trees every Sunday, you are doing great job

  • @b.kannan4786
    @b.kannan4786 3 года назад +1

    அனைத்து தகவல்களும் அருமை ஐயா! நன்றி 🎄 🌲 🌳 🌴🌿 ☘️ 🍀 🎍🌱😀😀😀

  • @thangammariappan8578
    @thangammariappan8578 Год назад +1

    எந்த மரம் நடுவதற்கு முன்பு இரண்டு நாட்கள் முன்பு குழி தொன்டி காற்று படவேண்டும். குழி கொஞ்சம் ஆழமாக இருந்தால் நல்லது உரம் போட்டு தான் நடவேண்டும். நம்மாழ்வார் சொல்வதை பார்த்தால் நன்மை பயக்கும்

  • @Premkumar-pf7pq
    @Premkumar-pf7pq 3 года назад

    Awesome information...

  • @mohammedsalman9313
    @mohammedsalman9313 3 года назад

    I don't know why I'm watching your all videos ☺️❣️

  • @srikrishnasakthivel372
    @srikrishnasakthivel372 3 года назад +3

    Anna thanks, please post more videos about mahagoni plant Anna, after harvesting ( cutting) after 10 to 15 year's the mahagoni plant will it grow again and like teak tree and neam tree Anna

    • @indianredsandal
      @indianredsandal  2 года назад +1

      இந்த தாவரம் teek செடி போல் திரும்ப வளராது

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 года назад +1

    அடி உரம் என்ன போடலாம் ...

  • @prasannamk3091
    @prasannamk3091 3 года назад +2

    உரம் தேவை இல்லையா

  • @Motor.vivasayi
    @Motor.vivasayi 3 года назад

    Super bro

  • @rasugoundar2075
    @rasugoundar2075 3 года назад +1

    Gandarvakkottai

  • @annarajarputham
    @annarajarputham 3 года назад +1

    we are calling you you are not answer the phone