MakkalkuralTv NAVARAGS 50TH PART 11
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- “ஹாஃப் செஞ்சுரி நாயகன்”
நவராக்ஸ் ஸ்ரீதர்!
“வாசமும் இசை- சுவாசமும் இசை” என்று இருக்கக்கூடிய கலைஞர்களில் விரல் விட்டு என்னும் இடத்தில் நிற்பவர்
நவராக் ஸ் ஸ்ரீதர்.
அதன் தாக்கம் தான் “நவராக்ஸ்” பெயரில் இசைக்குழுவை துவக்கி (1974- 75), இன்று 50ஆவது ஆண்டு பொன்விழாவை கண்டிருக்கிறார்.
மயிலை விவேகானந்தா கல்லூரியில் படித்து பிஎஸ்சி பட்டம் பெற்றவர் (1971-74). லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியில் 8-வது கிரேடு இசைக் கலைஞர். கர்நாடக இசையும் பயின்றவர். பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் வரை பாடும் ஆற்றல்
மிக்கவர்.
ஆர்மோனியம் மற்றும்
“ரிதம்” இசைக்கருவிகளை வாசிக்கும் திறமை பெற்றவர்.
ஸ்ரீதரின் 50 ஆண்டு இசைப் பயணத்தில் இவரது மேடையில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பாடாத தமிழ் திரை இசை பிரபலங்களே இல்லை எனலாம்.
தேனி சுறுசுறுப்பு, கனிவோடு கண்டிப்பு, கண்ணியம், சக கலைஞர்களை உற்சாகப்படுத்தி மேடையில் கௌரவித்து அழகு பார்ப்பவர்.
அன்று துவங்கி இன்று வரை நடை -உடை பாவனை மாறாத மனிதநேய பண்பாளர் என்று கலைஞர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஆராதிக்கப்பட்டு வருபவர் “நவராக்ஸ் ஸ்ரீதர்.