05th July 2023 | அழைக்கிறார் இயேசு ஆண்டவர் | Holy Mass Entrance Song | வருகை பாடல் | வேளாங்கண்ணி
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- 05th July 2023 | அழைக்கிறார் இயேசு ஆண்டவர் | Holy Mass Entrance Song | வருகை பாடல் | வேளாங்கண்ணி
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
05.07.2023 (புதன்)
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், "அப்போது கடவுள் பையனின் அழுகுரலைக் கேட்டார். ஆண்டவரின் தூதர் வானத்தினின்று ஆகாரைக் கூப்பிட்டு, “ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன? அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார். நீ எழுந்து பையனைத் தூக்கி விடு." என வான தூதர் கூறியதை வாசிக்கின்றோம்.
"ஆண்டவர் கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார் (சீ.ஞா 35: 14)" என்கிறது சீராக்கின் ஞான நூல்.
கைவிடப்பட்ட நிலையில் இருப்போர் அனைவரும் ஆண்டவர் தமது வேண்டுதல்களுக்கு செவி சாய்ப்பார் என தளரா நம்பிக்கைக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 34:9-ல்,
"ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது." என கூறப்பட்டுள்ளது.
இறைவனுக்கு அஞ்சி பாவங்களைவிட்டு விலகி நடப்போருக்கு வாழ்வில் ஒரு குறையும் இராது என்ற உண்மையை உணர்ந்து அதன்படி நாம் வாழ இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இன்றைய புனிதர் புனித ஆன்டனி மரிய சக்கரியா, இறை இயேசு சிலுவையில் அறையுண்டதன் நினைவாக தேவாலயத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பிற்பகல் 3 மணிக்கு தேவாலய மணி அடிக்கும் வழக்கத்தினைக் கொண்டு வந்தார்.
பிற்பகல் 3 மணியான இறை இரக்கத்தின் நேரத்தை நாம் அனுதினமும் தவறாது செபிக்க பயன்படுத்திக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், பாதிக்கப்பட்ட கிறித்துவர்கள் பாதுகாப்பான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.