ஏகாம்பரேசனே - பஞ்சலிங்கம் | Egambaresane - Panchalingam | Nithyasree | Amutham Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Egambaresane | Album : Panchalingam | Lord Shiva Song | Singer : Nithyasree Mahadevan | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Amutham Music
    ஏகாம்பரேசனே | இசைத்தொகுப்பு : பஞ்சலிங்கம் | சிவன் பாடல் | குரலிசை : நித்யஸ்ரீ மஹாதேவன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | அமுதம் மியூசிக்
    பாடல்வரிகள் :
    மாவடியில் மண்ணுருவாக வளரும் சர்வேசனே
    மாதுமையாள் நாதனே ஏகாம்பரசனே
    ஏகாபரேசனே ஏகலிங்கனே
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
    ஏகாபரேசனே ஏகலிங்கனே
    சிவ காஞ்சி தவமேற்கும் கங்கேசனே
    கதிரழகின் உதயமாய் காமாட்சி இதயமாய்
    காட்சி கொண்டு ஆட்சி செய்யும் சர்வேசனே
    சங்கர சங்கரனே ஏகாம்பரேசனே
    நிலமாக தலம் வாழும் பூதலிங்கனே
    ஒரு மாமர நிழல் ஓரம் திருமாமணல் உருவாகி
    உமையழைக்க அருள் அளிக்கும் ஏகம்பனே
    ஓரைந்து முகமுடனே மூவைந்து விழியுடனே
    ஓங்கிநின்று தாங்குகின்ற காமபீடனே
    பொறுமையோடு தங்கும் இந்த பூமி நம்மை என்றும்
    புவியான ஈசனே பொறுமையின் ஒரு வரையறையே
    இரு நாழி நெல் கொண்டாய் இமவானின் மகள் என்பான்
    அறம் வளர்க்க தவம் கொண்ட ஏகம்பனே
    ஈசாதி ஈசன் உன்னை இமையோரின் நாதன் உன்னை
    என்றும் மண்ணில் காணும் காட்சி பேறு ஈசனே
    இறுகி நிற்கும் ரூபம் மனம் இளகி நிற்கும் யோகம்
    நீ இறுகி நிற்கும் ரூபம் மனம் இளகி நிற்கும் யோகம்
    ஏகாம்பரேசனே உருகிய மனம்
    தினம் நிறைந்திடும்
    ஏகாம்பரேஸ்வரர்
    மாமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ளமையால் இப் பெயர்பெற்றது ஆம்ரம் என்பது வடசொல், அது தமிழில் வழங்கும்போது, தமிழ் இலக்கணத்திற்கு ஒத்தவாறு மகரத்துக்கு இனமாகிய பகரத்தைப்பெற்று ஆம்பரம் என்று ஆயிற்று. மகரத்தின் பின் ரகரம் தமிழில் மயங்காது. ஆம்ரம் என்பது ஏகமென்னும் சொல்லொடு புணர்ந்து ஏகாம்பரம் என்று (வடமொழி விதிப் படி) ஆயிற்று. ஏகாம்பரம் என்பது ஏகம்பம் என்றும், கம்பம் என்றும் மருவிற்று.
    இது முத்தி தரும் தலங்கள் ஏழனுள் முதன்மை பெற்றது. சூளுறவு பிழைத்ததின் காரணமாகத், திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிய அளவில் இருகண்பார்வைகளும் மறையப் பெற்ற சுந்தரமூர்த்தி நாயனார்க்கு இடக்கண் பார்வையை இறைவர் கொடுத்தருளிய தலம் இது. தல வெண்பாக்களைப் பாடிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார், திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார் ஆகிய நாயன்மார்கள் ஆவர். இங்கு பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் என்னும் மூவரும் பூசித்த இலிங்கங்கள் இருக்கின்றன. அவைகள் முறையே வெள்ளக்கம்பம், கள்ளக் கம்பம், நல்ல கம்பம் என்னும் பெயர்களுடன் விளங்குகின்றன.
    இக்கச்சி ஏகம்பத்திற்கு மாத்திரம் திருமுறைகளில் பன்னிரண்டு பதிகங்கள் இருக்கின்றன. இவை சமயக் குரவர்கள் நால்வரில் மூவரால் பாடப் பெற்றவை. இவ்வூரில் கச்சியேகம்பத்துடன் கச்சி மேற்றளி, கச்சிஓணகாந்தன்றளி, கச்சிநெறிக்காரைக்காடு, கச்சியநேகதங்காவதம் என்னும் தேவாரம் பெற்ற கோயில்களும் கச்சி மயானம் என்னும் ஒரு வைப்புத்தலமும் ஆக ஆறுகோயில்கள் இருக்கின்றன. இவைகளுள் கச்சிமயானம், திருக்கச்சி ஏகம்பத்தினுள் கொடி மரத்தின் முன்னுள்ளது
    Music Download & Streaming
    Apple Music : / panchalingam
    Amazon Music :music.amazon.i...
    Google Play Store :play.google.co...
    spotify :open.spotify.c...
    Wynk Music :wynk.in/music/...
    #Spbalasubramaniyam #Amuthammusic #panchalingam

Комментарии • 41

  • @Santhosh001-cx6ep
    @Santhosh001-cx6ep 4 месяца назад +13

    மனபாரம் அத்தனையும் குறைந்தது இந்த பாடலை கேட்டு❤

  • @maheswarans812
    @maheswarans812 15 дней назад

    எத்தன வாட்டி கேட்டேன் nu therila..😢😢.. அருமை

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st 18 дней назад

    🙏🙏🙏 ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @user-sw5qt2td3w
    @user-sw5qt2td3w Месяц назад +1

    எவலோ துயரம் எத்தனை முயற்சிகள் தோல்விகள் ஆகின எத்தனை துரோகம். எவலோ நன்மை செய்தும் எல்லா இடத்திலும் அவமானம் மட்டுமே மிச்சம்....இந்த பாடலை எதார்தமாக கேட்டேன்...ஒருமுறை பொருள் அறியாமல்....தினமும் பல முறை கேட்கிறேன் பொருள் உணர்ந்து ..காட்சி கொண்டு ஆட்சி செய்யும் சர்வேசனே!! ஏகலிங்கனே???

  • @KAVIGP
    @KAVIGP Месяц назад +1

    கேட்க கேட்க மெய் சிலிர்க்கும் வரிகளும் இசையும் பாடல் அருமை

  • @venkataramankv3320
    @venkataramankv3320 9 месяцев назад +5

    Excellent Excellent Excellent

  • @manavaiboys
    @manavaiboys Месяц назад +2

    Oru time tha intha song ketten ippo daily yum kekka thonuthu

  • @shortfacts3153
    @shortfacts3153 2 года назад +7

    Anybody from kanchipuram

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +3

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏

  • @ramdhas1987
    @ramdhas1987 3 дня назад

    ஒரு முறை கேட்டேன் அடிமை ஆகி விட்டேன்

  • @kavithavinay2323
    @kavithavinay2323 3 года назад +4

    ஏகாம்பரநாதர் திருவடி சரணம்

  • @thamizharasan4856
    @thamizharasan4856 Год назад +2

    Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya

  • @suhisiva8896
    @suhisiva8896 4 года назад +7

    Great voice with great music.

  • @user-qb2ny3oj2y
    @user-qb2ny3oj2y 4 месяца назад +1

    பாடல் வரிகள் மிகவும் அற்புதம்

  • @nandhakumarnandha6449
    @nandhakumarnandha6449 Год назад +2

    om appa ammave potri🥰🌺🤗🙏

  • @mariselvam7763
    @mariselvam7763 7 дней назад

    🥺🥺🥺🥺🥺.. Nilai ila ulagil niye nirantharam

  • @PalaniVel-yf4st
    @PalaniVel-yf4st Год назад +2

    🙏🙏🙏ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @vlalitha4852
    @vlalitha4852 4 года назад +1

    All songs are super bakthi nice songs Super voice singers 🙌🙌🙌

  • @SARATHKUMAR-dp8rz
    @SARATHKUMAR-dp8rz Месяц назад

    Omm namachivaya 🌿🌿

  • @dr.s.muruganandam5197
    @dr.s.muruganandam5197 9 месяцев назад +3

    ஓம் நமசிவாய, ஏகாம்பரேசா...

  • @KsundararajanSundaram
    @KsundararajanSundaram 4 года назад +2

    Akka ungaLugu kotana koti nantri akka

  • @dr.venkatachandru5736
    @dr.venkatachandru5736 Год назад +1

    ஓம் நமசிவாய❤

  • @chingchang5196
    @chingchang5196 2 месяца назад

    Ena voice mam mind blowing no words

  • @madhankumar8080
    @madhankumar8080 2 года назад +9

    Manasuku amaithi tharukinrathu

  • @damojaya9161
    @damojaya9161 2 месяца назад

    Om namasivaya

  • @tharajothi8503
    @tharajothi8503 2 года назад +1

    Great singer....

  • @ajithkumarr3056
    @ajithkumarr3056 Год назад

    Arumaiyana kural

  • @smartsiva8269
    @smartsiva8269 3 года назад +1

    நமசிவாய 🔱

  • @thenmozhimohan2919
    @thenmozhimohan2919 Год назад

    👌👌💐

  • @subhasubha3611
    @subhasubha3611 2 года назад

    Oom namasivaya🙏🙏

  • @malarmalar3980
    @malarmalar3980 2 года назад

    Sivaya nama

  • @sandhiyahema4530
    @sandhiyahema4530 3 года назад +1

    Ringtone inthe song varamathudu

  • @southmusic1370
    @southmusic1370 2 года назад

    👌

  • @sssvragam
    @sssvragam 2 года назад

    அருமை

  • @mrgaming7683
    @mrgaming7683 3 года назад

    👌👌👌👌👌

  • @sheshathiri.r
    @sheshathiri.r Год назад

    Kkkkkkkkkkkkkkkk

  • @anbu.m9522
    @anbu.m9522 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய. 🙏

  • @pavithragovindharaj584
    @pavithragovindharaj584 6 месяцев назад

    Om namasivaya

  • @deepaklatha5485
    @deepaklatha5485 2 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @pavithragovindharaj584
    @pavithragovindharaj584 2 года назад

    Om namashivaya