வழிகாட்ட வேண்டிய கட்சி ஆக்கிரமிப்பு செய்வதா? ஐகோர்ட் | madurai bench | mullai nagar

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #Partnership மதுரையில் கடந்த ஆண்டு
    அக்டோபர் மாதத்தில் பெய்த கன மழையால் முல்லைநகர், செல்லூர்
    பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள்
    கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    நீர்நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பே வெள்ளத்துக்கு
    காரணம் என தெரிய வந்தது.
    அதைத்தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.
    மதுரை மாநகராட்சியும்
    ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுத்து,
    அங்கு வசிப்பவர்களுக்கு
    நோட்டீஸ் வழங்கியது.
    மதுரை மாநகர் பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய முல்லைநகர் பகுதியில் உள்ள
    ஆக்கிரமிப்பு கட்டடங்களையும்
    அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது.
    அதை எதிர்த்து பலர்
    ஐகோர்ட்டில் வழக்கு போட்டனர்.
    அந்த வகையில் திமுகவைச்சேர்ந்த
    ரவீந்திரன் என்பவரும் ஒரு வழக்கு
    தொடர்ந்தார்.
    மதுரை பி.பி.குளத்தில் தி.மு.க. இளைஞரணி அலுவலகம்
    கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக
    செயல்பட்டு வருகிறது.
    இந்த அலுவலக இடம் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமானது.
    இதற்காக மாநகராட்சிக்கு
    முறையாக
    வரி செலுத்தப்படுகிறது.
    இந்த அலுவலகம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் தான் செயல்படுகிறது என்பதை
    கருத்தில் கொண்டு,
    தி.மு.க இளைஞரணி அலுவலக கட்டடத்தை இடிக்க
    தடை விதிக்க வேண்டும்
    என மனுவில் ரவீந்திரன் கூறியிருந்தார்.
    இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், புகழேந்தி விசாரித்தனர்.
    ஒரு அரசியல் கட்சி என்பது
    பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்து அலுவலகத்தை கட்டி வைத்து செயல்படுவதை ஏற்க முடியாது.
    அதுமட்டுமின்றி ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடிக்கவும் எதிர்ப்ப தெரிவித்து
    வழக்கு போடுவதை ஒருபோதும்
    அனுமதிக்க முடியாது. எனவே,
    கட்சி அலுவலகத்தை இடித்து
    அகற்ற வேண்டும் என
    நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    கட்டடத்தை தாங்களே இடித்துக் கொள்வதாக அப்போது கோர்ட்டில்
    மனுதாரர் தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
    அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
    கட்டடம் இடித்து அகற்றப்பட்டதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய
    மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.
    அந்த வழக்கு மீண்டும்
    இன்று நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
    அப்பொழுது நீதிபதிகள்,
    கோர்ட் உத்தரவின் படி
    கட்சி அலுவலகம் இடிக்கப்பட்டதா?
    என கேட்டனர்.
    அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர்,
    கட்சி அலுவலகம் காலி செய்யப்பட்டு விட்டது; அங்கு எந்த செயல்பாடுகளும் நடக்கவில்லை என தெரிவித்தார்.
    அந்த விளக்கத்தை
    நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
    கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்தி அறிக்கை
    தாக்கல் செய்ய கோர்ட்
    ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ஏன் இதுவரை இடித்து அப்புறப்படுத்தவில்லை?
    என அரசு தரப்பு வழக்கறிஞரை
    கேட்ட நீதிபதிகள்,
    உடனடியாக அந்த கட்சி அலுவலகத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.# #maduraibench #mullai nagar #DMK #Office

Комментарии • 191