செந்தமிழ்த் தேன் மொழியாள் | Senthamizh Thenmozhiyal Song by Maalayitta Mangai 1958 | senthamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • excellent evergreen song...........
    Song: Senthamizh thenmozhiyal - பாடல்: செந்தமிழ்த் தேன் மொழியாள்
    Movie: - திரைப்படம்: மாலையிட்ட மங்கை
    Singers: T.R. Mahalingam - பாடியவர்: டி.ஆர். மஹாலிங்கம்
    Lyrics: Poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    Music: M.S. Viswanathan, T.K. Ramamurthy - இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
    Year: - ஆண்டு: 1958
    சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
    மணம் பெறுமோ வாழ்வே ஆ.ஆ. ஆஆஆஆஆ
    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ ஆ..ஆஆ...ஆஆ.
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க்
    கற்பனை வடித்தவளோ
    சேற்றில் மலர்ந்த செந்தாமரையோ
    செவ்வந்திப் பூச்சரமோ - அவள்
    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிர்க்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்
    கண்களில் நீலம் விளைத்தவளோ அதைக்
    கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ - அவள்
    செந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள் நிலாவென
    சிர்க்கும் மலர்க் கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
    பருகிடத் தலை குனிவாள்

Комментарии • 763

  • @m.mensonpreeth7133
    @m.mensonpreeth7133 5 лет назад +224

    யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..!!!
    💪💪💪

  • @ILANGO6427
    @ILANGO6427 7 лет назад +384

    இந்த பாடல்களைக் கேட்பதற்காகவே அடுத்த பிறவியிலும் தமிழனாகப் பிறக்கவேண்டும்

    • @Surya-fp8km
      @Surya-fp8km 5 лет назад +2

      Aama nanba

    • @seyedabbas625
      @seyedabbas625 5 лет назад +4

      உண்மை நன்பா

    • @arunskillsrange
      @arunskillsrange 5 лет назад +6

      என்றும் தமிழனாக பிறத்தல் வேண்டும்

    • @SKR144
      @SKR144 4 года назад

      Well said bro

    • @sreeharisureshbabu268
      @sreeharisureshbabu268 4 года назад +2

      சகோ....🙌🙌🙌🙌😎

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 4 года назад +77

    1958 லவ் எழுதிய பாடல் 1991 பிறந்த நான் 2020 தில்லும் ரசிக்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து இருக்கும்

  • @ravirathikaravirathika6044
    @ravirathikaravirathika6044 2 года назад +23

    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலைகுனிவாள் எவ்வளவு அழகான காதல் வரிகள் 90's kids ah irunthalum இப்போது வரை திகட்டாத பாடல்

    • @rdrajini6315
      @rdrajini6315 2 года назад +1

      Ama unmai than

    • @soundarapandiyanp6986
      @soundarapandiyanp6986 2 года назад

      @@rdrajini6315 ஆமாம் ரவி ராதிகா சொல்வது உண்மைதான்

  • @thaniyarasusankari567
    @thaniyarasusankari567 7 лет назад +9

    தமிழுக்கு இணையான மொழி உலகில் ஏது...!!!

  • @sjayasrisjayasri324
    @sjayasrisjayasri324 4 года назад +105

    Anyone in 2020? Lockdown made us enjoy these old songs.

  • @bagyalakshmi3297
    @bagyalakshmi3297 Год назад +11

    இதுவரை 734 பதிவுகள்.
    ஆரோக்யமான காதலை ரசித்த
    எத்தனை உள்ளங்கள்

    • @Kumaravel786
      @Kumaravel786 Месяц назад

      ❤️❤️❤️❤️❤️

  • @bhuvanadhanasekar8665
    @bhuvanadhanasekar8665 Год назад +7

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன் old is gold nu அப்பா சொல்லுவா
    ரு இப்ப புரியுது

  • @rizxred
    @rizxred 4 года назад +9

    I'm from Kerala.
    Aanaal intha paadalum thamizhum enakku romba pidikkum.
    Thamizh migha arumayaana mozhi. ❤️

  • @arunskillsrange
    @arunskillsrange 5 лет назад +72

    அந்த கால ஆட்டம் என்ன அழகு
    அந்த கால பாட்டு என்ன அருமை
    இன்று வரும் ஓசையில் அது இல்லை அன்று வந்தது இசை

  • @sureshkumar-zj3gg
    @sureshkumar-zj3gg 2 года назад +14

    இந்த பாடலை கேட்கும் போது....ஏதோ என் வாழ்க்கையில் முழுமை அடைந்த விட்டதாக தோன்றுகிறது

  • @sundarbabu3420
    @sundarbabu3420 4 года назад +5

    பாராட்ட வார்த்தைகள் இல்லை. இனிது இனிது தமிழ் மொழி இனிது.....

  • @saravanamurugan4426
    @saravanamurugan4426 4 года назад +6

    தமிழுக்கு நிகர் தமிழ்த்தான். மானிடனாய் பிறப்பது அரிதென்றால், தமிழனாய் பிறப்பது அதினும் பாக்கியம் 😄💓

  • @albertsugumar8823
    @albertsugumar8823 Год назад +3

    நான் 1973ல் பிறந்தவன்
    இது போன்ற அற்புத பாடல்கள் நமது மூத்தவர்களுடனான மலரும் நினைவுகளை நமக்கு ஞாபகமூட்டும் ஒரு வாய்ப்பு

  • @ravisankar926
    @ravisankar926 5 лет назад +2

    இத்தகைய அழகான வரிகளை தமிழ் வரிகளை கண்ணதாசனால் மட்டுமே எழுத முடியும் கண்ணதாசனைப் போல் இனி ஒரு கவிஞனை நம்மால் பார்க்க முடியுமா

  • @rajarajan6018
    @rajarajan6018 Год назад +12

    உயிர் உள்ள வரை ரசித்து பார்க்க வைக்கும் பாடல்

  • @playwithdurai6024
    @playwithdurai6024 Год назад +5

    தொடர்ந்து ஓராயிரம் தடவைகூட கேட்கலாம் நல்ல ரசனையுடன்

  • @GokulM-mn2cb
    @GokulM-mn2cb 4 года назад +82

    இதுதாண்டா real melody song♥️♥️

  • @shyamananth
    @shyamananth 6 лет назад +2

    தேனாய் ஒளிக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் ஈர்ப்பு குறையவே இல்லை. மீண்டும் மீண்டும் கேட்க ஆசை வருகின்றது.

  • @maniansivamani1810
    @maniansivamani1810 10 месяцев назад

    சொங்கொடி காணவில்லை தமிழக எங்குமே வளரவில்லை தமிழகம் எங்கும்வளரவில்லை
    பட்டம்பெறவே துடித்தும் கொடியார் சிரித்திடும் மக்கள்உடையார்.

  • @malayalanmk4466
    @malayalanmk4466 4 года назад +1

    எந்தஒரு ஆண்மகனுக்கும் இந்தபாடலைகேட்டல் இளாமையுடன் காதல்அரும்பும். கவியரசு கண்ணதாசன்படைத்த பெண்மையைபுகழும்அற்புதபாடல்.இசைஅமைப்பு அருமை .T.R.மாகலிங்கம். நடிப்புஉடன்சொந்தகுரல்வளம் E.V.சாரோஜாநாட்டியம்ஆககறும்புச்சாறூகுடித்ததுபோல் மணதுக்குஇதமாகஉள்ள அற்புதபாடல்👍

  • @varunprabath9626
    @varunprabath9626 5 лет назад +49

    Who’s watching in 2019, this song can be watched even in 2099 also

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 лет назад +113

    சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே, நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே, நின்றது போல் நின்றாள், நெடுந்தூரம் பறந்தாள், நிற்குமோ ஆவி, நிலைக்குமோ, நெஞ்சம், மணம் பெறுமோ வாழ்வே.., ஆ.., ஆ.., ஆஆஆ.., செந்தமிழ், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, ஓஓஓ..ஓ.., ஆ.., ஆ.., ஆஆஆ.., ஆஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.., காற்றினில் பிறந்தவளோ, புதிதாய்க், கற்பனை வடித்தவளோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, செவ்வந்திப் பூச்சரமோ, சேற்றினில் மலர்ந்த, செந்தாமரையோ, ஓஓஓ.., செவ்வந்திப் பூச்சரமோ, அவள், செந்தமிழ்த் தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, கண்களில் நீலம், விளைத்தவளோ, அதைக் கடலினில், கொண்டு கரைத்தவளோ, பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., பெண்ணுக்குப் பெண்ணே, பேராசை கொள்ளும், பேரழகெல்லாம் படைத்தவளோ.., அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, ஓஓ..ஓ.., மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ, விண் விண்களை மலராய் அணிந்தவளோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, மோகத்திலே, இந்த உலகம் யாவையும், மூள்கிடச் செய்யும், மோகினியோ, அவள் செந்தமிழ்த், தேன் மொழியாள், நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள், நிலாவெனச் சிரிக்கும், மலர்க் கொடியாள், பைங்கனி இதழில், பழரசம் தருவாள், பருகிடத் தலை குனிவாள், - Senthamizh Then Mozhiyal - MOVIE:- MAALAYITTA MANGAI (மாலையிட்ட மங்கை)

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 4 года назад +12

    படம்: மாலையிட்ட மங்கை
    சில்லென்று பூத்த சிறுநெருஞ்சி காட்டினிலே
    நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
    நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
    நிற்குமோ நெஞ்சம் நிலைக்குமோ ஆவி மனம் பெறுமோ வாழ்வே
    செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
    காற்றினில் பிறந்தவளோ புதிதாய் கற்பனை வடித்தவளோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ செவ்வந்தி பூச்சரமோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீளம் விழைத்தவளோ
    அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
    கண்களில் நீளம் விழைத்தவளோ
    அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்
    பேரழகெல்லாம் படைத்தவளோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
    மேகத்தை கூந்தலில் முடித்தவளோ
    விண்மீன்களை மலராய் அணிந்தவளோ
    மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
    மோகத்திலே இந்த உலகம் யாவையும் மூழ்கிட செய்யும் மோகினியோ
    அவள் செந்தமிழ் தேன்மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழில் பழரசம் தருவாள் பருகிட தலை குனிவாள்

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 7 лет назад

    IM just 22 old, எல்லா பழைய பாடலும் ரொம்ப அருமையா இருக்கு, ஒருமுறை என் கல்லூரி நிகழ்ச்சியின் போது T. R. மகாலிங்கம் அவர்களின் மகன் இந்த பாடலை மேடையில் பாடினார், அப்படியே அவர் தந்தையின் குரல்

  • @cidsankars3831
    @cidsankars3831 8 лет назад +105

    எனக்கு பழைய பாடல் என்றால் ரொம்ப பிடிக்கும் இதுபோன்ற நடை உடை நடனம் நம்மை பரவசத்திற்கு உள்ளாக்கும் பாடல்

  • @jsatcm9158
    @jsatcm9158 4 года назад +4

    எங்கள் ஊரில் திருமண விழாக்களில் பாடகூடிய முதல் பாடல்

  • @kannadhasan185
    @kannadhasan185 4 года назад +4

    Thank s to god to make me born as grandson of kaviarasu Kannadasan who produced this movie penned all the song and also to introduce the great versatile actor Manoramma 🙏🏽

  • @sravindran6379
    @sravindran6379 6 лет назад +2

    அழகு தமிழில் வரிகளும் குரலும் அருமையான இசையில்...

  • @remash521
    @remash521 4 года назад +1

    எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.... இதை கேட்கும் பொழுது என் தாத்தாவின் ஞாபகம் வருகிறது....😭😭

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 10 месяцев назад +2

    மனதை மயக்கும் பாடல் இசை நடனம் கேட்க கேட்க பரவசம்

  • @revathybalan5181
    @revathybalan5181 Год назад +8

    It's 2022 and I'm watching with my 1 year old daughter who's addicted to this song ❤️🥰

  • @ramsathya7038
    @ramsathya7038 4 года назад +2

    என்ன ஒரு இசை என்னா வரி மற்றும் குரல் வளம் எம் மொழி தமிழ்

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад +14

    2022/12/9 பார்பவர்கள் லைக் செய்யுங்கள்

  • @varadarajandharmalingam7166
    @varadarajandharmalingam7166 2 года назад +5

    1958- ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் T.R.மகாலிங்கம் அவர்கள் சொந்த குரலில் தேனுடன் கலந்து தேவாம்ருததமிழில் பாடியுள்ள பாடல் வரிகள் தமிழ்மொழி மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலுடன் இருக்கின்றார்கள்.🙏🙏🌹🌹😀😀👏👏👍👍

  • @user-ol7oi8ku6f
    @user-ol7oi8ku6f 4 года назад +2

    T.R.மகாலிங்கத்திற்கு இணையான புல்லாங்குழல் இசை

  • @jaswinderahluwalia
    @jaswinderahluwalia 8 лет назад +75

    Someone wrote here
    .he listens to this song the whole time..how true
    .its magical..somewhat mystical..i cant get it out of my head for hours
    Such was the genius of the music writers and poets
    they thought alike and created art as if two artists began painting a picture existing only in their heads eventualy producing a masterpiece
    What we have now in the music world is trash..nothong anywhere near to these works of art
    no lasting effect ..just noise
    These are jewels for all time

    • @LogeshwaranM
      @LogeshwaranM 7 лет назад +12

      jaswinder ahluwalia How beautifully you have said it! iam a 80's born but i love these kind of song! sheer bliss! the future generation will wonder about this creation! Truly a master piece which cannot be recreated by anyone at all 😊

    • @gogulanjaver1819
      @gogulanjaver1819 7 лет назад +2

      p susilasongs
      .....

  • @kumaresht176
    @kumaresht176 4 года назад +1

    Senthamizh thenmozhiyal nilavena sirikum ....nice lines...💖💖💖💖🥰🥰🥰

  • @mirrorflame1988
    @mirrorflame1988 8 лет назад +53

    70 years later it's still an amazing song! Dancing to the tune again!

  • @shanmugamsaravana834
    @shanmugamsaravana834 5 лет назад +2

    இன்றைய இளைய தலைமுறையினர் கூட கேட்டு ரசிக்கும் இனிமையான பாடல்

  • @SakthiVel-gp8tn
    @SakthiVel-gp8tn 5 лет назад +36

    இந்த பாடலுக்காக என் உயிரையும் கொடுப்பேன்

  • @VASANTHAKUMARI-ls6ft
    @VASANTHAKUMARI-ls6ft 2 месяца назад

    குரலும் - இசையும் எவவளவு அருமையாக உள்ளது

  • @RJagan-qz5xp
    @RJagan-qz5xp 5 лет назад +147

    Who is watching 2019?...❤

  • @SLC444
    @SLC444 2 года назад +11

    தமிழ் மொழியின் இனிமையை விளக்கும் பாடல்.

  • @kalaiveera8470
    @kalaiveera8470 4 года назад +2

    என்தமிழ் வரிகள்..
    தெறிக்கும் தேன்துளிகள்!

  • @michaelmicky120944
    @michaelmicky120944 6 лет назад +4

    தமிழால் மட்டுமே மனதை மயக்க ச்செய்யமுடியும் , தேனாக காதில் பாயும் இனிய குரலுடன்,அருமை

    • @waterfalls8363
      @waterfalls8363 5 лет назад

      Unmai nanbaray tamilku eedu inai indha uzhagil endha mozhiyum illai vazhga tamil

  • @ponnusamy1122
    @ponnusamy1122 Год назад +5

    Excellent very very super songs 🎵 👌 👏 🙌 👍 ❤️

  • @haneeshruby3280
    @haneeshruby3280 10 лет назад +22

    its nice just not because its old but it has something very very unique.BEST SONG FOREVER.

  • @aruleniyan1184
    @aruleniyan1184 4 года назад +2

    இது தான் மாஸான பாட்டு

  • @balakrishnanganesh2800
    @balakrishnanganesh2800 4 года назад +3

    Any time I want to recharge myself between hectic work or meetings I hear this song. What a blend of melody in song with clear diction with excellent background beat which makes you feeling dancing while you are listening proud to be a tamizhmagan

  • @manickarajm.manickarajanad9984
    @manickarajm.manickarajanad9984 8 лет назад +84

    டீ ஆர் மகாலிங்கத்தின் குரலுக்கும் இசைக்கும் பொருத்தமான பாடல் .

  • @surilux3390
    @surilux3390 5 лет назад +1

    இனிமையான பாடல்,
    சிறப்பான பாடல் வரிகள்,
    மதி மயக்கும் இசை.

  • @r.ranjithkumar2765
    @r.ranjithkumar2765 6 лет назад

    எத்தனை புதிய பாடல் கேட்டாலும் இது போல் ஒரு பாடல் கேட்டால் மந்திரிக்கும் அமைதி கூடுகின்றது..

  • @somusundaram8029
    @somusundaram8029 4 года назад +1

    செந்தமிழ் தேன் மொழியாள் என்னும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @gowthamanduraisamy7715
    @gowthamanduraisamy7715 5 лет назад

    சிறிய வயதிலிருந்தே இந்த பாடலின்மேல் ஏதோ ஒரு என்னை அறியாமல் ஈர்ப்பு
    🌺🌺செவ்வந்தி பூச்சரமோ🌸🌸

  • @arulkumar446
    @arulkumar446 4 года назад +1

    சேற்றினில் மலர்ந்த செந்தாமரையே செவ்வந்தி பூச்சரமோ....amazing lines

  • @vasanthgb5149
    @vasanthgb5149 4 года назад +1

    கொரானா காலத்தில் இந்த பாடலை கேட்கிறேன் தேன் கலந்த குரலில்

  • @raseenadventure92
    @raseenadventure92 6 лет назад

    My all time favourite song.காலத்தால்‌. அழியாத தெய்வீக பாடல்.

  • @kamaliyahmajeed4634
    @kamaliyahmajeed4634 11 лет назад +63

    My father sings this song exactly like the singer...

  • @vijicha8311
    @vijicha8311 4 года назад +2

    கவியரசு கண்ணதாசன் ஐயா.... தமிழ்

  • @jithenderkumarr6063
    @jithenderkumarr6063 3 года назад +15

    Anyone listening in 2021? Give thumbs up!

  • @rkeaswar4552
    @rkeaswar4552 4 года назад +3

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @lakshmikanthan7231
    @lakshmikanthan7231 7 лет назад +31

    மேகத்தை கூந்தல் முடிந்தவலோ விண் மீன்களை தலையில் அணிந்தவலோ👌👌

  • @jshanthi4645
    @jshanthi4645 Год назад +4

    Song super very very super mainavathi dence arumai padal kettu kondu irukka venum endru irukkum avlo arumaiyana padal thukkam thanaa varum inimaiyana padal by j shanthi

  • @thilaharmanoharan6605
    @thilaharmanoharan6605 6 лет назад +1

    A lover sing the song by explaining her all beautiful activities in front of her, while she is dancing to his love song.....So nice....

  • @r.skumar4837
    @r.skumar4837 7 лет назад +78

    இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @krishnavenipalanisamy8600
    @krishnavenipalanisamy8600 4 года назад +19

    Watching this song in November 2019

  • @mohanlakshmanan2228
    @mohanlakshmanan2228 6 лет назад +1

    It is one the masterpieces of T.R.Mahalingamji and one can feel the depth of the song by his melodius voice. Shri. TRM was a magician who was capable of giving life for even empty words.

  • @SivaKumar-vf2li
    @SivaKumar-vf2li 2 года назад +12

    இந்த பாடலை வேறு மொழிகளில் பாட முடியுமா

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 Год назад +2

    Iam 61years old l Like very much this old song.T.R.M .

  • @aspirantsdoubts6275
    @aspirantsdoubts6275 5 лет назад +2

    இந்த தமிழை காதலித்து சாக வேண்டும்........

  • @ilangovand3159
    @ilangovand3159 7 лет назад +4

    Outstanding music and excellent picturisation of the dance with wonderful choreography excelled by the dancers

  • @ak.p.440
    @ak.p.440 4 года назад +4

    மிகவும் அற்புதமான பாடல்

  • @mahendranr7722
    @mahendranr7722 5 лет назад

    காலத்தை வென்ற தமிழும்; இசையும் அருமை.👌👌👌

  • @manjulasethuraj3561
    @manjulasethuraj3561 6 лет назад

    மனதை மயக்கும் சக்தி எம் தமிழுக்கும் இசைக்கும் மட்டுமே உண்டு...

  • @VijayavelMama
    @VijayavelMama 10 лет назад +226

    சில் என்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே
    நில் என்று கூறி நிறுத்தி வழி போனாளே.
    நின்றது போல் நின்றாள்.
    நெடும் தூரம் பரந்தாள்
    நிர்க்குமொ ஆவி
    நிலைக்குமொ நெஞ்சம்
    மணம் பெருமொ வாழ்வே
    அஹ் ஆஆ ஆஆஅ ஆஆஅ ஆஆஅ
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழின் பழ ரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    காற்றினில் பிரந்தவளொ
    புதிதாய் கற்பனை வடிதவளொ
    அஹாஅ ஆஆஅ...
    காற்றினில் பிரந்தவளொ
    புதிதாய் கர்பனை வடிதவளொ
    செற்றினில் மலர்ந்த செந்தாமரையொ
    செவ்வந்தை பூ சரமொ அவள்
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியால்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழின் பழி ரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்
    கண்களில் நீலம் விளைதவளொ
    அதை கடலினில் கொண்டு கரைதவளொ
    பெண்ணுக்கு பெண்ணே பெராசை கொள்ளும்
    பெரழகெல்லாம் படைதவளொ அவள்
    செந்தமிழ் தேன் மொழியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
    பைங்கனி இதழின் பழ ரசம் தருவாள்
    பருகிட தலை குனிவாள்

  • @thennilavan9318
    @thennilavan9318 4 года назад

    அருமையான பாடல்
    By
    தேன்நிலவன்

  • @subburajp2963
    @subburajp2963 2 года назад +5

    என்றும் மறக்க முடியாத இனிமையான பாடல்

  • @kailaivasankananathan622
    @kailaivasankananathan622 8 лет назад +28

    This beautiful song was written by Kannadasan .He once said that he wanted to produce a film fully relying on his writing skills and produced this film.The hero Mahalingam was out of the film industry and in poverty at that time.After this film Mahalingam enjoyed a second innings in the film industry.

  • @sanginandha936
    @sanginandha936 5 лет назад +1

    Indha song ku na 2nd std padikum podhu dance aadine in 2005🤗🤗 golden memories

  • @muneeswaranc897
    @muneeswaranc897 4 года назад +2

    செந்தமிழ் 💙அழியாது அது‌‌ போல் ‌இப் பாடலும் அழியாது 🌟🌟💯💯

  • @jmgabriel99
    @jmgabriel99 9 лет назад +5

    When I heard this song for the 1'st tine I was just a baby, half a century later it gives me the same fresh & meaning full feeling, The natural beauty & the handsomeness has no boundary for this film stars, That gives the world even now. May them r,i,p.

  • @alphalabs1
    @alphalabs1 8 лет назад +24

    I'm speechless!When this song was first aired I wouldn't have born... so my first listening would have been so early in my life and it is now 30+ years, and still fresh in my mind and I can still listen to this late in the night , early morning, mid afternoon, driving,, thinking etc etc... Never again we can ever see a rendering like this and this song is future-proofed for generations to come!!!Get on with this and keep listening.. enjoy!!

  • @ragupathynarayan4160
    @ragupathynarayan4160 Год назад +8

    This great song by Kannadasan in his own production was to give a new lease of acting life to T R Mahalingam and was debuted by the great Manorama

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 7 лет назад +1

    கே.ஆர ராமசாமி அவர்கள்
    படித்துப் பாடும் பாடல்
    சில்லென்று பூத்த சிறு
    நெருஞ்சி காட்டினிலே
    சில்லென்று கூறி
    நெடுவழி போனாளே
    நின்றது போல் நின்றாள்
    நெடுந்தூரம்.பறந்தாள்
    நிற்குமோ ஆவி
    நிலைக்குக்மோ நெஞ்சம்
    மனமே பெருகுமே வாழ்வே
    செந்தமிழ் தேன் மொழி யாழ் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    பைந்தமிழ் இதழில்
    பழரசம் தந்து பருகிட
    தலைகுனிவாள்
    அவள் செந்தமிழ் தேன் மொழி யாழ் நிலாவென
    காற்றினில் பிறந்தாளோ
    புது கற்பனை மில்
    வளரநதாளோ
    சேற்றினில் பிறந்த
    செந்தாமரை
    செவ்வந்தி பூச் சரமோ
    அவள். செந்தமிழ் தேன் மொழி யாழ் நிலாவென
    சிரிக்கும் மலர்க் கொடியாள்
    நிலா....... இந்த பாடல் மிக
    பெண்களை வர்ணிக்கப்படும் இந்த பாடல் மிக வரவேற்கத்தக்கது சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது சயன் கிழக்கு கோலி வாடா பம்பாய் 22 வஸ்ஸலாம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +6

    அருமை 👸

  • @BalasubraManian-pk7nt
    @BalasubraManian-pk7nt 4 года назад

    பைங்கனி இதழில் பழ ரசம் தருவாள்...அடடா சூப்பர்

  • @rajanduraiswamy3372
    @rajanduraiswamy3372 3 года назад +7

    .
    காலத்தால் அழிக்க முடியாத அமுதகானம்

  • @ThirukkoshtiyurVembu
    @ThirukkoshtiyurVembu 6 лет назад

    அழகான -தித்திக்கும் -பாடல் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Год назад +4

    🌺 Arumai 👌👏👏👌Old is gold👏👏👌💐💐🙏

  • @HC3H3HUB
    @HC3H3HUB 6 лет назад

    எளிய மிக மிக இனிமையான தமிழ்ப்பாட்டு💐💐💐💐💐💐💐

  • @selvam527
    @selvam527 2 года назад +6

    My...favorite song I'm in seeing...9.9.2022...I'm 90k my favorite song in all time

  • @muneeswaran5306
    @muneeswaran5306 5 лет назад

    என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு கேட்கவே இனிக்குது.

  • @jayachandran1212
    @jayachandran1212 11 лет назад +2

    இணிமையான பாடல் ஒவ்வொரு வரிகளும் இணிமை

  • @ssmtech3107
    @ssmtech3107 4 года назад +2

    மிக மிக அருமையான பாடல்

  • @sureshung2371
    @sureshung2371 5 лет назад +6

    No words composing another level

  • @sundararajangr6703
    @sundararajangr6703 9 лет назад +2

    Another viswanathanRamamurthy's melodious tune.sung beautifully by T.R.Mahalingam.Look at the range of the voice,going highpitch effortlessly.We are fortunate we had such artistes

  • @sundramkpsundram8799
    @sundramkpsundram8799 5 месяцев назад

    பாடலும்நடனமும்சாகாவரம்பெற்றவை

  • @pandurvk1
    @pandurvk1 4 года назад +1

    What a wonderful beautiful rendering and what a great composition and what a nice 👍 performance!
    Hats 🧢 🎩 off to everyone
    🇮🇳🌺🙏🇮🇳🌺🙏👋👍🇮🇳🌺🙏👋👍🇮🇳🌺🌺🙏🙏🙏🌺👍👋👍🇮🇳🌺🌺🇮🇳🌺🙏

  • @geethamega7297
    @geethamega7297 4 года назад

    என்ன அருமையான பாடல் வரிகள்.....❤❤❤❤❤