பொங்கல் கரும்பு அறுவடை பணிகள் | Pongal Special 2025 | Pongal Karumbu
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடைப்பணிகள் வெகு மும்முரம் அடைந்துள்ளது. வழக்கத்தை விட இந்தாண்டு திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் அதிக ஏக்கரில் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடப்பது வழக்கம் மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதில் முக்கிய இடத்தை பொங்கல் கரும்பு பிடிக்கிறது.
பொங்கல் கரும்புகள் வழக்கமாக ஏப்ரல் கடைசி வாரம் மற்றும் மே மாதங்களில் நடவு செய்யப்படும். காரணம் இந்த காலக்கட்டத்தில் நடவு செய்தால் தான் ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதனால் தான் ஏப்ரல் கடைசி வாரத்தில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பொங்கல் கரும்புகள் நடவுப்பணிகள் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாக 50 ஏக்கர், 80 ஏக்கரில் மட்டுமே பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.