தேனி மலை மாடுகள் வரலாறு | Theni Malai Madu Histroy | Part 01| Hello Madurai | App | TV | FM | Web

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025
  • ஹலோ மதுரை நேயர்கள் அனைவருக்கும் வணக்கம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைக்கு நாம் பார்க்க போகும் வீடியோ தேனி மலை மாடுகளைப் பற்றிதான். பார்ப்பவர்களை ஈர்க்கும் வண்ணமும், புள்ளி மானைப் போன்று உடல் முழுக்க அழகிய புள்ளிகளும், விதவிதமான நீளத்தில் கொம்புகள், சீறிப் பாயும் வேகம், மலைபோல் வளர்ந்திருக்கும் திமில் என தேனி மலை மாடுகளின் அழகைப் பற்றி வர்ணித்துக் கொண்டே போகலாம்.
    வெறும் அழகிற்கு மட்டுமா ? இல்லை வேகத்திலும், வலுவிலும் இந்த மாடுகளுக்கு தனி இடம் உண்டு. ஏனெனில் இது தன் வாழ்நாளில் 90 சதவீதம் அப்பகுதியில் உள்ள மலைகளில் கழிக்கின்றது. அதிலும் மேக மலையில் வளம் வரும் மாடுகளின் கூட்டத்தை பார்க்க பார்க்க பரவசம் தீராத ஒன்று. இன்றைக்கு இந்த மாடுகளின் மீது நல்ல மரியாதை இருப்பதற்கு, அதற்கு அந்த காலத்தில் மலையில் ஒரு வேளை மட்டும் உணவை உண்டு, இதை கட்டிக் காத்த இதன் முன்னோர்களே முக்கிய காரணம். அவர்களுக்கு எத்தனை முறைகள் நாம் நன்றிகளைக் கூறினாலும் ஈடாகாது. தேனி மலை மாடுகள் பற்றி கூற வேண்டும் என்றால், மலைபோல் பெரியது, இந்த வீடியோவில் சிறு புல் அளவு கூறுகின்றேன்.
    ஒரு காலத்தில் இலட்சக் கணக்கில் இருந்த இந்த வகை மாடுகள் இப்பொழுது பதிணைந்தாயிரத்திற்கும் கீழ் உள்ளது என்பது வேதனைக்குரிய உண்மை. இதற்கு என்ன காரணம் என்று நாம் எல்லோருக்கும் தெரியும் ஜல்லிக்கட்டு தடைக்கு பிறகு இதை வளர்த்தவர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துவிட்டது. சரி, அதற்கு முன்னதாக இதன் சிறப்புகளை ஒரு பார்வை பார்ப்போம்.
    கூடலூர், கம்பம், போடி, பெரியகுளம், நாராயணத் தேவன்பட்டி, கே.கே.பட்டி, எரசக்கநாயக்கனூர், முத்தம்பட்டி, ஓடம்பட்டி, சுருளிபட்டி, அய்யம்பட்டி, ராயப்பன்பட்டி உள்பட மலையடிவாரப் பகுதிகளைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிகளவில் மலை மாடுகள் எனப்படும் நாட்டு மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேற்கு தெடர்ச்சி மலையடிவார கிராமங்களில் இதன் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தேனியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படும் அனைத்து மாடுகளும் மலையில் மேய்ச்சலுக்குச் செல்வதால் மலை மாடுகள் என்று அழைக்கப்படுகிறது.
    இதில் சின்னமனூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் மாடுகள் அத்தனையும் மேகமலையில் மேய்ச்சலுக்கு மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேகமலை மட்டுமின்றி தேனியைச் சுற்றியுள்ள மலைகள் அனைத்திலும் கூட்டம் கூட்டமாக இம்மாடுகள் தங்களுக்கான உணவை தேடிக் கொண்டு வாழும் குணமுடையது. இங்கு மேய்ச்சலுக்கு மாடுகளுக்கு பிரிட்டிஷ் காலத்தில் இருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    இந்த இனத்தில் கரும்போர், செம்போர், எனக் கூடிய உடம்பில் வண்ணமுள்ள மாடுகள் காணப்படுகிறது. இந்த வண்ணங்கள் வேறு எந்த மாடுகளிலும் பார்க்க முடியாது. இதற்காகவே இந்த மாடுகளை பலரும் வாங்குகின்றனர். அந்த காலத்தில் இந்த மாடுகள் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்தியது இல்லை. மலையில் வசிக்கும் மாடு என்பதால் ஏர்உழவுக்கும், ரேக்ளாரேஸ்க்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். முக்கியமாக ரேக்ளாரேஸ் போட்டிக்கு தேனி மலை மாடுகளை அடித்துக் கொள்ளவே முடியாது. ஏன் என்றால் ஒரு நாளைக்கு இந்த மாடுகள் மலையில் 100 கி.மீ வரை மிகச் சாதாரணமாக பயணப்படும். ஆதலால் இதன் வேகம் மற்ற மாடுகளை விட மிக மிக அதிகம். அதாவது மின்னல் வேகத்தில் சீறிப் பாயும்.
    இங்கிருக்கும் மலைகளில் ஏறுவது என்பது சாதாரண விசயம் அல்ல. சதுரகிரி மலையை போன்று இருக்கும் என்கின்றனர். ஆனால் வழக்கமாக இந்த மலைக்கு செல்பவர்கள் ஒரு மணி நேரத்தில் ஏறி, இறங்கி விடுவார்கள். அதுவே பழக்கமில்லாதவர்கள் சென்றால் ஏறி இறங்க குறைந்த பட்சம் 5 மணி நேரம் ஆகும் என்கிறார்கள்.
    மழை பொழிவைப் பொறுத்து மாடுகள் மலைகளில் தங்க வைக்கப்படுகின்றன. நல்ல மழை பெய்தால் மட்டுமே மாடுகள் மலையில் இருந்து கீழே இறக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஓராண்டு முழுவதும் மாடுகள் மலைகளில் வசிக்கும் என்கிறார்கள். இன்றைக்கு ஆறு மாதங்கள் மலையிலும், ஆறு மாதங்கள் கீழேயும் வளர்க்கபடுகிறது. மழை இல்லை என்றால் மலையில்தான் வசிக்கும். அங்கு அதற்குத் தேவையான அனைத்து உணவுகளும் கிடைக்கின்றது. எப்பொழுதும் வற்றாத நீர் ஊற்று இருப்பதால் தேவையான நீர் கிடைக்கிறது.
    மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் சிலர்பவர்கள் பெரும்பாலும், ஒரு வேளை மட்டுமே அங்கு பொங்கி சாப்பிடுவார்கள். நாட்டு நெல்லி, கனிகள் என மலைகளில் கிடைப்பதை சாப்பிட்டுக் கொள்வது வழக்கம். அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கும் மேல் மலைப் பிரதேசங்களுக்கு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று, அங்கேயே இரவுகளைக் கழித்துவிட்டுத் திரும்பும் வழக்கமும் உண்டு. சிலர் தினமும் காலையில் ஏறி மாலையில் இறங்குவதும் உண்டு. மாடுகளுக்கு நோய்கள் தாக்கப்பட்டால் இன்றளவும் நாட்டு மருந்துகள் மட்டுமே கொடுத்து வருகின்றனர். வட்டமாக சூடு போடும் பழங்ககால மருத்துவ பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.
    இதன் தொடர்ச்சியை வீடியோவில் கண்டு, கேட்டு மகிழுங்கள்.
    நன்றிகள் !!
    _________________________________________________________
    உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
    Hello Madurai M.Ramesh - 95 66 53 1237. (Whatsapp)
    _________________________________________________________
    மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
    💓 App Link: play.google.co...
    💓 Facebook : / maduraivideo
    💓web site : hellomaduraitv...
    💓web site : hellomadurai.in/
    💓web site : tamilvivasayam...
    💓 Telegrame Link: t.me/hellomadurai
    _________________________________________________________

Комментарии • 44

  • @அறிவழகன்11899
    @அறிவழகன்11899 11 месяцев назад +2

    திருச்செங்கோடு மாடு | பாலமாலை மாடு | ஆலம்பாடி | கொல்லிமலை மாடு | தேனி மலை மாடு | வடகரை மாடு | மணப்பாறை மாடு | இருச்சாலி மாடு | புலிக்குளம் |தம்பிறான் மாடு | தென்பாண்டி மாடு | தொண்டைமண்டல குட்டை(அ ) காஞ்சி குட்டை | போன்ற நாட்டு மாட்டு இணங்களின் வரலாறு பற்றி பதிவிடவும்

  • @mayapandeeswaran9014
    @mayapandeeswaran9014 3 года назад +1

    Super bro ❤️❤️

  • @sakthiofficial2070
    @sakthiofficial2070 3 года назад

    Arumaiyana pathivu Anna super 😍😍😍😍😍

  • @poolove8140
    @poolove8140 3 года назад

    Keep doing....all the best....

  • @RaviRavi-ej3rs
    @RaviRavi-ej3rs 3 года назад +1

    நல்ல பதிவு சகோ... அரசு இம் மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு தடையில்லா அனுமதி வழங்கி இவ்வினத்தை காக்க உதவவேண்டும்.. இம் மாடுகள் இயற்கை விவசாயத்தின் ஆணிவேர். எதிர்காலத்தில் இயற்கை விவசாயம் மட்டுமே மனித இனத்தை நோய் இல்லாமல் காக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்..

  • @appasappas7541
    @appasappas7541 3 года назад +2

    Bro rekla race maadukal pathi podunga athanai ootakudiya sarathikalaiyum oru interview podunga

  • @shivsfarm84
    @shivsfarm84 3 года назад

    Arumai nanba

  • @prassannasview2530
    @prassannasview2530 3 года назад

    💥💥💥🤣semma bro

  • @MohanMohan-ep3mn
    @MohanMohan-ep3mn 3 года назад +3

    Anna sumal request theni kombai dog video painnuinga pls aathula pulisaral kombai and Black kombai eerukuthu aatha nala pls 🙏 painnuinga

  • @sivakumarvelusamy1894
    @sivakumarvelusamy1894 3 года назад

    நன்றிகள்

  • @prathapraj2240
    @prathapraj2240 2 года назад +2

    Bro Madhurai Sikkandharsavadi veerapandi Anna kalaigal pathi oru interview eduthu podugha Bro 🙏🙏

    • @hellomadurai
      @hellomadurai  2 года назад +1

      தொலைபேசி எண் ?

  • @appasappas7541
    @appasappas7541 3 года назад

    Super

  • @manivannan5008
    @manivannan5008 3 года назад

    Part 2 ku waiting

  • @prathapraj2240
    @prathapraj2240 2 года назад +3

    Sikkadharsavadi veerapandi Anna ella naatu maadu inam aliyakudathu nu 18 kalaigal valakurar

    • @hellomadurai
      @hellomadurai  2 года назад +1

      தொலைபேசி எண் ?

  • @kavipku4737
    @kavipku4737 3 года назад +1

    Bro ennaku oru kannu kutty vennum vangalamma rompa nal asai bro

  • @munieswaranmunieswaran782
    @munieswaranmunieswaran782 3 года назад

    👍👌🙏🙏🙏

  • @prawanraj8106
    @prawanraj8106 2 года назад

    🙏🙏🙏

  • @thuvarageeshraavanan2207
    @thuvarageeshraavanan2207 3 года назад

    Bro Cumbum puthupatti layu maaduga irruku bro atha u solluga bro

  • @lingaboopathi6159
    @lingaboopathi6159 3 года назад

    காங்கேயம் காளை பற்றிய விடியோ பதிவு potuga brother

  • @mariamamariamma9314
    @mariamamariamma9314 3 года назад

    ஆலாம்பாடி மாடு பற்றி சொல்லுங்கள் மற்று மைசுர் ரக அளிக்கர் மாடு இதனுடன் கலக்கு அவலநிலை பற்றி கூறுங்கள்

  • @Alahu45
    @Alahu45 3 года назад

    ❤️

  • @nigashpvinigashpvi7682
    @nigashpvinigashpvi7682 3 года назад

    Reclarace pativu pothunka bro

  • @govindhangovindhan2733
    @govindhangovindhan2733 3 года назад

    அண்ணா இது எந்த ஊர்ன

  • @time3304
    @time3304 3 года назад

    Bro theni kombai naiya patgi podunga

  • @manojkarthicksriramulu8639
    @manojkarthicksriramulu8639 3 года назад

    Not only theni district..... Remaining dist like virudunagar watrap , settur region, tenkasi and kaniyakumari also have this type of breed... Please include these dist also.

    • @puvin9121
      @puvin9121 10 месяцев назад

      Bro kangeyam madu kangaiyuthula mattuma erukku athu suthi erukkura ellam district laiyum erukku appo atha en kankeyum nu solluranga anga breed ana nala thana.. athu pola tha theni malai madum inga erunthu uruvanathu than

  • @nagendhraakumar9255
    @nagendhraakumar9255 3 года назад +1

    I am having theni malai madu

  • @selvamsvm589
    @selvamsvm589 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vijayvickyoo171
    @vijayvickyoo171 3 года назад

    Ivanga number

  • @alagumalaisk3808
    @alagumalaisk3808 3 года назад

    Avanga contact number kuduga sir

  • @SaranPandi-x9y
    @SaranPandi-x9y 8 месяцев назад

  • @jestinbritto3006
    @jestinbritto3006 3 года назад

    Super

  • @KumarK-jd9rx
    @KumarK-jd9rx 3 года назад +1

    Super