அகிலன் துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது,புதிதாக இருக்கும் -Directo Kalyan Krishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #Agilan#Kalyanakrishnan#Jayamravi#
    துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது, அதனால் அனைவருக்கும் இது புதிதாக இருக்கும் என்று கூறினார்கள், ஆனால் அப்படி இல்லை, என்னை சுற்றியுள்ள நிறைய நண்பர்கள் துறைமுகத்தை சுற்றித்தான் இருக்கிறார்கள், அவர்கள் எளிய மக்கள் தான், எனவே படம் பார்க்கும் அனைவரும் தங்களுடன் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளும் ஒரு எளிமையான வாழ்வை சொல்லும் வண்ணம் தான் இப்படம் இருக்கும். இப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார். எல்லா படங்களுக்கும் கேப்டன் இயக்குநர் என்றுதான் கூறுவார்கள் ஆனால் இந்தப் படத்தின் கேப்டன் எங்கள் தயாரிப்பாளர் சுந்தர் தான், என் அனுபவத்தில் நிறைய தயாரிப்பாளர்களை பார்த்துள்ளேன் ஆனால் சுந்தர் அளித்த ஆதரவு நம்ப முடியாத ஒன்று , நான் இதனை கூறுவதற்கான காரணங்கள் நீங்கள் படத்தை பார்த்த பிறகுதான் தெரியும்.
    அதன் பிறகு ஜெயம் ரவி சார், என்னுடைய திரைப்பயணம் என்பது ரவி சாரை சுற்றியே அமைந்துள்ளது, பேராண்மை முதல் இன்று வரை நாங்கள் ஒன்றாய் பணிபுரிந்துள்ளோம். பேராண்மையில் திரைக்கதை, பின் பூலோகம், இப்போது அகிலன், இந்த மூன்று படங்களும் பெரிய கருத்துகளை கொண்ட படம் இந்த மூன்று படங்களிலும் எனக்கு ரவி சாருடன் கிடைத்த அனுபவம் மிகவும் பெரியது ,அதை இன்னும் பல மணி நேரம் கூறலாம், பிரியா மற்றும் தான்யா சிறப்பாக நடித்துள்ளனர், இந்தப் படத்தில் சிராக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சாம் சி எஸ் அருமையாக இசையமைத்துள்ளார். இப்படத்தின் VFX காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளன, படம் வெளியான பின்னர் நீங்கள் இந்த VFX காட்சிகள் பற்றி பேசுவீர்கள், இறுதியாக ஒட்டுமொத்த குழுவுக்கும் இந்நேரத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    Subscribe us for more videos on entertainment and News....
    / @aptnnews24x7

Комментарии •