தினம் ஒரு மந்திரம் - திருமூலர் திருமந்திரம் - பாடல் 259
HTML-код
- Опубликовано: 29 янв 2025
- ஓம்
திருச்சிற்றம்பலம்
திருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம்
[காரணாகமம்]
மந்திரம் - 11
அன்புடமை
259-வது பாடல் - பொருள்
சுப ஸ்ரீனிவாசன்
தமிழ் இலக்கியப் பாசறை
துணைச் செயலாளர்
ஆர் எஸ் புரம், கோயம்புத்தூர்.
அனைவருக்கும் தமிழ் இலக்கியப் பாசறை-யின் அன்பான வணக்கம்.
தமிழ்த்தாயின் இரு கண்கள் என்று அழைக்கப்படும் தமிழின் முதன்மையான இருபெரும் நூல்களில் ஒன்று திருமந்திரம் மற்றொன்று திருவாசகம். திருமந்திரம் தமிழின் சா(ஸ்)த்திர நூல். திருவாசகம் தமிழின் (ஸ்)தோத்திர நூல்.
மானுடம், மனிதம், மனிதநேயம் ஆகியவற்றை புறத்தோடு ஒப்புநோக்கி அகத்தை தெளிவுபடுத்த ஒருமகான் மனிதனுக்குச் சொல்லி அந்த மனிதனை தெய்வநிலை அடையும் வழியைக் காட்டுவது திருமந்திரம்.
தெய்வநிலை அடைந்த மனிதன் இயற்கையின் தெய்வீகத்தைப் போற்றிச் சொல்லிய பாட்டை தெய்வமே வந்து எழுதிய நூல் திருவாசகம்.
மனிதன் மனிதனுக்குச் சொல்லிய நூல் திருமந்திரம். மனிதன், தெய்வத்திற்குச் சொல்லிய நூல் திருவாசகம். உலகின் வேறு எந்த மொழிகளுக்கும் கிடைக்காத பெரும்பேறு பெற்ற நூல்கள் இவை இரண்டும். இந்த இரண்டு நூல்களும் தமிழுக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிசம். ஆகவேதான் சைவத்தின் இந்த இரண்டு நூல்களும் தமிழ்த்தாயின் இருகண்களாகப் போற்றப்படுகிறது.
பழந்தமிழில் இயற்றப்பட்ட சொல்லின் பொருளை இன்றைய தலைமுறையும், இனிவரும் தலைமுறையும் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, நமது தமிழ் இலக்கியப் பாசறை, திருமந்திரத்தை தூசு தட்டி கையில் எடுத்துள்ளது.
தமிழ் இலக்கியப் பாசறை-யின் நோக்கம் தமிழை வளர்ப்பது மட்டுமல்ல. நம் தமிழை பாதுகாக்கும் கடமை உணர்வோடு திருமந்திரப் பாடலின் பொருளை எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் இயற்ற முயன்றுள்ளது.
தமிழை வளர்ப்பதும், பாதுகாப்பதும் எங்களைப்போன்ற இலக்கிய அமைப்புகளுக்கு மட்டும்தான் கடமை உள்ளது என்று நினைக்க வேண்டாம். எங்களைப் போன்ற இலக்கிய அமைப்புகளுக்கு உங்களின் அன்பும் ஆதரவும் அன்றாடம் அளிப்பதன் மூலமும் தமிழ் வாழும். ஆதரவு அளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் தமிழ் இலக்கியப் பாசறையின் அன்பு கலந்த நன்றிகள்...
உங்களின் அன்பும் ஆதரவும் வேண்டி...
தமிழ் இலக்கியப் பாசறை
சுப்பு வணிக வளாகம், தடாகம் சாலை, ஆர்.எஸ்.புரம், கோவை - 641002
பொதுச் செயலாளர்
முனைவர். கோவை கிருஷ்ணா
துணை செயலாளர்
சுப ஸ்ரீனிவாசன் - Кино