நரிக்குடி சத்திரத்தில் சுமார் 250 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டெடுப்பு
HTML-код
- Опубликовано: 2 дек 2024
- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மறையூர் கிராமத்தில் சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ராணி மங்கம்மாள், மருதுபாண்டியர்களின் வரலாற்றுக்கு ஆதாரமாக விளங்கி வரும் மறையூர் அன்னசத்திரம் சிதிலமடைந்து அழிந்து வரும் நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னங்களை அதன் பழைமை மாறாமல் புதுப்பித்து அதனை தமிழக அரசு நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமென தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள் , சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (நவ. 11) தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆகியோர் மறையூர் அன்னச்சத்திரத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுகள் செய்தனர்.
இந்நிலையில் நரிக்குடியில் சத்திரத்திரம் முழுவதும் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அதிகளவில் புதைந்து கிடப்பதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் தகவல்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து நரிக்குடி சத்திரத்தையும் உடனடியாக ஆய்வுகள் மேற்கொள்ள தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து நரிக்குடி சத்திரத்தை விருதுநகர் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் நேற்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.அப்போது நரிக்குடி சத்திரத்தில் புதைந்து கிடந்த சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பழைமை வாய்ந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.அதிலிருந்த எழுத்து முறைகளை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அதில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியானது ஆதிச்சநல்லூர் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டு வந்துள்ளது எனவும், அப்பகுதியில் உள்ள நஞ்சை,புஞ்சை என இரு வகையான நிலங்களை
பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் அவ்வாறு தானமாக வழங்கப்பட்ட நிலங்களில் விளையும் தானியங்களில் மூன்றில் ஒரு பங்கை அன்னதானம் வழங்குவதற்கு வழங்க வேண்டுமெனவும், மேற்படி தானமாக வழங்கப்பட்ட நிலங்களை யாரும் உரிமை கொண்டாடவோ, சொந்தமாக்கி கொள்ளும் நோக்கில் நிலங்களை அபகரிக்கவோ, கொடையளிப்பதை தடுக்கவோ நினைப்பவர்கள் காராம் பசுக்களை கொன்ற கடுமையான பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும் எனவும் கல்வெட்டில் தெளிவாக எழுதப்பட்டிருப்பதாகவும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இதன் மூலம் சத்திரத்தை சுற்றியுள்ள நிலங்களை பலருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது என தெரிய வருகிறது.
மேலும் நரிக்குடி சத்திரத்தை முழுமையாக ஆய்வுகள் செய்ய மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு முறையான அனுமதி பெற்று பின்னர் விரைவில் நரிக்குடி சத்திரம் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுமென தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இந்த நிலையில் நரிக்குடி சத்திரத்தை முழுமையாக ஆய்வுகள் செய்யும் பட்சத்தில் சத்திரத்தில் புதைந்து கிடக்கும் சிற்பங்கள், கல்வெட்டுக்களை போல சத்திரம் குறித்த பல சரித்திர மிக்க வரலாற்று உண்மைகள் அனைத்தும் வெளியாகுமென தொல்லியல் துறை ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட அனைவராலும் உறுதியாக எதிர்பார்க்கப்படும் வகையில் தற்போது முதற்கட்டமாக கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் பல நிலங்களை தானம் வழங்கியது உண்மையென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.