தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திப்பு..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #annamalai #kallakurichi #rnravi
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
    தமிழகத்தையே பெரும் அதிா்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓய்வுபெற்ற ஐகோா்ட்டு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபா் ஆணையம் அமைக்கப்பட்டு, இச்சம்பவம் தொடா்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
    இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான நிர்வாகிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ சாராய மரணம் குறித்து கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டது குறித்து கவர்னரிடம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் திமுகவிற்கு உள்ள தொடர்பு குறித்தும் கவர்னரிடம் அறிக்கையாக சமர்பித்தனர். மேலும் விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என கவர்னரிடம் அண்ணாமலை வலியுறுத்தி உள்ள்ளார். மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அது தொடர்பான கோரிக்கையையும் ஆளுநரிடம் முன்வைப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது.

Комментарии •