06th July 2023 Thursday |இன்றைய திருப்பலி வருகை பாடல் | Holy Mass Entrance Song | வேளாங்கண்ணி

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • ஜூலை 6 : பதிலுரைப் பாடல்
    திபா 116: 1-2. 3-4. 5-6. 8-9 (பல்லவி: 9)
    பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.
    ஆண்டவர்மீது அன்பு கூர்கின்றேன்; ஏனெனில், எனக்கு இரங்குமாறு நான் எழுப்பிய குரலை அவர் கேட்டருளினார்.
    அவரை நான் மன்றாடிய நாளில், எனக்கு அவர் செவிசாய்த்தார். - பல்லவி
    சாவின் கயிறுகள் என்னைப் பிணித்துக் கொண்டன. பாதாளத்தின் துன்பங்கள் என்னைப் பற்றிக்கொண்டன; துன்பமும் துயரமும் என்னை ஆட்கொண்டன.
    நான் ஆண்டவரது பெயரைத் தொழுதேன்; ‘ஆண்டவரே! என் உயிரைக் காத்தருளும்’ என்று கெஞ்சினேன். - பல்லவி
    ஆண்டவர் அருளும் நீதியும் கொண்டவர்; நம் கடவுள் இரக்கம் உள்ளவர்.
    எளிய மனத்தோரை ஆண்டவர் பாதுகாக்கின்றார்; நான் தாழ்த்தப்பட்டபோது எனக்கு மீட்பளித்தார். - பல்லவி
    என் உயிரைச் சாவினின்று விடுவித்தார்; என் கண் கலங்காதபடியும் என் கால் இடறாதபடியும் செய்தார்.
    உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். - பல்லவி
    நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
    2 கொரி 5: 19
    அல்லேலூயா, அல்லேலூயா!
    கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அவரே அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

Комментарии •