காரியாபட்டி முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும்.
HTML-код
- Опубликовано: 11 дек 2024
- காரியாபட்டி முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ காலபைரவருக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள கால பைரவருக்கு
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக
திருமஞ்சனம், மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வண்ண மலர்கள் மற்றும் வடை மாலை, எழுமிச்சை மாலை அணிவித்து காலபைரவருக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை, கும்ப தீபாராதனை காட்டப்பட்டது. இதில் காரியாபட்டி முக்கு பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.